Pages

Tuesday, December 3, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.12.19

 டிசம்பர் 4



இன்று இந்திய கடற்படை தினம்

அதிகாரம்:நிலையாமை

திருக்குறள்:335

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

விளக்கம்:

வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.

பழமொழி

Call a spade a spade

உள்ளதை உள்ளவாறு சொல்.

இரண்டொழுக்க பண்புகள்

 1. காலம் பொன் போன்றது. எனவே என் நேரத்தை வீணாக்காமல் படிப்பேன்.

2. கடமை கண் போன்றது எனவேஎனது படிப்பிலும் என் கடமைகளை முடிப்பதிலும் கவனம் செலுத்துவேன்.

பொன்மொழி

அறிவில்லாத நேர்மை பலமற்றது.பயனற்றது.விவேகத்துடன் கூடிய நேர்மை வலுவானது...

      ----பேலி

பொது அறிவு

1. இலையில்லாமல் பூக்கும் தாவரம் எது?

சப்பாத்தி கள்ளி

2. ஆப்பிள் நீரில் மிதப்பது ஏன்?

ஆப்பிளில் 25% காற்று இருப்பதால்

English words & meanings

Volcanology – study of volcanoes. எரிமலையியல் Volcanology என்பது எரிமலைகளைப் பற்றிய படிப்பாகும்.

 Vacant -not being used; empty.  பயன்பாட்டில் இல்லாதிருக்கிற; காலியாக உள்ள

ஆரோக்ய வாழ்வு

 பப்பாளியில் வைட்டமின் பி, வைட்டமின் பி-6 மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளன.

Some important  abbreviations for students

FTW - For the win

FYI - For your information

நீதிக்கதை

அன்பிற்கு மொழியும் வடிவமும் கிடையாது

ஒரு ஊரில் தங்கத்தால் மெல்லிய தாள் செய்து விற்கும் தொழில் செய்து வந்தார் ஒருவர். அவருக்கு ஒன்பது வயதில் ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் அந்தக் குழந்தை அப்பா செய்து வைத்திருந்த தங்கத்தாள் ஒன்றை எடுத்து ஒரு அட்டைப் பெட்டியில் ஒட்டி விட்டாள். அதைப் பார்த்த அப்பாவிற்கு மிகவும் கோபம். குழந்தையை இப்படிப் பொருளின் மதிப்புத் தெரியாமல் வீணடித்து விட்டாயே என்று கோபித்துக் கொண்டார்.

மறுநாள் காலை அவர் தூங்கி விழிக்கும் போது அந்தத் தங்கத்தகடு ஒட்டிய பெட்டி அவரது படுக்கை அருகில் இருந்தது. அதன் மேல் குழந்தை அவள் சொந்தக் கையெழுத்தில் பிறந்த நாள் வாழ்த்து எழுதியிருந்தாள். தந்தை அந்தப் பெட்டியை ஆர்வமாகத் திறந்து பார்த்தார். அது காலியாக இருந்தது.

திரும்பவும் அப்பாவிற்குக் கோபம் வந்தது. குழந்தையைக் கூப்பிட்டு ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கோபமாகக் கேட்டார். அதற்கு அவள் மழலை மாறாமல் அப்பா, நான் அந்தப் பெட்டி நிறைய முத்தம் நிரப்பி வைத்திருந்தேனே. உங்களுக்குத் தெரியவில்லையா? என்று கேட்டாள். அப்பாவிற்குச் சுரீர் என்று ஏதோ தைத்தது. தன் தவற்றுக்கு வருந்தினார். மகளைக் கட்டி அணைத்து முத்தங்கள் கொடுத்தார்.

இன்று அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவள் குடும்பம், அவள் குழந்தை என்று கிளம்பிப் போய் விட்டாள். அப்பா இன்னமும் அந்தப் பெட்டியை பத்திரமாக வைத்திருக்கிறார். தினமும் அதைத் திறந்து அதிலிருந்து ஒரே ஒரு முத்தம் மட்டும் எடுத்துக் கொள்கிறார். இன்னமும் அந்தப் பெட்டியில் குறையாமல் முத்தங்கள் இருக்கின்றனவாம்.

புதன்
கணக்கு & கையெழுத்து

பகிர்ந்து உண்போம் ....

கற்பகம் 500 கிராம் பொட்டுக் கடலையை ஒரு பொட்டலமாக மாலை பள்ளாங்குழி ஆடும் இடத்திற்கு கொண்டுவந்தாள்.
அவளுடன் தோழியர் மூவர் இருந்தனர். ஆனால் பொட்டுக்கடலையை ஐந்து கூறாக போட்டனர்.மேலும் ஐந்தாவது கூறை நான்காக போட்டு சம்மாக எடுத்துக் கொண்டனர்.

கேள்வி: நான்கு பேரும் எத்தனை கிராம் பொட்டுக் கடலை பங்காக பெற்றனர்??

விடை:
(1) 500/5= 100கிராம்
(2) 100/4= 25  கிராம்
எனவே ஒருவருக்கு
125 கிராம்


கையெழுத்துப் பயிற்சி - 21


இன்றைய செய்திகள்

04.12.19

* உலக அளவில் அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்துக்கான விலையை மனித குலம் கொடுத்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

*புதிய தேசிய கல்வி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

* தாம்பரம்-கோவை இடையே ஜன.14ஆம் தேதி மாலை 6 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

* சிறந்த கால்பந்து வீரருக்கான "பேலன் தோர்" விருதை மட்டும் வென்றார் பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி.

* நேபாளத்தில் நடந்து வரும் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் உள்ளிட்ட 3 பதக்கங்களையும் வென்று க்ளீன் ஸ்வீப் செய்தனர்.

Today's Headlines

🌸For the World Wide Weather change humans are giving the price warns World Health and Hygiene Organisation.

🌸 The New Education Policy will be released soon says MHRD.

🌸 Between Kovai and Tambaram Special Train Suvitha will be commenced on January 14th at 6pm.

🌸 Parcelona player Leonal Messy won the award for the best player. But he bagged "Palanthor" award only.
 This is for the best football player.

🌸 In the 13th South Asia meet which is being held in Nepal Indian Players won all 3 gold medals for 10 metres Air Rifle division by clean sweeping of the medals.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment