Pages

Thursday, November 11, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.11.21

  திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: தெரிந்து செயல் வகை

குறள் எண் : 469

குறள்:
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

பொருள்:
ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.

பழமொழி :

Crows are never the whiter for washing themselves.


 உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுமா?

இரண்டொழுக்க பண்புகள் :

1. உங்களை அழகாக்குவது
உங்களின் புன்னகை. புன்னகையுடன் இந்நாளை எதிர் கொள்ளுங்கள்.


2. உங்கள் அன்பு உள்ளங்களை வெல்லும் அனைவரிடமும் நேசத்துடன் பழகுங்கள்.

பொன்மொழி :

உங்கள் வார்த்தைகளை சிந்திக்காமல் பேசுவதே இலக்கின் மீது குறி பார்க்காமல் அம்பை விடுவதற்கு சமம் ஆகும்.------ ரமண மகரிஷி

பொது அறிவு :

1. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது? 

கிவி. 

2. போலியோ நோய் வருவதற்கான காரணம் எது? 

போலியோவைரஸ் எனப்படும் வைரஸ்

English words & meanings :

Gallent - brave and heroic, பயமற்ற வீர தன்மையுள்ள,

 petrified - extremely frightened - அதிகம் பயந்த நிலை

ஆரோக்ய வாழ்வு :

சிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை


திராட்சை பழத்தை கொண்டு சிறுநீர் பையில் ஏற்படும் அழற்சி, கட்டிகளை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: திராட்சை பழம், வேப்பங்கொழுந்து, பனங்கற்கண்டு. ஒரு பாத்திரத்தில் 10 திராட்சை பழங்களை போடவும்.

இதை லேசாக நசுக்கவும். இதனுடன் சிறிது வேப்பங்கொழுந்து, பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி எடுக்கவும்.  இந்த தேனீரை காலை, மாலை வேளைகளில் 50 முதல் 100 மில்லி வரை குடித்துவர கல்லீரல், மண்ணீரல், கணையம்,

சிறுநீர் பை ஆகியவற்றில் ஏற்படும் கட்டிகள் கரையும். வலி விலகிப் போகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பன்னீர், பச்சை என அனைத்து வகை திராட்சைகளையும் பயன்படுத்தி தேனீர் தயாரிக்கலாம்.

திராட்சை நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

கணினி யுகம் :

Windows key + Down arrow - Minimize the active program window. 

Windows key + Up arrow - Maximize the active program window.

நவம்பர் 12

உலக நுரையீரல் அழற்சி நாள்

உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) என்பது நுரையீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் ஆண்டு தோறும் நவம்பர் 12 ஆம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும். சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் முதலாவது உலக நுரையீரல் அழற்சி நாளை கொண்டாடின. 2010 முதல் இது நவம்பர் 12 ஆம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகளாவிய அளவில் நியூமோனியா நோய் தாக்கத்தால் ஆண்டுக்கு சராசரியாக 1.6 மில்லியன் பேர் இறக்கின்றனர். 5 வயதிற்கும் குறைந்த 155 மில்லியன் குழந்தைகள் பாதிப்படைகின்றனர். இது எயிட்சுமலேரியா, எலும்புருக்கி நோய் போன்றவற்றினால் இறப்பு ஏற்படுவதை விட அதிகம் என மருத்துவ சங்க குறிப்பு தெரிவிக்கின்றது.


சாலிம் அலி அவர்களின் பிறந்தநாள்... 




சாலிம் அலி (Sálim Ali; நவம்பர் 12, 1896 – சூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சாலீம் அலியின் முழுப்பெயர் சாலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும்.இவர் இந்தியாவில் முதன்முதலில்பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் (Bombay Natural History Society) புரவலராக (patron) விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.

சாலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டவர்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல்சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

“இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan) மற்றும் தன்வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) ஆகிய நூல்கள் சாலிம் அலியின் முக்கிய நூல்களாகும்.

நீதிக்கதை

கிடைத்ததில் சம பங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களும் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால், தெனாலிராமன் இருந்தால் நிகழ்ச்சி நடைபெறாமல் போய்விடுமோ, என எண்ணி தெனாலிராமனை மட்டும் உள்ளே விட வேண்டாமென்று வாயிற்காவலளியிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டார். 

ஆனால் தெனாலிராமன் எப்படியாவது உள்ளே சென்று விடவேண்டும். என தீர்மானித்துக் கொண்டான். உள்ளே செல்ல முற்பட்ட தெனாலிராமனை, வாயிற்காவலளி தடுத்து நிறுத்தி விட்டான். இந்நிலையில் தெனாலிராமன் ஐயா, என்னை உள்ளே செல்ல அனுமதித்தால் என் திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன் என்றான். இதைக் காவலாளி முதலில் சம்மதிக்காவிட்டாலும், பிறகு சம்மதித்துவிட்டான். இதைப் போல் இன்னொரு வாயிற் காப்போனும் சம்மதித்துவிட்டான். 

பிறகு தெனாலிராமன் ஒருவருக்கும் தெரியாமல் உள்ளே சென்று ஓர் மூலையில் அமர்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணன் வெண்ணை திருடி கோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

உடனே தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் அணிந்தவனை கொம்பால் அடித்தான். இதைப்பார்த்த மன்னர் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை ஏன் இவ்வாறு செய்தாய் என்றார். 

அதற்குத் தெனாலிராமன் கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான் என்றான். இதைக் கேட்ட மன்னர், தெனாலிராமன் மீது கடும்கோபம் கொண்டு 30 கசையடி தருமாறு உத்தரவிட்டார். 

இதைக் கேட்ட தெனாலிராமன் அரசே இப்பரிசை எனக்கு தர வேண்டாம். எனக்குக் தர வேண்டியப் பரிசை ஆளுக்குப் பாதியாக, தருகிறேன், என்று நம் இரண்டு வயிற்காப்போன்களிடம் வாக்கு கொடுத்துவிட்டேன் என்றான். 

அதனால் இந்த பரிசை, அவர்கள் இருவருக்கும் சமமாக பங்கிட்டுத் தாருங்கள் என்றான். உடனே மன்னர் அவ்விருவரையும் அழைத்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டாதால் அவர்கள் இருவருக்கும் தலா 15 கசையடி தருமாறு உத்தரவிட்டார்.
நீதி : எவ்வளவு லாபம் கிடைக்கும் எ‌ன்றாலு‌ம் தன் பணியில் நேர்மை தவறக் கூடாது. பண ஆசை எல்லா தீமைக்கும் அடிப்படை எனவே பேராசை படக்கூடாது

இன்றைய செய்திகள்

12.11.21

◆டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

◆வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கியது என்றும் இதனால் சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

◆மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முழுமையாக ஒழிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

◆கரோனா தடுப்பூசிக்குப் பதிலாக மாத்திரை: இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் மாத்திரைக்கு மத்தியஅரசு விரைவில் அனுமதி.

◆பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் இந்தியா 10-ம் இடத்தில் உள்ளது.

◆அமெரிக்கவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தனியார் நிறுவனமான ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையதிற்கு அனுப்பி உள்ளது.

◆ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார் ஒலிம்பிக் நட்சத்திரம் விவேக் சாகர் பிரசாத்.

◆கிரான் கனாரியா படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி : தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நேத்ரா குமணன்.


Today's Headlines

* For the damage of crops due to this heavy rain at Delta Districts honorable CM appointed a committee to survey the losses.

* As the depression started to cross the ocean the red alert given to Chennai is taken back said IMD

* The removal of human excretion by humans itself should be totally banned Supreme Court ordered TN government

* Instead of Injection for Corona India is going to manufacture tablets. Permission will be given soon

* India is in 10th place for the execution of plans for the climatic changes

* USA's NASA sent 4 Austranauts to International Astronomy Unit through the private Space X Organisation

* For the Junior World Championship in Hockey Indian Olympic Star Player Vivek Sahar Prasad leads the team

* In Kiran Canaria Boat Rowing championship race Indian Female player Nethra Kumanan won the gold medal.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment