Pages

Thursday, September 19, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.09.19

திருக்குறள்


அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

விளக்கம்:

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

பழமொழி

Haste is a fool's choice.

அவசரக்காரனுக்கு புத்தி மட்டு.

இரண்டொழுக்க பண்புகள்

1. அன்பே கடவுள் எனவே அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

2. தாழ்மை என்னை மேலே உயர்த்தும் எனவே பெரியோர், பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தாழ்மையுடன் இருப்பேன்

பொன்மொழி

விவேகத்துடன் செயல்லாற்றுபவர் எந்த தடைகளையும் தாண்டிவருவார்.குறித்த இலக்கை அடையும் வரை அயராது உழைக்க வேண்டும்.

--------அப்துல் கலாம்

பொது அறிவு

* விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணி யார்?

வாலண்டினா தெரஸ்கோவா

* விண்வெளியில் நடந்து சென்ற முதல் பெண்மணி யார்?

ஸ்விட்லானா இவ்கின்யெவ்னா சவிட்ஸ்கையா

English words & meanings

• thermometer -
an instrument used for measuring temperature
வெப்பமானி - வெப்ப அளவை அளக்க உதவும் கருவி.
மனித உடலின் வெப்பநிலை அளக்க உதவுவது மருத்துவ வெப்பநிலை மானி ஆகும்.
மூன்று வகை உண்டு.
மருத்துவ, ஆய்வக மற்றும் கால நிலை வெப்ப மானிகள்.

* textures - the feeling when you touch a cloth or something
இழை நயம்.

ஆரோக்ய வாழ்வு

பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள் நுரையீரல், சுவாசமண்டலம் வழியாக மார்புச்சளியை இருமல் மூலம் வெளியேற்றுகிறது .உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது .

Some important  abbreviations for students

* AN  -  Andaman and Nicobar Islands

* AP  -   Andhra Pradesh

நீதிக்கதை

குறையா? நிறையா?

ஒரு கிராமத்தில் ஒரு ஏழை வாழ்ந்து வந்தான். அவன் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானை குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்துகொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் ஆனது. கேலியைப் பொறுக்கமுடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்து ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். என் குறையை நீங்கள் சரிசெய்யுங்களேன் என்றது.

பானையே! நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? என்று அதன் எஜமானன் கேட்டான். உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுவில் பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். இறைவனுக்குப் பூஜை செய்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன் என்று கூறினான். இதைக் கேட்ட பானை அதன் வருத்ததை நிறுத்திவிட்டது. அடுத்தவர் பேச்சைப்பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத்தொடங்கியது.

நீதி :
மற்றவர்கள் பேசுவதை நினைத்துக்கொண்டு இருந்தால் நாம் நிம்மதியாக வாழமுடியாது.

இன்றைய செய்திகள்

19.09.2019

* இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பள்ளிக்கல்வி இயக்குனர்கள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

* பிளஸ் 1, பிளஸ் 2 பாட தொகுப்பில், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் செல்வதற்கான முதலாம் பாடப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், இரண்டுக்கும் தனித்தனியே பாடங்களை பிரித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

* 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி பெற்றார். கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்ததை அடுத்து ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றார்.



Today's Headlines

🌸 RKS Patharia has been appointed as the new Commander of the Indian Air Force.

 🌸The Government of Tamil Nadu has given order for the transfer of three School  Education Directors.

 🌸In plus 1 and plus 2 courses the combined  syllabus which enables the students to go for both  Engineering and Medicine has been removed .  Instead separate courses are given separately for both groups.
. 🌸India won the second T20 match against South Africa by 7 wickets.

 🌸 Indian wrestler Bajrang Bunia qualifies for the 2020 Tokyo Olympics.  He qualified for the Olympics after entering the semifinals of the World Wrestling Championships in Kazakhstan.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment