Pages

Thursday, February 27, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.02.20

திருக்குறள்


அதிகாரம்:கல்வி

திருக்குறள்:392

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

விளக்கம்:

எண்,  எழுத்து என்று சொல்லப்படும் இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

பழமொழி

The finest lawn soonest stains

 காய்ந்த மரமே கல்லடி படும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

உள்ளதை உள்ளபடி பார்ப்பதும் கேட்பதும் உரைப்பதும் தான் கல்வி....
         
                                      பெரியார்

பொது அறிவு

1.தேசிய அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 பிப்ரவரி 28

2.தேசிய அறிவியல் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது?

 சர் சி.வி. இராமன் அவர்கள் இந்நாளிலேதான் இராமன் விளைவை கண்டறிந்தார். அதனை  நினைவு கூறும் வகையில் கொண்டாடப்டுகிறது.

3. தேசிய அறிவியல் தினம் - 2020 ன் மையக்கருத்து என்ன?

அறிவியலில் பெண்கள்
Women in Science

English words & meanings

Dear - a way of addressing the people who are closed to us, அன்பானவர்களை அழைக்கும் ஒரு வார்த்தை.

Deer - a beautiful wild animal which runs very fast. மான்

ஆரோக்ய வாழ்வு

செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு .எனவே எடையை குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழை காலையில் உட்கொண்டு வந்தால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

Some important  abbreviations for students

TBA - To be announced

TBC - To be continued

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

முரசு சத்தம்

ஒரு நாள் நரி ஒன்று மிகுந்த பசியோடு இருந்தது. போர்க்களத்துப் பக்கமாக சென்ற போது திடீரென பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. ஏதோ ஒரு பெரிய விலங்கிற்கு நாம் இன்று இரையாகப் போகிறோம் என்று எண்ணி பயந்து கொண்டிருந்தது. ஆனால் சற்று நேரம் கழித்து அருகில் இருந்த ஒரு பாறையின் மேல் ஏறி சுற்றும் முற்றும் பார்த்தது.

பிறகு தான் தெரிந்தது அது ஒரு போர் முரசு என்று. அதன் அருகில் மெல்ல சென்று சுற்றிப் பார்த்தது. பசியில் இருந்த நரி அந்த முரசினுள் இருந்து சத்தம் வருகிறது என்பதை அறிந்து கொண்டது. அந்த முரசினுள் ஏதோ ஒரு விலங்கு உள்ளே இருந்து கொண்டு தான் ஒலி எழுப்புகிறது என்று எண்ணி தன் கூரிய பற்கள் மற்றும் நகங்களை கொண்டு அம்முரசினை கிழித்து உள்ளே இருக்கும் மிருகத்தினை தின்ன எண்ணியது. உள்ளே சென்று பார்த்தால் முரசுக்குள் ஒன்றும் இல்லை. ஏமாற்றம் அடைந்த நரி உடல் சோர்வால் மயக்கமுற்று கீழே விழுந்தது.

நீதி :
ஆசையே துன்பத்திற்குக் காரணம்.

வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு

 *ஆனைமுடி தென்இந்தியாவிலேயே
மிகவும் உயரமான சிகரம் ஆகும்..



*  தென் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள இம்மலை முகடு  ஏலக்காய் மலைகள், ஆனை மலைகள், பழனி மலைகள் கூடுமிடத்தில் உள்ளது.
*ஆனைமுடிமலை கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பாரம்பரிய விளையாட்டு

குலை குலையாய் முந்திரிக் காய்:
 குழந்தைகளை வட்டமாக அமர வைத்து ஒருவர் மட்டும் அவர்களைச் சுற்றி பாட்டும் பதிலுமாக சுற்றி வந்து , தன் கையிலுள்ள கைக்குட்டையை வட்டத்திலுள்ள ஒருவரின் மேல் போட, அவர் துரத்த விளையாட்டு களைகட்டும். காணொளி அடுத்த வாரம்!!
  பாடல் மட்டும் இதோ!!

🦊குலை குலையா முந்திரிக்கா
🙂நரியே நரியே சுத்தி வா

🦊தீப்பெட்டிய காணோம்
🙂தேடித்தேடி பாரு

🦊மாங்காய் மரத்துல மாங்காய்
🙂உன் வாயில ஊறுகாய்

🦊பச்சரிசிய 🙂தின்பேன்
பல்லை உடைப்பேன்

🦊ஓட்டு மேலே ஏறுவேன்
🙂காலை உடைப்பேன்

🦊கொள்ளையடித்தவன் எங்கிருக்கான்?
🙂கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி!!!

🦊குருவிகளெல்லாம் கூட்டில் அடையுங்கள்.....

இன்றைய செய்திகள்

28.02.20

★ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது. சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அதனால்தான் அன்றைக்கு தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.

★தமிழ்நாட்டிலேயே அதிக மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளி என்ற பெயரை திருப்பூர், வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி பெற்றுள்ளது.

★பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

★டெல்லி வன்முறையின் எதிரொலியாக அதன் வடகிழக்குப் பகுதிகளில் நடைபெற்று வந்த சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

★ஜப்பான் கப்பலிலிருந்து சுமார் 119 இந்தியர்கள் மற்றும் 5 வெளிநாட்டுப் பயணிகள் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

★ஷபாலி வர்மாவின் அதிரடியான ஆட்டத்தால், மெல்போர்னில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி.

★5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வீராங்கனை என்ற பெயரெடுத்த ரஷ்ய வீராங்கனையுமான மரிய ஷரபோவா டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Today's Headlines

🌸🌸Each year February 28th is celebrating as National Science Day. This is to honour the memory of Sir. C.V. Raman who discovered the Raman's Effect and declared it to the world.

 🌸The Velampalayam Corporation Middle School got the name as the school where most students are studying

🌸 The government News report said that the government employees are required to wear identity cards during work hours, .  In addition, action will be taken against those who violate it.

 🌸The CBSE public exam in the northeastern regions have been postponed as an echo of the Delhi violence.

 🌸About 119 Indians and 5 foreign passengers were brought to India from Japan by the Air India flight.

 🌸With Shabali Verma's stunning performance, the Indian women's team advanced to the semifinals by defeating New Zealand by 4 runs in the league match of yesterday's T20 World Cup in Melbourne.

 🌸Maria Sharapova, a five-time Grand Slam winner and world-renowned Russian star player, has announced her retirement from tennis.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment