Pages

Thursday, November 7, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.11.19

திருக்குறள்


அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

விளக்கம்:

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

பழமொழி

Be slow to promise but quick to perform

ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று.

இரண்டொழுக்க பண்புகள்

1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.

2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.

பொன்மொழி

பிறரின் வெற்றி பற்றிய விமர்சனங்கள் தன்னிடம் இல்லாத திறனின்  இயலாமையின்  பிரதிபலிப்பாகும்.. .

___கவிஞர் முக்தா

பொது அறிவு

1.சந்திரனில்  மலைகள் இருப்பதைக் கண்டறிந்தவர் யார்?

 கலிலியோ.

2. உவர்நீர் ஏரிகள் அதிகமாக உள்ள மாநிலம் எது ? 

குஜராத்.

English words & meanings

* Apiology – study of bees. தேனியியல்.தேனீக்கள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் ஒரு துறை.

 *Abbreviation - a shortened form of words. வார்த்தைகளின் சுருக்கம்

ஆரோக்ய வாழ்வு

வயிறு உப்புசம் நீங்க ஓமத்தை லேசாக வறுத்து அத்துடன் பெருங்காயத் தூளையும் லேசாக வறுத்து அதன் பின் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்த பின் அதை வடிகட்டி அருந்தினால் வயிறு உப்புசம் நீங்கி விடும்.

Some important  abbreviations for students

 FHA - The Federal Housing Administration.

NRA - The National Recovery Administration

நீதிக்கதை

பலம் எது? பலவீனம் எது ?

ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன. அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. அங்கே வசித்த மயில் மட்டும் எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமைபட்டுக் கொண்டே இருந்தது.

உதாரணத்திற்கு யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும், மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும்.

இப்படியிருக்க ஒரு மழைக்காலத்தில் அந்த மயில் அழகாக ஆடத்துவங்கியது. அப்போது பாட ஆரம்பித்த மயில் தன் மோசமான குரலை எண்ணி அழத்துவங்கியது. அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப்படுத்தி அருகில் சென்றது.

மயில் தனது வருத்தத்தை மைனாவிடம் கூற, மைனா மயிலிடம், நீ மிகவும் அழகாய் இருக்கிறாய், அதை நினைத்து நீ சந்தோஷப்பட்டிருக்கிறாயா என்றது. மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லை என்று பதில் கூறியது.

இதனை கேட்டு சிரித்த மைனா உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும், வலிமையும் இருக்கும். அது என்ன என்பதை உணர்ந்து அதனை மேம்படுத்த வேண்டுமே அன்றி எது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ, பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது.

இறுதியில் தன் தவறை உணர்ந்த மயில் மைனாவிற்கு நன்றி தெரிவித்தது.

வெள்ளி
சமூகவியல்

விசாகப்பட்டினத் துறைமுகம் இந்தியாவின் கிழக்கே வங்காள விரிகுடா கடற்கரையில் சென்னை துறைமுகத்திற்கும் கொல்கத்தா துறைமுகத்திற்கும் இடையே நரவா கெடா எனும் ஆறு கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ளது.இத்துறைமுகமானது வெளிப்புற துறைமுகம், உள் துறைமுகம் மற்றும் மீன்பிடி துறைமுகம் ஆகிய மூன்று துறைமுகங்களை கொண்டுள்ளது. இரும்புத் தாது, மாங்கனீசுத் தாது, எஃகுப் பொருட்கள், பொதுச் சரக்கு, நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவை இந்தத் துறைமுகத்தில் கையாளப்படும் முக்கிய பொருட்களாகும்.

இன்றைய செய்திகள்

08.11.19

* நயாகரா நீர்வீழ்ச்சி: 100 ஆண்டுகளுக்கு முன்பு 150 அடி ஆழத்தில் மூழ்கிய படகு. கனமழையால் வெளியே வந்தது.

* நியூசிலாந்து நாட்டில் கார்பன் வெளியீட்டைக் குறைக்க  ஜீரோ கார்பன் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

*  2018-19ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து ரூ.204.53 கோடி மதிப்புக்குத் தேங்காய் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

* லிப்ட் வசதி இருக்கிறது; 1962 எண்ணுக்கு போன் பண்ணுங்கள்!' - தேனிக்கு வந்துவிட்டது கால்நடை ஆம்புலன்ஸ்.

* மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2- 1 என்ற கணக்கில் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.

Today's Headlines

🌸 A boat that sank 150 feet deep 100 years ago in Niagara falls  came out due to heavy rain

 🌸Zero Carbon Bill has been passed to reduce carbon emissions in New Zealand.

 🌸The school Education Department  released the half-year examination schedule for 10th, 11th and 12th grades in Tamil Nadu.

 🌸In the year 2018-19 alone, coconut products valued at Rs 204.53 crore were exported from India.

 🌸 Vetenary Ambulance facility was provided in Theni. It has lift facility. Call number 1962 to get it's service.

 🌸Indian women's cricket team won the ODI series by 2-1 against the West Indies.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment