Pages

Wednesday, September 25, 2019

பள்ளி காலை வழிபாட்டுக் குழுவின் சிறப்பு நிகழ்வு - 25.09.19

அனைத்து ஆசிரியர்களும் தினமும் காலையில் தங்கள் அலைபேசியில் அதிகம் தேடும் செய்தி எங்களின் காலை வழிபாடு செயல்பாடுகள். இதனை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதற்கு என் குழு நண்பர்களே காரணம். பல சிரமங்கள் இருந்தாலும் தினமும் தங்களுடைய பதிவுகளை பதிவிட்டு, பிழை திருத்தம் செய்து இதனை சுமையாகக் கருதாமல் பெரும் கடமையாக எண்ணி செயல்படுத்தி வரும் என் அருமை குழு நண்பர்களுக்கு நன்றிகள் பல.....எங்களின் செயல்பாடுகளை அங்கீகரித்து பாடசாலை வலைதளத்தால் வழங்கப்பட்ட குரு விருதினை அனைவரின் சார்பாகவும் திருச்சியில் நடந்த நிகழ்வில் பெற்றுக் கொண்டேன்.இக்கௌரவத்தினை எங்கள் குழுவினருக்கு வழங்கும் பொருட்டு பல நாட்கள் காத்திருந்து பின் நேற்று நடைப்பெற்ற எங்களின் போதிமரம் ஒருநாள் கணினிப் பயிற்சியில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. எம் குழுவின் அன்பர்கள் அனைவருக்கும பாடசாலை வலைதளத்தின் சான்றிதழுடன் எனது அன்பளிப்பாக ஒரு சிறிய பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.  சென்னையில் இருந்து உதவிவரும் திருமதி.ரூபி பாக்கியம் ஆசிரியர் அவர்களுக்கு சென்னையில் நடைப்பெறற ஒரு நிகழ்வில் திரு.ஆசீர் ஜூலியஸ் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கோவை, பொள்ளாச்சி, சென்னை என பல பகுதிகளில் இருந்தாலும் ஒரே எண்ணத்தோடு ஒண்றிணைந்து இப்பணியினை திறம்பட செய்துவரும் என் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.... இதற்கு உறுதுணயாக இருந்து வரும் எல்லாம் வல்ல இறைவனுக்கும், எங்கள் அனைவரின் குடும்ப உறவுகளுக்கும், போதிமரம் மூர்த்தி ஐயா அவர்களுக்கும், தினமும் வழிபாட்டுச் செயல்பாடுகளை PDF ஆக மாற்றி தந்து கொண்டிருக்கும் மகிழ்ச்சி ஐயா அவர்களுக்கும், எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற ஆசிரிய நண்பர்களுக்கும் எங்கள் குழுவின் சிரம் தாழ்ந்த நன்றிகள்....... தொடர்ந்து பயணிப்போம் உங்கள் அனைவரின் ஆதரவுடன்...

No comments:

Post a Comment