Pages

Wednesday, October 6, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.10.21

 திருக்குறள் :

அதிகாரம்: கேள்வி

குறள் : 415

இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

பொருள்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.

பழமொழி :

A man of course never wants a weapon.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

யாரிடமும் கடுமையாக ப் பேசக்கூடாது.அப்படிப் பேசினால் நம் சுபாவமும் அவ்வாறாகிவிடும்.நாவை அடக்கினால் தான் நாடி வருவோர் நிலைப்பர்....அன்னை சாரதா தேவி

பொது அறிவு :

1.அதிகமான பரப்புகளை பார்க்க உதவும் ஆடி எது?

குவி ஆடி.

2.பூமியிலிருந்து செயற்கைக்கோள் சென்ற வழியைத் துல்லியமாக அறிய உதவும் விதி எது?

டாப்ளர் விளைவு.

English words & meanings :

Sight - ability to see. பார்க்க முடிதல். 

Site - a location or place. இட‌ம்.

ஆரோக்ய வாழ்வு :

வீட்டில் ஜூஸ் தயாரிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்...!



நீங்கள் வீட்டில் ஜூஸ் போட ஜூஸர் மிக்ஸர் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்த மிக்ஸர் கண்டிப்பாக சூடாக இருக்கக்கூடாது. அதனை உறுதிப்படுத்திய பின்னரே ஜூஸ் போட வேண்டும்.

வீட்டிலேயே ப்ரஷ் ஜூஸ் போட்டு குடிக்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது வெப்பநிலை மட்டுமே. பெரும்பாலானோர், ப்ரஷ் ஜூஸில் ஐஸ் போட்டு குடிப்பதையே விரும்புவர். ஆனால், அது மிகவும் தவறான விஷயம். எப்போதுமே, ஜூஸை சாதாரண வெப்பநிலையில் தான் குடிக்க வேண்டும்.

வீட்டில் தயாரித்த ப்ரஷ் ஜூஸை ஒதுபோதும் ப்ரிட்ஜில் வைக்கவே கூடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். ப்ரஷாக அரைத்த ஜூஸை ப்ரிட்ஜில் வைப்பதன் மூலம் பழச்சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவை குறைத்துவிடும்.

பொதுவாக ஜூஸ் போடும் போது அதில் சர்க்கரை சேர்க்கக் கூடாது. பழங்களில் ஏற்கனவே போதுமான அளவு இயற்கை சர்க்கரை இருக்கும். 

காய்கறி ஜூஸ் குடிப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் அதில் உப்பு அல்லது சுவையை அதிகரிக்க வேறு எந்த மசாலாவையும் சேர்க்கக்கூடாது.

கணினி யுகம் :

Shift + F3 - Change case of selected text. 

Shift + F7 - Activate the thesaurus


நீதிக்கதை

 ஜெகனின் புதுசட்டை


பிரபு என்பவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு கொஞ்சம் முரட்டு சுபாவம். கோபம் அதிகம் உள்ளவன். யாராவது ஒருவரிடம் வம்பு செய்துகொண்டே இருப்பான். அவன் ஆசிரியர் ரவி. பிரபுவை பெஞ்சின் மீது ஏறி நிற்கச் சொன்னார். பிரபு முணுமுணுத்துக் கொண்டே நின்றான். 

ஜெகன் என்பவன் கிளாஸ் லீடர். அவன்தான் என்னைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருப்பான் என்று அவன்மீது கோபமாக இருந்தான். 

பள்ளிக் கூடம் விட்டதும் வெளியே வந்த ஜெகனிடம் டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்ன என்று கோபமாய் கேட்டு அவன் சட்டையைப் பிடித்து ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான். ஜெகன் கீழே விழுந்தான். மீண்டும் அவனைத் தாக்க முயன்றான். 

ஜெகனின் எண்ணம் எல்லாம் கிழிந்து போன தனது ஒரே சட்டையைப் பற்றியே இருந்தது. ஜெகன் செத்துப்போன தனது அப்பாவையும், கட்டிட வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னை படிக்க வைக்கும் தனது அம்மாவையும் நினைத்தான். 

ஜெகன் வெற்று உடம்போடு புத்தகமும் கையுமாய் நடந்து போனது பிரபு மனசுக்கு என்னவோ போல் இருந்தது. 

ஜெகன் ஒருவாரம் பள்ளிக்கு வரவே இல்லை. ஒரு சின்ன குடிசையில் ஜெகனும், அவன் அம்மாவும் வசித்து வந்தனர். அன்று மாலை பிரபு பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஜெகன் கட்டிட வேலைக்கு செங்கல் துக்கி செல்வதைப் பார்த்தான். மெதுவாக அந்த இடத்திற்குச் சென்றான் பிரபு. 

என்னடா ராஜா பள்ளிக்கூடம் போகலையா..... ? வேலைக்கு வந்திட்டே... என்று அங்கு வேலை செய்யும் ஒருவர் கேட்டார். போட்டுக்கறதுக்கு சட்டை இல்லை. புதுசா எடுக்கணும். பணம் வேணும். என்றான் ஜெகன். 

ஓஹோ புது சட்டைய போட்டுக்கிட்டு அப்புறம் பள்ளிக்கூடம் போகப் போறீயா? என்று சிரித்தபடி போனார் அவர். இருந்த ஒரே சட்டையையும் நான் கிழித்து விட்டேன். அவன் எப்படி பள்ளிக்கு வருவான்? என்று மனதுக்குள் நினைத்தான் பிரபு. 

அவனது கோபம். அவனுக்கே பிடிக்காமல் போனது. பிரபு தனது பிறந்த நாளுக்காக அப்பா வாங்கி வைத்திருந்த சட்டையை எடுத்துக்கொண்டு ஜெகன் வீட்டிற்குச் சென்றான். 

உள்ள வாடா என்று அன்புடன் அவனை வரவேற்றான் ஜெகன். என் மீது உனக்கு கோபம் இல்லையா என்றான் பிரபு. வீட்டிற்கு வந்தவர்களிடம் யாராவது கோபப்படுவார்களா? என்றான் ஜெகன். 

கோபத்தில் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று சொல்லி தனது பிறந்தநாள் சட்டையை அவனிடம் கொடுத்தான். 

எனக்கு புதுச்சட்டை ரெடியாகிவிட்டது. உன் அன்புக்கு நன்றி என்றான். பிரபு எவ்வளவோ வற்புறுத்தியும் ஜெகன் வாங்கவில்லை. அடுத்தநாள் புதுச்சட்டையுடன் பள்ளிக்கு வந்த ஜெகனை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் பிரபு. 

நீதி :

முட்டாள்தனமான கோபம் ஆபத்தானது. 

இன்றைய செய்திகள்

07.10.21

◆அஞ்சல் துறையில் இந்தி திணிப்பு முறியடிக்கப்பட்டது; அன்னைத்தமிழுக்கு கிட்டியது வெற்றி: சு.வெங்கடேசன் எம்.பி. 

◆திருச்சியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்தார்.

◆வேளாண் பல்கலைகழகத்தில் சேர்வதற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு: நவம்பர்2-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு.

◆கரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் இயல்புக்குத் திரும்பவும், கற்றல் இழப்பில் இருந்து மீளவும் பல்வேறு வழிமுறைகளை எம்.பி.க்கள், கல்வியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

◆முதுகலை நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் 2022-23ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

◆2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ளது.


◆8-வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் டிசம்பர் 22-ந் தேதி தொடங்கி நடைபெறும் என்று போட்டி அமைப்பு குழு அறிவித்துள்ளது.

◆டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகித் சர்மா. 

Today's Headlines

 🌸 Hindi dumping in the postal sector was thwarted;  Annaitamil won: S. Venkatesh MP

🌸 The Vice-Chancellor of the Central University of Tamil Nadu said that steps are being taken to set up a subsidiary campus of the Central University of Tamil Nadu on an area of ​​about 25 acres in Trichy.

 🌸Extension of the application deadline for admission to Agricultural University: Publication of ranking list on November 2.

 ,🌸 MPs and educationist have suggested various ways for students to return to normal and recover from learning loss, as schools are closed due to corona.

 🌸The changes made in the Postgraduate Need Super Specialty Examination will be implemented from the 2022-23 academic year, the Central Government has said in the Supreme Court.

 🌸The UN predicts that 500 billion people worldwide will have access to water by 2050.  Warned in one of the thesis.

🌸 The 8th Pro- Kabaddi League Series will be held in Bangalore from December 22.

 🌸 Rohit Sharma became the first Indian to hit 400 sixes in T-20 cricket.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment