Pages

Thursday, November 21, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.11.19

திருக்குறள்


அதிகாரம்:கொல்லாமை

திருக்குறள்:326

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

விளக்கம்:

கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.

பழமொழி

No honest man ever repented of his
honesty .

 மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள்

1. சுத்தம் சுகம் தரும். எனவே எப்போதும் சுய சுத்தம், சுற்றுப்புற சுத்தம் பேணுவேன்.

2. என்னுடைய அகமும் தூய்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன்.

பொன்மொழி

செயலின் வெற்றி தன்னம்பிக்கை தான்  நன்னம்பிக்கை இன்றி தொடங்கும் எந்தச் செயலின் முடிவும் நன்மையாக அமைவதில்லை..

_____சிங்சன்

பொது அறிவு

1.  உலகில் அதிக அளவில் விற்பனை ஆகும் மசாலா பொருள் எது?

மிளகு

2. உலகில் விலை உயர்ந்த மசாலா (நறுமண பொருள்) எது?

குங்குமப்பூ

English words & meanings

Microbiology – study of microscopic organisms. நுண்ணுயிரியல் - இது நுண்ணுயிர் அவை சார்ந்த அனைத்தையும் பற்றிய படிப்பாகும்.

 Magnanimous
- generous and forgiving in nature. பெருங்குணமுள்ள

ஆரோக்ய வாழ்வு

துளசியை நீரில் கொதிக்கவைத்து குடித்து வந்தால் தலைவலி நீங்கும்.

Some important  abbreviations for students

DMV - Division of Motor Vehicles

DNC - Democratic National Committee

நீதிக்கதை

இறைவனுக்கு நன்றி சொல்வோம்

ஒரு ஊரில் காகமொன்று இருந்தது. அது கருப்பு நிறத்தில் இருப்பதை வெறுத்தது. ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்தது அப்போது நீரில் இரு அன்னப்பறவைகள் நீந்திக் கொண்டிருந்தன.

அவற்றைப் பார்த்த காகம் அந்த அன்னப்பறவைகளைப் போல நான் வெள்ளையாக இல்லையே என வருந்தியது. அந்தப் பறவைகளைப்போல நாமும் தண்ணீரில் நீந்தினால் தன் சிறகுகளில் இருக்கும் கரிய நிறம் போய் வெண்மை நிறம் வந்துவிடலாம் என எண்ணியது.

உடனே அன்று முழுதும் அது தண்ணீரில் நீந்தியது. தன் இறகுகளை தேய்த்து தேய்த்து பார்த்தது. அதனால் சில இறகுகளையும் இழந்தது.

அதைப் பார்த்த அன்னப் பறவைகளில் ஒன்று காகத்திடம் இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு உருவம், நிறம் பெற்றவை. அதை மாற்ற நினைத்தால் நடக்காது என அறிவுரை கூறியது. மேலும், கடவுள் எந்த அங்கஹீனத்தையும் கொடுக்காமல் படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும் என்றது.

வெள்ளி
சமூகவியல்

சமூகவியல்
உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய, மிகவுயர்ந்த, மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான்.  உலகின்  மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும். இதில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்றாகும்.எப்பொழுதும்
உறைபனி மூடி இருக்கும். இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது.இது பூடான், இந்தியா,  நேபாளம், சீனா மற்றும் பாகிஸ்தான்
ஐந்து நாடுகளில் பரவியுள்ளது.
உலகின்  பெரிய நதிகளான சிந்து, கங்கை, மற்றும் பிரம்மபுத்திரா உற்பத்தியாகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் இயற்கை அரணாக விளங்குகிறது.

இன்றைய செய்திகள்

22.11.19

*தாய்லாந்து - லாவோஸ் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவு.

* வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

*ஆசிரியர்களுக்கு QR Code உடன் கூடிய ஸ்மார்ட் கார்டு (Smart Card) தயாரிப்பதற்கான பணியில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

*பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரோப்கார் சேவை தொடங்கியது.

* மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட  டி20 தொடரை 5 - 0 என்ற கணக்கில் வென்று சாதனைப் படைத்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.

* சீனாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார்.



Today's Headlines

🌸In the border of Thailand and Laos there is an earthquake measured 6.1 Richter.

🌸 Due to Heat convection waves there is a chance of mild rain in Tamil Nadu and Puduchery says the Metroligical department.

🌸 Smart Cards with QR Code are getting ready for the Tamil Nadu teachers by  the  School Education Department.

🌸In Pazhani Thandaayuthapaani temple started the Rope car service.

🌸 The Indian women's cricket team won the T-20 series in the set of 5-0 and made a record.

🌸 In the World ISSF shooting competition took place in China tamilian Ilavenil Valarivan won the gold medal.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment