Pages

Thursday, March 5, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.03.20

திருக்குறள்


அதிகாரம்:கல்வி

திருக்குறள்:398

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

விளக்கம்:

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

பழமொழி

Crows are never the whiter for washing themselves.

 உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

இரண்டொழுக்க பண்புகள்

1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.

2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை.

பொன்மொழி

வாய்மை மகத்துவமானது. பொய்யான பரபரப்புகள் என்றாவது ஒருநாள் கலவரத்தில் முடியும்.........திருவள்ளுவர்

பொது அறிவு

1.இந்தியாவின் நயாகரா என்றழைக்கப்படும் நீர்விழ்ச்சி எது?

 ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி

2.உலகின் பெரிய ரயில் நிலையம் எது?

 கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல்,நியூயார்க்

English words & meanings

Jeans - a type of dress made of strong cotton clothe. முரட்டு பருத்தி துணியில் தக்கப் பட்ட ஆடை.

Genes - a unit of information inside a cell which says what a living thing will be like.
உயிரணுவின் மரபுக் கீற்று

ஆரோக்ய வாழ்வு

குளிர் காய்ச்சலுக்கு சீதாப்பழம் நல்ல நிவாரணம் தரும் மருந்தாக அமைகிறது. சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு சேர்த்து எலுமிச்சை சாறில் குழைத்து தலைக்கு தடவினால் முடி உதிர்வு நிற்கும்.

Some important  abbreviations for students

Joke - Joy of kids Entertainment

VGA - Video Graphics Array

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

ஏழ்மையிலும் நேர்மை

ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யாததால், அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்று தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்! என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டும் என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர், ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்! என்றாள். மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வந்தர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

நீதி :
பொறுமை, நேர்மை இரண்டும் இருந்தால் எதிலும் நிச்சயம் வெற்றி பெறலாம்.

வெள்ளி
சமூகவியல்

*ஆரவல்லி மலைத்தொடர்

 மேற்கு இந்தியாவில்
உள்ள ஒரு மலைத்தொடர்.

*ஆரவல்லி என்பதற்கு
சிகரங்களின் வரிசை' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 800 கி.மீ நீளம் கொண்டது.

*இந்திய மாநிலங்களான டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகியவற்றை உள்ளடக்கியது.

* மிக உயர்ந்த சிகரம் அபு மலையில் அமைந்துள்ள குரு சிகரம் ஆகும்.

*உதய்ப்பூர் நகரமும் அதன் ஏரியும் இம் மலைத்தொடரின் தென்புறச் சரிவில் அமைந்துள்ளது.

இன்றைய செய்திகள்

06.03.20

◆புதுச்சேரி கடற்கரையோரப் பகுதிகளில் இந்த ஆண்டில் 10,100 ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு; வனத்துறையினர் நடவடிக்கை.

◆உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

◆ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: கிருஷ்ணா நதிநீரை கூடுதலாக விடுவிக்க கோரிக்கை.

◆மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

◆இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷிதேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Today's Headlines

🌸This year at the Puducherry sea shore 10,100 Oliver Ridley Turtle's eggs were collected by Forest Department.

🌸In the Higher Education Tamil Nadu leads first all over India says our CM.

🌸 Tamil Nadu ministers met with Andhra CM in regard with the requesition of releasing more of Krishna river water.

🌸 In women's T20 World Cup finals India will meet Australia.

🌸 Former spinner Sunil Joshi is selected as the Chairman for the Indian Cricket Team Selection Committee.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment