Pages

Friday, September 10, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.09.21

 திருக்குறள் :

அதிகாரம் - 4 அறன் வலியுறுத்தல் 

குறள்: குறள் : 33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல் . 

பொருள்:
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

பழமொழி :

Give and spend and God will send

இட்டார்க்கு இட்ட பலன்


இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன. 

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

வேறு பிறவி என்பது கிடையாது.உண்மையில் பிறப்பும் இறப்பும் ஒன்றெனக் கொண்டால் நன்மையை மட்டுமே நினைக்கத்தூண்டும்.
________ ரமண மகரிஷி

பொது அறிவு :


1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது து?

வேளாண்மை 


2. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம் ______

பெங்களூர்




English words & meanings :


Convince - cause (someone) to believe firmly in the truth of something.


Allocate - distribute (resources or duties) for a particular purpose.


ஆரோக்ய வாழ்வு :


* சிவப்பு வண்ண வெண்டைக்காயை உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் தான் பல வருட ஆராய்ச்சிக்குப் பின் உருவாக்கியுள்ளது. இதுகுறித்த ஆய்வு, 1995-ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வந்தது.

சிவப்பு நிற வெண்டைக்காயை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறைகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இந்த வெண்டைக்காய் மிகவும் உதவுகிறது. 


கணினி யுகம் :

Ctrl + A -- Select all contents of the page.

Ctrl + B -- Bold highlighted selection.


செப்டம்பர் 11 :

மகாகவி பாரதியார் அவர்களின் நினைவுநாள்   




சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921)[2] கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[3] தமிழ்தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாள்




இம்மானுவேல் சேகரன் (1924 அக்டோபர் 9 - செப்டம்பர் 111957)[1] ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தமிழக அரசியல் தலைவர்.[2] தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்.[2] மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
நீதிக்கதை

தானத்தில் சிறந்தவன் கர்ணன்

பாண்டவர்களுக்கு ரொம்ப நாட்களாகவே நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். ஆனால் கர்ணனையே ஏன் எல்லோரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்ற சந்தேகம் இருந்தது. இவர்களின் சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன், ஒரு நாள் தங்கமலை, வெள்ளிமலை என இரு மலைகளை உருவாக்கி பாண்டவர்களை அழைத்து இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன் என்றார். 

பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத்தர, தர்மர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். தானம் செய்ய செய்ய அவ்விரு மலைகளும் வளர்ந்து கொண்டே இருந்தன. தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. மாலைப்பொழுது வந்ததும் எங்களால் முடியாது கண்ணா! என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டார் தருமர். 

உடனே கிருஷ்ணன் கர்ணனை வரவழைத்து கர்ணா! இதோபார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்கமலை. மற்றொன்று வெள்ளிமலை. இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப்பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? என்று கேட்டார். உடனே கர்ணன், இதில் யோசிக்க என்ன இருக்கிறது. இப்போதே செய்து காட்டுகிறேன் என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி தனது தர்மத்தை முடித்துவிட்டுக் கிளம்பினான். 

பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப்பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசுதான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக்காட்டிலும் தான, தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதால் தானத்தில் சிறந்தவர் கர்ணனே என்று பாண்டவர்களுக்கு உணர்த்தினார் கிருஷ்ணன்.

இன்றைய செய்திகள்

11.09.21

★பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்' என அழைக்கப்படும், பாரதியார் நூற்றாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முதல்வரின் 14 அறிவிப்புகள்.

★கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

★வருமான வரித் தாக்கலுக்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுஏள்ளது.

★ஆப்கானில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்.

★கரோனா பாதிப்பு எதிரொலி; 5-வது டெஸ்ட் போட்டி ரத்து: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.

★ஆப்கானிஸ்தான் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கவும், குறிப்பாக கிரிக்கெட் விளையாடவும் தலிபான் தீவிரவாதிகள் தடை விதித்துள்ளனர்.


Today's Headlines


★ Bharathiyar Memorial Day will henceforth be known as 'Mahakavi Day', 14 Chief Minister's Announcements on the occasion of Bharathiyar Centenary

 ★ Radhakrishnan, Principal Secretary, Department of Medical and Public Welfare, has advised the District Collectors to increase corona testing.

 ★ The deadline for filing income tax has been extended to December 31.

 ★ Taliban brutal attack on journalists covering Afghanistan.

 ★ Due to Corona impact echo, the 5th Test was Cancelled which was announced by England Cricket Board 

 ★ Taliban militants have banned Afghan women from participating in sports, especially cricket.




Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment