Pages

Thursday, November 28, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.11.19

திருக்குறள்


அதிகாரம்:நிலையாமை

திருக்குறள்:331

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

விளக்கம்:

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

பழமொழி

All things come to those who  wait

 பொறுத்தார் பூமி ஆள்வார்

இரண்டொழுக்க பண்புகள்

1. கடலையும் கடல் சார்ந்த பொருட்களையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி

ஒன்றாக வருவது தொடக்கம்; ஒன்றாக இருப்பது முன்னேற்றம்; ஒன்றாக வேலை செய்வது வெற்றியாகும்.

✒ ஹென்றி போர்டு

பொது அறிவு

1.ஹிட்லர் பிறந்த நாடு எது?

 ஆஸ்திரியா (1889, ஏப்ரல் 20)

2. 2016ஆம் ஆண்டு அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்த ஹிட்லர் பிறந்த வீடு எவ்வாறு மாற்றம் செய்யப்பட உள்ளது?

  காவல் நிலையமாக.

English words & meanings

Rheumatology - branch of medicine devoted to the rheumatic diseases. வாதவியல்-இது வாத நோய்களுக்கானச் சிகிச்சை, நோயறிதல் ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவம் ஆகும்.

Radiate - emit light or heat. ஒளிக் கதிர்களை வீசு

ஆரோக்ய வாழ்வு

 மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறும். சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம் ,பெருவயிறு, நீர்க்கட்டு ஆகியவை நீங்கும்.

Some important  abbreviations for students

gen. = general

i.e. = that is

நீதிக்கதை

ராமன் மற்றும் பேசும் கிளி

யார் எது சொன்னாலும் உடனே நம்பி விடுவான் ராமன். ஒரு நாள் சந்தைக்கு அவன் போன போது ஒரு வியாபாரி ஒரு கூண்டுக்குள். கிளி ஒன்றை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். இந்தக் கிளி பேசும் கிளி என்றான்.

ராமனும் நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். வீட்டில் அதற்கு பேசப் பழக்கினான். ஒரு மாதம் ஆகியும் அந்தக் கிளி பேசவில்லை. அதை அவன் எடுத்துக்கொண்டு. தான் அதை வாங்கிய வியாபாரியிடம் சென்றான்.

அந்த வியாபாரியோ, அந்தக் கிளியை வாங்கி பரிசோதிப்பது போல பாசங்கு செய்து இந்த கிளிக்கு காது கேட்காது. அதனால் நீங்கள் சொல்வதைக் கேட்டும் அந்த கிளியால் பேச இயலவில்லை என்று சொல்லி வேறு ஒரு கிளியைக் காட்டி இதை வாங்கிக் கொள்ளுங்கள் இது பேசும் என்றான்.

ராமன் மீண்டும் ஒரு நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். அதற்கும் பேசக் கற்றுக்கொடுத்தான். அதுவும் பேசவில்லை. அப்போது ராமனின் நண்பர் ஒருவர் வந்தார். அவரிடம் ராமன் நடந்ததைக் கூறினான்.

உடனே அந்த நண்பர் அடடா! என்னை முதலிலேயே கேட்டிருக்கலாமே! அந்த வியாபாரி ஒரு பொய்யன். பொய் சொல்லி வியாபாரம் செய்வதே அவன் பிழைப்பு என்றான்.

ராமன் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி மனம் வருந்தினான். யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்காமல் நமது அறிவை உபயோகித்து அது சாத்தியமா. என யோசித்து செயல்படவேண்டும்.

வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு

சமூகவியல்

 சென்னையில் உள்ள ரயில் அருங்காட்சியகம் பெரம்பூருக்கு அருகிலுள்ள இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையின்
  (Integral Coach Factory)
 அலங்காரப் பிரிவில் இந்த அருங்காட்சியகம் 16 ஏப்ரல் 2002 அன்று திறக்கப்பட்டது. 6.25 ஏக்கர்  அருங்காட்சியகத்தில் தொழில்நுட்ப மற்றும் பாரம்பரிய கண்காட்சிகள் உள்ளன, இதில் பிரிட்டிஷ் ராஜ்ஜின் நீராவி என்ஜின்கள் உள்ளன.  சேகரிப்பில் சில ரயில்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலானவை.
 மேலும் புதுப்பிக்கப்பட்ட உட்புற கலைக்கூடம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை ஐ.சி.எஃப் நிர்வகித்து பராமரிக்கிறது.

பாரம்பரிய விளையாட்டு -

சிலை - உயிர்:

 வேறு பெயர்கள்- Lock and key; freeze- release.

எண்ணிக்கை- 4 முதல் 15 பேர் வரை

விளையாடும் முறை:
  துரத்தி வரும் ஒரு நபரைத் தவிர மற்றவர்கள் ஓடுவர். அவ்வாறு ஓடும்போது துரத்துபவர்  தொட வந்தால் ஓடுபவர் 'சிலை' என்று சொல்லி  அசையாமல் நிற்க வேண்டும் . இவ்வாறு ஒவ்வொருவராக அசையாமல் நிற்க, ஓடிக் கொண்டிருக்கும் நபர் சிலையாக  நிற்பவரைத் தொட்டு உயிர் கொடுக்கலாம். அவ்வாறு உயிர் கொடுக்க முடியாத சூழலில் கடைசியாக யார் சிலையாக நிற்கிறாரோ, அவர் 'அவுட்' . துரத்தி வரும் நபர் ஓடுபவரை சிலையாக நிற்கும் முன்பே தொட்டு விட்டால் அவர் 'அவுட்' எனக் கருதப்படுவார்.

இன்றைய செய்திகள்

29.11.19

* இயற்கை வளத்தைப் பாதுகாக்க எம்.சாண்ட் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

* மாணவர்களிடையே உடல் வறட்சியை ஏற்படுத்தும் தாகத்தைத் தடுக்கும் விதமாக தினந்தோறும் இரண்டு முறை குடிநீர் இடைவேளை விடப்பட வேண்டும் என்று கோவா அரசு உத்தரவிட்டுள்ளது.

* தமிழகம் முழுவதும் நேற்று முதல் மிதமான மழை பெய்து வருவதை அடுத்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நேற்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

* சர்வதேச பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

* ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வா்மா-ஜோதி சுரேகா இணை தங்கம் வென்றது.

Today's Headlines

🌸To save natural resources have to increase the usage of M. Sand ordered Madurai Division Court.

🌸To decrease the dehydration of the students due to thirst the Goa government ordered the schools to break up two times for drinking water.

🌸 Due to the mild shower all over Tamil Nadu the exams due on affiliated colleges of Chennai University are postponed by vice chancellor.

🌸 In international Badminton series Indian Player Kidambi Sriganth advanced to second round.

🌸 In Asian  Archery Competition the Mingled team of Abishek Varma and Jothi Sureka from India won and bagged a Co gold medal.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment