Pages

Wednesday, November 17, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.11.21

  திருக்குறள் :

குறள் 165:
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.

பொருள்

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும். 


பழமொழி :

who sows thorns will never reap grapes.


 விதை ஒன்று போட்டால் செடி ஒன்று முளைக்குமா?

இரண்டொழுக்க பண்புகள் :

1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன். 

2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.

பொன்மொழி :

எல்லோரையும் நம்புவது ஆபத்து தான். ஆனால் யாரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து! 

- ஆபிரஹாம் லிங்கன்

பொது அறிவு :

1. எந்த ஆற்றங்கரை மீது லூதியானா நகர் அமைந்துள்ளது?

சட்லெஜ்

2. கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய் ______

ஆந்த்ராக்ஸ்

English words & meanings :

Freezing - very cold, அதிக குளிர், 

jubilant - very happy, அதிக சந்தோசம்

ஆரோக்ய வாழ்வு :

பற்களில் மஞ்சள் கறைகளைப் போக்கும் வழிகள்


💂பற்களை வெண்மையாக்குவதில் பேக்கிங் சோடா பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து, தினமும் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.

💂எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து பற்களை தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்கலாம். இதன் மூலமும் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.

💂தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளும் நீங்கிவிடும். ஏனெனில் அதில் இயற்கையாக உள்ள அசிட்டிக் தன்மையானது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கிவிடும்.

💂அனைத்தையும் விட மிகவும் விலை மலிவில் கிடைக்கும் ஒரு பொருள் தான் உப்பு. இந்த உப்பைக் கொண்டு பற்களை தினமும் தேய்த்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் அகன்றுவிடும். அதே சமயம் உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமாக உப்பை பயன்படுத்தினால், அவை ஈறுகளையும், எனாமலையும் பாதித்துவிடும்.

💂தினமும் பற்களை துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் சிறிது சாம்பல் சேர்த்து, பின் பற்களை துலக்கினால், பற்களை வெண்மையாகும். அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் பற்களில் உள்ள கறைகள் அகலும். 

💂இரவில் படுக்கும் போது, ஆரஞ்சு தோலைக் கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு, வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள். இதனை அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது, வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும். 

கணினி யுகம் :

Alt + 0248 - ø.

 Alt + 0223 - ß

நவம்பர் 18

வ. உ. சி அவர்களின் நினைவுநாள்  





வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை[2](V. O. Chidambaram Pillaiசெப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[3] ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது.

நீதிக்கதை

குகையில் தங்கம்

ஒரு காட்டில் ஒரு சாமியார் மூச்சுத்திணற ஓடிக் கொண்டிருந்தார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் ஓடுவதை அருகிலிருந்த மூன்று திருடர்களுக்கு வியப்பை உண்டு பண்ணியது. அவர்கள் சாமியாரைப் பிடித்து வந்து மூச்சுத்திணற ஓடியதன் காரணத்தைக் கேட்டனர். அதற்கு பயத்திலே நடுங்கி நின்ற சாமியார் தன்னைச் சாவு துரத்துவதாகக் கூறினார். திருடர்கள் சாமியாரைப் பைத்தியம் என்று எண்ணினர். அந்த சாவைக் காட்டுமாறு சாமியாரிடம் கூறினர்.

சாமியார் அவர்களை அழைத்துச் சென்று ஒரு குகையைக் காண்பித்தார். அந்த குகையில் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் குகை நிறையத் தங்கம் இருந்தது. தங்கத்தைப் பகிர்ந்து கொள்ள திருடர்கள் எண்ணினர். ஆனால் அவர்களை பசி வாட்டியது. அவர்கள் தம்மில் ஒருவனை உணவு வாங்கி வர அருகில் உள்ள ஒரு நகருக்கு அனுப்பினர்.

அவன் உணவுடன் திரும்பியதும் இரு திருடர்களும் அவனைக் கொலை செய்தனர். ஏனெனில் தங்கம் முழுவதையும் தாங்களே கவர எண்ணினர். உணவு வாங்கி வந்த திருடனோ உணவில் நஞ்சு கலந்திருந்தான். அவனும் மற்ற இருவரைப் போலவே தங்கம் முழுவதையும் தானே அபகரிக்க விரும்பினான். நஞ்சூட்டப்பட்ட உணவு உண்ட திருடர்களும் மாண்டனர். தங்கம் பிழைத்தது. சாமியாரின் வாக்குப்பலித்தது.

நீதி :
பேராசை பெரு நஷ்டம்

இன்றைய செய்திகள்

18.11.21

◆தமிழகத்தில் ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கான விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

◆அதி கனமழை எச்சரிக்கை; 2 நாட்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் கையிருப்பு வைத்துக்கொள்ளும்படி  சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.

◆உலகின் மிக உயர்ந்த சாலை லடாக் சாலை: கின்னஸ் உலக சாதனை.

◆வட தமிழகத்தில் நாளை  மிக அதிகனமழை வரை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

◆அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி உலகின் பெரும் பணக்கார நாடு என்ற அந்தஸ்தை சீனா கைப்பற்றி உள்ளது.

◆உலக ஆண்கள் டென்னிஸ்: ரஷ்யாவின் டேனில் மெட்விடேவ் வெற்றி.

◆இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த், துருவ் கபிலா-சீக்கி ரெட்டி இணை அடுத்த சுற்றுக்கு தகுதி.


Today's Headlines

 * In Tamil Nadu a draft for Teacher's transfer will be drawn by the end of this week.

* On the warning of extremely heavy rain Madras Corporation advised people to keep stock of eatables for 2 days.

* Ladak Road is declared by Guinness Record as the world's highest road.

* In North Tamil Nadu districts there will be the heavy pouring of rain - warning by IMD.

* By pushing down the US in the richest country's list China hit the list and captured first place.

* World Male Tennis - Russian star Danil Metvidev won the match.

*Indonesian Masters Badminton: Kitambi Srikanth, Dhruv Kapila-Sikki Reddy pair qualified for next round.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment