Pages

Friday, November 15, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.11.19

திருக்குறள்


அதிகாரம்:கொல்லாமை

திருக்குறள்:321

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

விளக்கம்:

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.

பழமொழி

Appearance is deceitful

உருவத்தை கண்டு ஏமாறாதே.

இரண்டொழுக்க பண்புகள்

1. சோம்பல் என்னை வறுமைக்கு வழிநடத்தும்.

2. எனவே தேனீ போலும், எறும்பு போலும் சுறுசுறுப்பாக இருப்பேன்.

பொன்மொழி

சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்தே இருக்கும்.

எமர்சன்

பொது அறிவு

1.18 வயதுக்கு உட்பட்டவர்கள் இணைய வழி விளையாட்டு விளையாட(online games) தடை விதித்துள்ள நாடு எது?

 சீனா.

2.கள்ள ரூபாய் நோட்டுகளை கண்டறியப் பயன்படும் மின்காந்த அலைகள் யாவை?

 புற ஊதாக் கதிர்கள்.

English words & meanings

* Hydrobiology – study of aquatic organisms. நீர் வாழ் உயிரினங்கள் குறித்த படிப்பு

* Habitable -suitable or good enough to live
குடியிருக்கத்தக்க, வசிக்கத்தக்க

ஆரோக்ய வாழ்வு

கிரீன் டீயை தொடர்ந்து முறையாக அருந்துவதால் இதய நோய்களுடன் நேரடியாக தொடர்புடைய கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைக்கிறது.

Some important  abbreviations for students

EOD  - End of Discussion

EOM - End of Message

நீதிக்கதை

வித்தியாசமான உதவி

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு யாராவது காப்பாற்றுங்கள் என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு நான் கீழே வந்தால் உன்னைச் சும்மா விடமாட்டேன் என்று எச்சரித்தான். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்.

இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்? என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன் என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை.

நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்.

உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன் என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

இன்றைய செய்திகள்

16.11.19

*இராஜஸ்தான் குஜராத்தில் பல்லாயிரக்கணக்கில் கொத்து கொத்தாக செத்து விழும் வெளிநாட்டு பறவைகள் காரணத்தை கண்டறிய ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

*காற்று மாசுப்பாட்டால் சென்னையில் சுவாசத் தொற்றால் பலா் பாதிப்பு.

* புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு எஸ்.பி.க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

*  இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய அந்நாட்டு குழு அடுத்த வாரம் இந்தியா வர உள்ளது.

* வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-வது இரட்டைச் சதமெடுத்தார் மயங்க் அகர்வால்: 2-ம் நாளின் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்தது.

Today's Headlines

🌸In Rajesthaan and Gujarat the migratory foreign birds are dying in mass - an urgent research is underway to reveal the secret.

🌸Due to air pollution in Chennai many affected by respiratory problems.

🌸 New SPs were appointed for the newly created 5 districts.

🌸 To strengthen the business agreement between India and America a group is visiting India next week.

🌸 In test match against Bangladesh Mayank Agarwal scored second double century - at the end of the second day India scored 493 runs by 6 wickets loss.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment