Pages

Friday, October 29, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.10.21

  திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: தெரிந்து செயல் வகை

குறள் எண்: 461

குறள்:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

பொருள் :
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

பழமொழி :

Do good to those who harm you


பகைவனை நேசித்துப்பார்

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெற்ற உதவிக்கு நன்றி சொல்லுவேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவேன். 

2. இதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து என் வாழ்வில் சிறந்த மனிதனாக விளங்குவேன்

பொன்மொழி :

கண்களை மட்டும் கவருவது அழகு! அன்புடன் கூடிய நற்செயல்கள் மனதையும், ஆன்மாவையும் கவரும். ---- அல்க்ஸாண்டர் போவ்

பொது அறிவு :

1. உலகின் அகலமான நதி எது? 

அமேசான் நதி. 



2. குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது? 

புதன் கோள் (மெர்குரி).

English words & meanings :

Donate - give money to charity or poor people, 

deposit - a sum of money people put in their bank account

ஆரோக்ய வாழ்வு :

கண்களைப் பாதுகாப்பதற்கான குறிப்புகள்

  • இரண்டு தேக்கரண்டி உப்பை ஒரு லிட்டர் இளம் சூடான நீரில் சேர்த்து, கண்களைக் கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
  • ஒரு சிறிய வெந்நிறத்துண்டை, மஞ்சள் நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். கண்நோய் உள்ளவர்கள் அந்த வெண்ணிறத் துண்டுகளைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தல் இவைகள் சரியாகும்.
  • உடல் சூட்டினால் அல்லது கண்ணில் அடிபட்டதாலோ கண் சிவந்து காணப்படுவது உண்டு. இதற்கு புளியம்பூவை அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் கண்கள் சிவப்பது சரியாகும்.
  • மருதோன்றி இலையை அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் கண் சிவப்பு நீங்கும்.
  • நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொண்டால் கண்வலி நீங்கும்.
  • கண் பார்வைத் தெளிவு பெற கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர வேண்டும்.
  • நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
  • மிளகு, சீரகம் இவற்றில் சிறிதளவு எடுத்து பொடி செய்து, எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண்ணிலிருந்து நீர்வடிதல் மற்றும் கண் எரிச்சல் குணமாகும்.
  • பொன்னாங்கண்ணிக் கீரையுடன் நெய்யையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் நரம்புகள் பலப்படும், பார்வை தெளிவடையும்.
  • மல்லித்தழை மற்றும் கேரட்டை தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து தினமும் குடித்துவர கண் நரம்புகள் பலப்படும்.

கணினி யுகம் :

Shift + R - Add rounded box, 

Shift + S - Add segmented line


நீதிக்கதை

 மனித மனத்தின் ஆசை

இந்த உலகத்தையே ஆளுகின்ற அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். தன் குருவிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். குருஜி, மன்னனுக்கு புத்தி புகட்ட விரும்பினார். அவர் அரசனிடம், சொல்கிறேன். அதற்கு முன்பு எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றார். அரசன் ஆவலுடன், சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என்றான். ஒன்றுமில்லை, இந்த செப்புக்குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயாக! என்றார்.

அட! இதென்ன பெரிய விஷயம் என்று எண்ணியபடியே, பணியாளரை அழைத்தான். அவரிடம், பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அவரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினர். குடுவை நிறையவேயில்லை! அது மிகவும் சிறியதுதான். போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. அதுவோ நிறையாமலே இருந்தது.

குருஜி, என்ன அரசரே, இந்த சின்னக் குடுவையை நிறைக்க முடியவில்லையா? என்று கேலியாகக் கேட்டார். மன்னனுக்கு அவமானமாகிவிட்டது. கஜானாவிலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். அனைத்தையும் போட்டாகிவிட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். உடலும் உள்ளமும் ஓய்ந்து போனது.

ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே? என்று கலங்கிப்போய்க் கேட்டான். அரசே, இது மனித மனத்தின் ஆசை என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு? என்றார். மன்னனுக்குப் புரிந்தது. அவன் குருவை வணங்கினான். மனம் தெளிவு பெற்றது.

இன்றைய செய்திகள்

30.10.21

* மேற்கு வங்கத்தில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்கவும், விற்பனை செய்யவும் உயர்நீதிமன்றம் தடை.

* அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளுக்கு பலரும் உதவி செய்வது பெருமையாக உள்ளது. அரசு பள்ளிகளுக்கு உதவ இணையதள பக்கம் உருவாக்க உள்ளோம், அதன்மூலம் உதவலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்ற இடங்களை பார்வையிட்டார்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் .

*  காஷ்மீரில் பனிப்பொழிவால் ஆப்பிள் தோட்டங்களுக்கு ஏற்பட்ட பெரும் சேதத்தை இயற்கை பேரிடராக அரசு அறிவித்துள்ளது. பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட ஆப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். எந்த விவசாய நிலமும் வெளியாட்களுக்கு வழங்கப்படவில்லை, நிலத்தை பாதுகாப்பது அரசின் பொறுப்பு என்று ஆளுநர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

* 11 ஆண்டுகளுக்கு பின்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அணை நிரம்பியதால் இன்று மதியத்துக்குள் அதிப்படியான தண்ணீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* டி20 உலகக்கோப்பை தொடர்:  சார்ஜாவில் இன்று நடைபெற்ற  23-வது லீக் ஆட்டத்தில்  வங்காளதேசத்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட்  இண்டீஸ் அணி ’திரில்’ வெற்றி பெற்றது.

* பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் லட்சயா சென் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Today's Headlines

* The West Bengal high Court banned all types of crackers and their sales.

* Education Minister Anbil Mahesh said, "Government schools are the symbol of pride, not poverty". And also he said "I am proud by the fact that many are helping government schools. So we are going to create a platform for the people who are willing to help the government schools. They can help through this"

* Tamil Nadu CM visited the excavation site at keezhadi

* The damage of Apple Orchards at Kashmir is declared a Natural Disaster by the Government. The government also said the farmers will get the compensation amount for their loss. " No farmland is given to outside people. It is our duty to protect the land" said Governor Sinha Manoj

* After 11 years the Krishnaraja Sahar Dam in Karnataka reached its full capacity of 124.80 feet. As the dam is filled it is expected that there will be the release of water.

*T20 World cup: In the 23rd League Play West Indies won Bangladesh by only 3 runs and gave a thrill to everyone who is watching it.

* In French open Badminton match P. V. Sindhu and Latchaya of India reached the 3rd round.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment