Pages

Tuesday, October 12, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.10.21

  திருக்குறள் :

அதிகாரம்: அறிவுடைமை

குறள் : 423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருள்:
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

பழமொழி :

A hungry man is an angry man.


பசி வந்திடப் பத்தும் பறக்கும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. எப்போதும் நாம் தான் வல்லவன் என்ற
அகந்தையை ஒதுக்கி ..நல்லவனாய் வாழு நாளும் சிறக்கும் நீயும் சிறப்பாய்.

 2. எண்ணம் உறுதியாக உன்னதமாக இருந்தால், எண்ணியபடி உயரலாம்.

பொன்மொழி :

பொறுமை என்பது உயர்ந்தோரின் சாதனை.பொறுமையை விடச்சிறந்த பண்பு கிடையாது. ----ஸ்ரீ சாரதா தேவி

பொது அறிவு :

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எது? 

எறும்பு. 

2. "திரவத் தங்கம்" என்றழைக்கப்படுவது எது?

 பெட்ரோலியம்.

English words & meanings :

Behind the times(Idioms )- old fashioned, 

down the drain - wasted or lost

ஆரோக்ய வாழ்வு :

மணத்தக்காளி கீரையை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் !!


·         * உடலின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன. மணத்தக்காளி கீரையில் இந்த எல்லா சத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன.

·         * மணத்தக்காளி கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

·         * காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் சிறிதளவு மணத்தக்காளி கீரை மற்றும் அதன் பழங்களை சாப்பிட்டு வந்தால் நோயின் கடுமையை குறைக்கும்.

 கணினி யுகம் :

Ctrl + Shift + I - Open the inbox 

Ctrl + Shift + K - Add a new task


நீதிக்கதை

வேப்பமரமும்... சிறுவனும்

வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்து ராமன் அழுது கொண்டிருந்தான். அதைக் கண்ட மரம் தம்பி ஏன் அழறே என்றது. அதற்கு ராமன் எனக்கு யாரையுமே பிடிக்கவில்லை. காலையில் எழுந்ததுமே முதலில் பல் தேய்த்துவிட்டு வா என அம்மா அதட்டுகிறாள். பின் அப்பா காலை எழுந்ததும் படிப்பு. உன் பள்ளிப் பாடங்களைப் படி என்று கண்டிக்கிறார். பின் குளித்து முடித்து பசிக்கலை என்று சொன்னால் அம்மா திட்டி சாதம் சாப்பிடச் சொல்கிறாள்.

பள்ளிக்கு வந்தாலோ பாடம் படிக்கலைன்னும், பாடம் சொல்லிக் கொடுக்கும்போது வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று டீச்சர் திட்டராங்க. எல்லாருமே என்னை நாள் முழுக்க திட்டிக்கிட்டேயிருக்காங்க. எனக்கு யாரையுமே பிடிக்கலை என்றான் அழுது கொண்டே.

வேப்பமரம் என் இலைகளை நீ சாப்பிட்டு இருக்காயா? என்றது. ஓ... இலை மட்டுமா உன் இலை, குச்சி எல்லாமே ஒரே கசப்பு. சாப்பிட்டால் வாந்தி வந்துடும் என்றான் ராமன். ஆனால் பல வியாதிகளுக்கு நான் மருந்தாக இருக்கிறேன்.

நான் கசந்தாலும் பலர் வாழ்க்கையில் இனிமை உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறேன். அது போல் பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வது இப்போது உனக்கு கசப்பாக இருக்கிறது. ஆனால் அந்த கசப்பை ஏற்று அதன் படி நடந்தால் பின் உன்னோட வாழ்க்கை இனிமையாக அமையும் என்றது.

நாமும் நம்முடைய மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி நடந்தால் அனைவராலும் விரும்பப்படுவது அல்லாது மிகவும் சிறந்தவராகவும் ஆவோம்.

இன்றைய செய்திகள்

13.10.21

◆அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பும் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

◆நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

◆மத்திய அரசின் வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை தற்போது தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான கருத்துகள், ஆட்சேபனைகளை பொதுமக்கள் டிச.7-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

◆நாடுமுழுவதும் அக்டோபர் 18-ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் 100 சதவீதம் இயக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

◆ஸ்விஸ் வங்கியில் கருப்பு பணம்முதலீடு செய்துள்ள இந்தியர்களின் 3-வது பட்டியலை ஸ்விஸ் வங்கி இந்திய அரசுக்கு அளித்துள்ளது.

◆தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணிக்கு முதல் வெற்றி.

◆உபேர் கோப்பை பேட்மிண்டன்: காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய பெண்கள் அணி.


Today's Headlines

  🌸The Teacher Selection Board has announced that the deadline for applying for the competitive examination to fill the vacancies including post-graduate teachers in government schools has been extended.

 🌸The Chennai Meteorological Department has forecast heavy rains in the Nilgiris and Coimbatore.

 🌸 Central Government Draft Environmental Impact Assessment Notice has now been published in Tamil.  The public can submit their comments and objections by December 7.

 🌸 The Ministry of Civil Aviation has given permission to operate 100% of domestic flights across the country without any restrictions from October 18.

 🌸Swiss Bank has submitted to the Government of India the 3rd list of Indians who have invested black money in Swiss banks.

 🌸 First victory for the Indian team in the South Asian Football Championship.

🌸Uber Cup Badminton: Indian women's team qualifies for the quarterfinals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment