Pages

Tuesday, November 19, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.11.19

திருக்குறள்


அதிகாரம்:கொல்லாமை

திருக்குறள்:324

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

விளக்கம்:

எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.

பழமொழி

Trust not to a broken staff

மண்குதிரையை நம்பி  ஆற்றில் இறங்காதே

இரண்டொழுக்க பண்புகள்

1. சுத்தம் சுகம் தரும். எனவே , எப்போதும் சுய சுத்தம், சுற்றுப்புற சுத்தம் பேணுவேன்.

2. என்னுடைய அகமும் புறமும் தூய்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன்.

பொன்மொழி

நிதானமாக சிந்திக்க வேண்டும்.விவேகமாக  திட்டமிட வேண்டும். விரைவாக செயல்பட வேண்டும்.

---- புலிட்சர்

பொது அறிவு

1.இங்கிலாந்து நாட்டின் முதல் அரசி யார்?
 முதலாம் மேரி.

2. உலகின் முதல் அணு மின்சக்தி நிலையத்தை அமைத்த நாடு எது?    ரஷ்யா

English words & meanings

 Kinematics – study of motion. இயங்கியல். இது   விசையியலின் ஒரு பிரிவாகும். திசைவேகம், முடுக்கம் போன்ற கூறுகளைவிபரிக்கிறது

Keen-Set
Having lot of enthusiasm in some activities. பசியார்ந்த, விருப்பார்வமுள்ள

ஆரோக்ய வாழ்வு

பட்டைப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் தலைவலி நீங்கும்.

Some important  abbreviations for students

GMT - Greenwich Mean Time

GPS - Global Positioning System

நீதிக்கதை

சமாதானம் அவசியம்

காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது. அதை ஒரே சமயத்தில் சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் பார்த்தன. கரடி, நான் தான் முதலில் மானைப் பார்த்தேன். ஆகவே அது எனக்குச் சொந்தம் என்றது. ஆனால் சிங்கமோ.... நான் தான் முதலில் பார்த்தேன். ஆகவே இந்த மான் எனக்கேச் சொந்தம் என்றது.

இரண்டும், செத்துக்கிடந்த மான் யாருக்குச் சொந்தம் என நீண்ட நேரம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தன. அதனால் இரு மிருகங்களும் சோர்வு மேலிட மயங்கின. அப்போது நரி ஒன்று அங்கு வந்து, இறந்து கிடந்த மானையும், அதற்காக சண்டையிட்டுக் கொள்ளும் சிங்கத்தையும். கரடியையும் பார்த்தது. இதுதான் சமயம் என நரி மானைத் தின்றுவிட்டு ஓடியது.

மயக்கம் தீர்ந்ததும் விழித்துக் கொண்ட கரடியும், சிங்கமும், நரி வந்து மானைத் தின்றுவிட்டுப் போனதை அறிந்தன. நாம் இருவரும் சமாதானமாய் போயிருந்தால், மானை பங்குப்போட்டு உண்டிருக்கலாம். நாம் சண்டையிட்டதால் வேறு ஒருவன் புகுந்து நம்மை ஏமாற்றிவிட்டானே என வருந்தின.

புதன்
கணிதம் & கையெழுத்து
சிறு சேமிப்பு

ரமா ஒவ்வொரு மாதமும் 50 ரூபாய் உண்டியலில் போடுவாள். புதுவருடம் மற்றும் பிறந்தநாள் இரு நாட்கள் தலா 100 ரூபாய் போடுவாள்.
பிறந்தநாள் அன்று இரவு சேர்ந்துள்ள தொகையை தன் அம்மாவிடம் கொடுப்பாள். எனில்

கேள்வி: ரமா அம்மாவிடம் கொடுக்கும் தொகை எவ்வளவு??
விடை: 50 × 12 = ₹ 600
           600+200 = ₹ 800
₹800 கொடுப்பாள்.

கையெழுத்துப்
பயிற்சி - 19




இன்றைய செய்திகள்

20.11.19

*பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் நடந்த சிறப்பு எழுத்தறிவு திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சரிடம், தான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.1 லட்சத்திற்கான
 வழங்கி அசத்தியுள்ளார், தேவிபட்டினத்தைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநர் உலகராஜ்.

* ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் என்ற விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் வருகிற டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

*சென்னை மாநகர் முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* 3 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த இந்தியாவுடனான தபால் சேவையை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியுள்ளது.

* இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

* ஏடிபி டூா் பைனல்ஸ் போட்டி இறுதிச் சுற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றாா் இளம் வீரா் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ்.

Today's Headlines

🌸The Minister participated in the inauguration of the Special Literacy Project on behalf of the Directorate of Non-School and Adult Education. In that function  a Block Resource Teacher from Tevipatnam gave one Lakh rupees to the minister for the improvement of the school where he studied.

 🌸India-owned CardoSat-3 satellite from the Satish Dhawan space station in Sriharikota, Andhra Pradesh, is scheduled to launch on December 25 at 9.28 am.

 🌸 The Chennai High Court has ordered the Corporation and Police to take action to dispose of the vehicles parked on sidewalks throughout the city.

 🌸Pakistan has resumed postal service with India, which had been suspended for 3 months.

 🌸 India - West Indies won the 4th T20 cricket match between women's teams.

 🌸 Young hero Stefanos Sitzipas won the championship for the first time in the final round of the ATP Tour Finals.

Prepared by
Covai women ICT_போதிமரம்

2 comments:

  1. திருக்குறளின் அதிகாரம் கொல்லாமை,,ஆனால் அது இன்னா செய்யாமை என தவறாக உள்ளது..மாற்றவும்

    ReplyDelete
    Replies
    1. நன்னி சார் மாற்றி விட்டேன்... தவறுக்கு மன்னிக்கவும்

      Delete