Pages

Wednesday, September 29, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.09.21

 திருக்குறள் :

அதிகாரம்:கல்லாமை

குறள்:406

உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

விளக்கம்:

படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

பழமொழி :

Good and bad are not due others

தீதும் நன்றும் பிறர் தர வாரா

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொறுமையை விட மேலான தவமில்லை எனவே எப்போதும் பொறுமையாக இருப்பேன் .

2.திருப்தியை விட மேலான இன்பமில்லை எனவே எனக்கு உள்ள பொருட்செல்வம் போதும் என்று இன்புற்று இருப்பேன்

பொன்மொழி :

சரி, தவறு என்பதெல்லாம் அவரவர் வாழும் சூழ்நிலையும் வளர்ந்த விதமும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியதே!
---ஜெயகாந்தன்

பொது அறிவு :

1.ஆய்வகத்தில் உள்ள உயிரியல் மாதிரிகளை பாதுகாக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது? 

எத்தனால்.

2.இறந்த உடல்கள் அழுகாமல் இருக்க பயன்படுத்தப்டும் வேதிப்பொருள் எது?

 ஃபார்மால்டிஹைடு.

English words & meanings :

Clothes - the tailored or ready-made dresses. ஆடைகள். 

Cloth - woven fabric. தைக்க படாத துணி

ஆரோக்ய வாழ்வு :

பருப்பு வகைகளின் நன்மைகள்

1)துவரம் பருப்பு

துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.

2)பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். 

3)பச்சை பயறு

பச்சை பயறு சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமானமடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும்

4)கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும்.

மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

5)மைசூர் பருப்பு

மைசூர் பருப்பின் சிறப்பு புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும்.

உடலில் இரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும்.

கணினி யுகம் :

Esc - Cancel. 

Space bar - Hand access tool

செப்டம்பர் 30:

தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்ட  நாள்




தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாறு 2003, செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் தொடங்குகிறது. இன்று தமிழ் விக்கிப்பீடியாவில் பக்கங்கள் 4,44,421, கட்டுரைகள் 1,41,094, கோப்புகள் 8,040, தொகுப்புகள் 32,79,774, பயனர்கள் 1,95,560, சிறப்புப் பங்களிப்பாளர்கள் 354, தானியங்கிகள் 188, நிருவாகிகள் 34, அதிகாரிகள் 4 என வளர்ந்து நிற்கின்றது. தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தமட்டில் இ. மயூரநாதனின் முன்னெடுப்புக்களே தமிழ் விக்கிப்பீடியாவின் ஆரம்ப வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. தற்போது விக்கிப்பீடியாவில் பயனர்கள் 1,95,560 பேர் புகுபதிகை செய்துள்ளனர். அதில் முன்னிலையில் நின்று பங்களிக்கும் சிறப்புப் பயனர்கள் 354 உள்ளனர். இப்போதைக்கு அனைத்துப் பயனரின் பங்களிப்புடன் தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கை 1,41,094 ஆகும். இதில் சிறப்பு என்னவென்றால் 18% கட்டுரைகள் இ. மயூரநாதனுடையதாகவே இருப்பதே. 2015 ஆம் ஆண்டின்படி மயூரநாதன் எழுதியக் கட்டுரைகள் 4000 எனும் எண்ணிக்கையினை கடந்துச் செல்கிறது. அத்துடன் மயூரநாதன் எழுதும் கட்டுரைகள், எண்ணிக்கையை அதிகரிப்பதனை மட்டுமே நோக்காகக் கொள்ளாமல் காத்திரமானவைகளாகவும் உள்ளன.

பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்





பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day) ஆண்டுதோறும் விவிலிய மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு நாளான செப்டம்பர் 30ஆம் நாள் கொண்டாடப்படும் ஒர் சிறப்பு நாளாகும். ஜெரோம் மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிறார்.


நீதிக்கதை

 வியாபாரியின் கதை


ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான். அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து! மனநிம்மதி போய்விட்டது. 

ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர்! யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான். 

மறுநாளே, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான். 

அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து வியாபாரி, அந்த குருவை வணங்கி, சாமி நான் ஒரு வியாபாரி சம்பாதிக்க சம்பாதிக்க பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. மன நிம்மதி போய்விட்டது. நான் சேர்த்த பணமூட்டையை பெற்றுக் கொண்டு என்னையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாகக் கேட்டான். 

அவன் கீழே வைத்த பணமூட்டையை, அந்தக் குரு எடுத்துக் கொண்டு, திடீரென்று ஓட ஆரம்பித்தார். வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை! அவனும் அவருக்குப் பின்னே ஓடினான். அவன் தன் பின்னால் ஓடிவருவதைக் கவனித்த குரு, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார். வியாபாரியும் அய்யோ, என் பணமூட்டை... ! என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் ஓடினான். 

குரு பணமூட்டையுடன் வெகுதூரம் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் அவரது இடத்திற்கே வந்து பணமூட்டையை அதே இடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் சலனமில்லாமல் அமர்ந்து கொண்டார். 

நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வியாபாரியும் குருவிடம் வந்தான். தனது பணமூட்டை இருப்பதைப் பார்த்து குழம்பிப்போனான். 

குரு அவனைப் பார்த்து மகனே, இன்னும் பண ஆசை உன்னைவிட்டுப் போகவில்லை! அதனால் நீ மீண்டும் வியாபாரம் செய். எனது ஆசிரமத்தில் உனக்கு இப்போதைக்கு இடமில்லை! சென்று வா... ! என்று சாந்தமாக உபதேசம் செய்தார். வியாபாரி தனது பணமூட்டையுடன் ஊர் திரும்பினான். 

நீதி :
அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்.

இன்றைய செய்திகள்

30.09.21

★பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் கற்றல் இழப்புகளை ஈடு செய்ய சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள கற்பித்தல் வாசிப்பு இயக்கத்துக்கு சிஆர்ஒய் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

★குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

★கலைஞர் செம்மொழித் தமிழ் விருதைப் பெற புதுச்சேரி மத்தியப் பல்கலைகக்கழக முன்னாள் பேராசிரியர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

★நாடு முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய உணவுத் திட்டத்தின் பெயர் பிரதமர் போஷான் திட்டம் என மாற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

★2021 ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு (NEET PG) முடிவுகள் வெளியாகியுள்ளன.

★நியூசிலாந்தில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

★சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது.

★பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் உட்பட 4 பேருக்கு பதவி உயர்வு - இந்திய விளையாட்டு ஆணையம் -‘சாய்’ முடிவு.

Today's Headlines

★CROY welcomes the Teaching Reading Movement announced by the Government of Tamil Nadu with a special focus on bridging the students for their learning loss during this pandemic period. 

 ★ The Department of Labor has warned that employing child labor carries a fine and up to two years in prison.

 ★ Two former professors of Puducherry Central University have been selected to receive the kalaingar semozhi award.

 ★ The name of the National Food Program for students in grades 1 to 8 across the country has been changed to the Prime Minister's Boshan Program.  The Union Cabinet has approved an allocation of Rs 1.30 lakh crore for the next five years.

 ★ NEET PG results for 2021 postgraduate medical courses have been released.

 ★ Corona infection is on the rise in New Zealand due to the delta virus.

 ★ Paris Saint-Germain beat Manchester City by 2-0 in the Champions League.

 ★ Promotion will be given for four persons including Paralympic medalist Mariappan said SAI the Sports Commission of India.
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment