Pages

Tuesday, November 5, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.11.19

திருக்குறள்


அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:312

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

விளக்கம்:

ஒருவர் நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கையாகும்.

பழமொழி

Many a slip between the cup and the lip

 கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டொழுக்க பண்புகள்

1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.

2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.

பொன்மொழி

அறிவாளி என்பவர் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நிதானம் தவறாமல் பிறர்பால் நன்மை தவறாமல் வினைபுரிபவர் ஆவார்

____ஆதிசங்கரர்

பொது அறிவு

1. ஒரு சொட்டு இரத்தத்தில் எத்தனை சிவப்பணுக்கள் இருக்கும் ?

 சுமார் 30 கோடி.

2. சிவப்பு நிறத்தில் வியர்வையை வெளியேற்றும் விலங்கு எது ?

 நீர் யானை

English words & meanings

 • Yellow Fever - A viral infection spread by a particular species of mosquito. ஒரு குறிப்பிட்ட வகை கொசுவால் பரவும் மஞ்சள் காய்ச்சல்.

• Yawn - open wide the mouth for deep inhalation. கொட்டாவி

ஆரோக்ய வாழ்வு

பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது.பதநீரிலுள்ள சீனிச்சத்து உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தருகிறது.

Some important  abbreviations for students

*  N/A-Not Available /Applicable. 

 * LOL-Laughing out Loud

நீதிக்கதை

குரங்கு மற்றும் முதலையும்

ஒரு ஊருக்கு வெளியே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம். அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு ஒன்று உயிர் வாழ்ந்து வந்தது. ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து நாவல் பழம் மிகவும் ருசியானதா? எனக் கேட்டது.

குரங்கும்... முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள் என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது. முதலையும் பழத்தை ருசித்து விட்டு குரங்கிடம் மேலும் சில பழங்களை தன் மனைவிக்கு வாங்கிச் சென்றது. முதலையின் மனைவி அப்பழங்களை சாப்பிட்டு விட்டு முதலையிடம் இப்பழங்கள் இவ்வளவு இனிக்கிறதே! இதே பழத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த குரங்கின் குடல் எவ்வளவு இனிக்கும்! அது எனக்கு வேண்டும் என்றது.

முதலையும் குரங்கிடம் வந்து நயவஞ்சகமாக... குரங்கே.... நாவல் பழம் தந்த உனக்கு என் மனைவி விருந்திட விரும்புகிறாள்... வா.... என்றதும் குரங்கும் மகிழ்ந்து முதலையின் முதுகில் உட்கார்ந்து ஆற்றில் முதலையின் இருப்பிடம் செல்லத் தொடங்கியது. பாதி தூரம் வந்ததும்... இனி குரங்கால் நீரில் தனித்து ஓட முடியாது என முதலை.... முட்டாள் குரங்கே.... உண்மையில் விருந்து உனக்கல்ல. என் மனைவிக்குத் தான். அவள்தான் உன் குடலை சாப்பிட விரும்புகிறாள் என்றது.

சற்று நேரம் யோசித்த குரங்கு.... முதலையே அதை முதலிலேயே சொல்லக் கூடாதா.... நான் என் குடலை கழட்டி மரத்தில் அல்லவா வைத்திருக்கிறேன்..... திரும்ப மரத்திற்கு என்னைக் கொண்டு போ. குடலை எடுத்து மாட்டிக்கொண்டு வருகிறேன் என்றது.

முதலையும் யோசிக்காது.... குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது. வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு.... முட்டாள் முதலையே. குடலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..... நியாயமா? என்று கேட்டது. முதலையும் ஏமாந்து திரும்பியது.

புதன்
கணக்கு & கையெழுத்து

குழந்தைகள் தின வாழ்த்து அட்டை..

ரகு தனது குழுவில் உள்ளவர்களுக்கு வாழ்த்து அட்டை தயாரித்தான்.ஒரு அட்டை தயாரிக்க 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது.காலை 9.00 மணிக்கு ஆரம்பித்த வேலை 5 அட்டைகள் மற்றும் அதன் மேல் எழுத்து வேலைக்கு 2 நிமிடங்கள் சேர்த்து ஒரு வழியாக முடித்து விட்டான்..
கேள்வி : ரகு காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து எத்தனை மணிக்கு முடித்திருப்பான்
???
விடை:
5 × 20 =100 நிமிடங்கள்
100- 60 = 40
அதாவது, 1.40 மணிநேரம்
முடித்த நேரம்
9.00+ 1.40 + 0.02 = 10.42 மணிக்கு

கையெழுத்துப் பயிற்சி - 17



இன்றைய செய்திகள்

05.11.19

*கேரளாவில் பள்ளிகளை சுற்றி 50 மீட்டருக்கு ஜங்க் புட்கள் விற்கத் தடை.

*சீனாவில் தொடங்கியது சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி: ஷிச்சின்பிங் துவக்கி வைப்பு.

* பாகிஸ்தானை வாழிடமாகக் கொண்ட இசபெல்லின் வீட்டியர் பறவை, [Isabelline wheatear] முதன்முறையாகக் கோத்தகிரி பகுதியில் தென்பட்டுள்ளது.



*திருவையாறு அருகே அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியர்கள் மாணவர்களின் மனதில் நேர்மையை விதைக்கும் நோக்கத்தில் ஆள் இல்லா கடை திறந்துள்ளனர்.

* பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் லெவன் அணி.

* சாா்லோா்லக்ஸ் ஓபன் பாட்மிண்டன் சூப்பா் 100 சீரிஸ் போட்டியில் இந்திய இளம் நட்சத்திரம் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றாா்.

Today's Headlines

🌸 Junk food  sales was banned around 50mts in the schools  of Kerala.

 🌸 International importing exhibition was launched in China by Shichinping

🌸  Isabelline Wheatar bird which was the habitant of Pakistan, for the first time appeared at kothagiri in Tamilnadu

🌸 To sow the honesty in  the minds of the students the teachers of the government school near  Thiruvaiyaru  opened a shop without a sales person.

🌸 West Indies defeated the Afghanistan Leven Team in practice match

🌸  India's Lakshya Sen bagged the championship award in sarlorlux Open batminton Super 100 Series  .

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment