Pages

Thursday, September 23, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.09.21

 திருக்குறள் :

அதிகாரம்: அரசியல் 

குறள் எண்:387

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் 

தான்கண் டனைத்திவ் வுலகு. 

பொருள்: வாக்கில் இனிமையும் பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.

பழமொழி :

A drowning man will catch at a straw

நீரில் மூழ்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பசித்தோர் முகம் பார்த்து பகிர்ந்து உண்ண வேண்டும். 

2. பெரியாரின் மனம் பார்த்து மனம் கோணாமல் நடக்க வேண்டும்.

பொன்மொழி :

உங்கள் கால்களால் தான் நீங்கள் நிற்கின்றீர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் .அதுவே உங்களது அடிப்படை முன்னேற்றத்திற்கு ஆணிவேர் ஆகும். --- பரமஹம்சர்

பொது அறிவு :

1.இந்தியாவின் தூய்மையான நகரம் எது? 

இந்தூர்.

2.இந்தியப் பசுமை கட்டிடக் கழகத்திடமிருந்து "பிளாட்டினம்" தரநிலையைப் பெற்றுள்ள இரயில் நிலையம் எது? 

கோயம்புத்தூர்.


English words & meanings :

Park - to place, put or leave. I parked my car. ஒரு இடத்தில் நிறுத்துதல். 

Park - a place set aside for children to enjoy. குழந்தைகள் விளையாடும் இடம்

ஆரோக்ய வாழ்வு :

கெட்ட கொழுப்பிலிருந்து இதயத்தைப் பாதுகாக்கும் ஐந்து உணவுகள்


1)ஹோல் க்ரைன்ஸ் எனப்படும் ஓட்ஸ், தினை, பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் உள்ள பீட்டா குளுகன் உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை அழிக்ககூடிய திறன் கொண்டது. 

2)பீன்ஸ், பட்டாணி, சிவப்பு ராஜ்மா போன்ற பருப்பு வகைகள் புரதச்சத்து வாய்ந்தவை. இதயத்தை பாதிக்கும் ரத்தக் கொதிப்பு, ரத்தக் கொழுப்புக் கட்டிகள் ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டவை. 

3)பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற நட் வகைகளையும் உணவில் சரிவிகித அளவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். நல்ல கொழுப்பை உற்பத்தி செய்யும் தன்மை கொண்ட இவற்றால், இதயத்திற்கும் நலம். நார்ச்சத்து, மினரல்களையும் அதிகம் கொண்ட உணவுப்பொருட்கள் இவை.

4)பூண்டில் இருக்கும் மருத்துவகுணம் உடலின் கொழுப்பை குறைக்கும் சக்தி வாய்ந்தது என்கின்றன அறிவியல் ஆய்வுகள். பூண்டில் இருக்கும் அல்லிசின் என்னும் வேதிப்பொருள், உடலில் காணப்படும் கொழுப்புப்புரதத்தை குறைத்து, இதயத்தைக் காக்கக்கூடியது. 

5)பெரிஸ் எனப்படும் பழவகைகள் நார்ச்சத்து அதிகம் கொண்டவை. சிவப்பு ராஸ்பெரிஸ், இனிப்பு செரி, ப்ளூபெரி, ஸ்ட்ராபெரி ஆகியவை உடலின் கொழுப்பை சமநிலைப்படுத்தக்கூடியவை என்கிறது ஆய்வொன்று. ஆன்டிஆக்சிடண்ட் நிறைந்த இவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது.

கணினி யுகம் :

F5 - Refreshes the current window. 

F6 - Switch Panes in Explorer

செப்டம்பர் 24 :

சிவந்தி ஆதித்தன் அவர்களின் பிறந்தநாள்



சிவந்தி ஆதித்தன் (Sivanthi Adithan) (செப்டம்பர் 24, 1936 - ஏப்ரல் 19, 2013) தமிழ் செய்தி நாளேடுகள் தினத்தந்தி மற்றும் மாலைமலரின் 

உரிமையாளராகவும், முதன்மை தொகுப்பாசிரியராகவும் இருந்தவர்[1]. தினத்தந்தி நிறுவனர் சி. பா. ஆதித்தனார் - கோவிந்தம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகன் ஆவார். கைப்பந்தாட்டத்தில் மிகுந்த முனைப்பு உடையவர். இந்திய கைப்பந்து விளையாட்டு சங்கத் தலைவராகவும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர். 2008ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ விருது இலக்கியம்/கல்வி பிரிவில் வழங்கப்பட்டது.

நீதிக்கதை

உழைப்பின் பயன்

ஒரு விவசாயிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். விவசாயிக்கு வயது அதிகமானதால் இறந்து போகும் நிலையில் இருந்தபோது, தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளுக்கு தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக்கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களிலும் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். 

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் சொல்லிய புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. 

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே! மூவரும் சேர்ந்து தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்து நீர் பாய்ச்சி உரம் போட்டார்கள். ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். 

நீதி :
உழைப்பினால் வரும் பணம் அதிர்ஷ்டம் தரும்.

இன்றைய செய்திகள்

24.09.21

★தீக்காயத்தால் பாதிக்கப்படுவோருக்கு தோல் மாற்று சிகிச்சை அளிக்க வசதியாக மதுரை கிரேஸ் கென்னட் மருத்துவமனையில் தோல் சேமிப்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

★ஒரு லட்சம் தமிழக விவசாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர்  இன்று தொடங்கி வைத்தார்.

★6 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்கள் தங்கள் மக்கள்தொகையில் 100 சதவீத அளவுக்கு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.

★தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்களை அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

★ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் மொத்தம் 18 மாநிலங்களில் 13 மாநிலங்கள் வெள்ளக்காடாகின. இதனால் அங்கு ஏற்கெனவே அகதிகளாக வாழ்ந்து வந்த மக்கள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

★சர்வதேச பில்லியர்ட்ஸ்: 24வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை இந்திய வீரர் பங்கஜ் அத்வானி கைப்பற்றினார்.

★உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் கூட்டு பெண்கள் பிரிவு : இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி.

Today's Headlines

★ A skin storage bank has been set up at the Grace Kenneth Hospital in Madurai to facilitate skin transplant treatment for burn victims.

 ★ The Chief Minister of Tamil Nadu today launched a scheme to provide free electricity connection to one lakh Tamil Nadu farmers.

 ★ Federal Health Secretary Rajesh Bhushan has said that 6 states and 6 Union Territories have achieved the record of giving the first dose of vaccine to 100 percent of their population.

 ★ Women should be allowed in National Security Academy exam: Supreme Court orders federal government.

 ★ Sudan, an African country, has been hit by flash floods that have inundated 13 out of 18 states.  Thus the people who were already living there as refugees are even worse affected.

 ★ International Billiards: Indian player Pankaj Adwani wins the world title for the 24th time.

 ★ World Archery Championship Joint Women's Division: Indian team advanced to the final.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment