Pages

Wednesday, April 22, 2020

புத்தகம் 1 - வீர யுக நாயகன் வேள்பாரி

வீரயுக நாயகன்‌ வேள்பாரி....


முல்லைக்கு தேர் கொடுத்த பாரி... பாரியின் வள்ளல் தன்மை...

இவற்றைத் தவிர பாரியைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்???

அறிவும் அன்பும் வீரமும் வளமும்‌ கொண்டவன் வேள்பாரி. வேளிர் குலத்தின் தலைவன் பாரி .மூவேந்தர்களின் மண்ணாசைக்கு தப்பின ஒரே குறுநிலம்‌ பறம்பு மலை. பாணர்களை தன்‌ இனத்து மக்களென எண்ணினவன் பாரி. நட்பிற்கு அடையாளம் கபிலரும் பாரியும் மட்டுமே. நிலம், இயற்கை, பண்பாடு ,நீதி யாவும் விற்பனைப் பண்டமாக மாறிக் கொண்டிருந்த சூழலில் ஒரு தாவரத்தை காட்டிலும் பெருந்தச்சர்கள் ஆக்கிய தேர் பெரிதில்லை என்பதை அறிந்த இயற்கை யாளன் பாரி. மூவேந்தர்களில் பெரும் படைகளை அளப்பரிய தன் போர் முறைகளாலும் வியூகங்களாலும் இணையற்ற வீரத்தாலும் முழு முற்றாக அழித்தவர் வேள்பாரி.
      இத்தகைய பெருமைகளைக் கொண்ட பாரியைப் பற்றி நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் தமிழ் இலக்கியங்களுல் மிகச்சிறந்த, பாராட்டத்தக்க காவியத்தை படைத்துள்ளார் எழுத்தாளர் சு. வெங்கடேசன். வர்ணிக்க வார்த்தைகளே இல்லாத அளவுக்கு அமுதினும் அதிகமாக சுவையூட்டும் அமுதகாவியம் வேள்பாரி.
தமிழரின் நாகரிகம், சிந்தனை மரபு, இயற்கை அறிவு, விஞ்ஞானம் ,கலை இலக்கிய நுண்திறன், வீரம், காதல், வாழ்வு என பெரும் வரலாறு ஒன்றை புனைவின் துணையோடு கவிதையின் மொழியில் சித்திர நுட்பத்தில் ஆக்கித் தந்திருக்கிறார் சு. வெங்கடேசன்
இத்தகைய
தமிழனின் பெருமையைப் பறைசாற்றும் புதினமாக திகழ்கிறது.
மொழியாலும் புனைவாலும் மதம் பிடித்த ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு காவியத்தை உருவாக்க முடியும். வரலாறு, இலக்கியத்தின் வாயிலாக இத்தனை அரசியல் சரி நிலையோடு மீளுருவாக்கம் செய்யப்படுவது நவீன சூழலில் இதுவே முதல் முறை

வாழ்க செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

பதிவு
அ.ரூ.ஜெனிஃபா
11-ஆம் வகுப்பு


இப்புத்தகத்தின் PDF ஐ கீழ் உள்ள லிங்கில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்....

https://drive.google.com/file/d/1VnGwSzVfwmvWgDD6YvJ8AD8Nb9d8lOCk/view?usp=drivesdk

No comments:

Post a Comment