Pages

Sunday, August 18, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.08.19

திருக்குறள்


அதிகாரம்:தவம்

திருக்குறள்:263

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

விளக்கம்:

துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.

பழமொழி

A wild goose never lays a tamed egg.

புலிக்குப் பிறந்தது பூனையாகாது.

இரண்டொழுக்க பண்புகள்

1. எப்பொழுதும் உண்மை மட்டுமே பேசுவேன்.

2. என் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் அனைவரும் அவ்வாறே செய்ய ஊக்கவிப்பேன்.

பொன்மொழி

உற்சாகமாக இருக்கத் துவங்குவது தான்
வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்கான
முதல் அறிகுறி.
                         -  விவேகானந்தர்

பொது அறிவு

* எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?

 நைல் நதி.

* எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 நைல் நதியின் கொடை, நைல் நதியின் மகள்.

English words & meanings

Walrus - a gigantic marine mammal.
வால்ரஸ் ஆர்டிக்கில் வாழும் கடலினம். வளர்ந்த வால்ரஸ் 1360 கி. கி. எடை கொண்டது. ஆண் பெண் இரண்டிற்கும் தந்தம் உண்டு.

ஆரோக்ய வாழ்வு

புதினா கீரையில் நீர்ச்சத்து ,புரதம் ,கொழுப்பு ,கார்போஹைட்ரேட் ,நார்ப்பொருள் ,உலோகச்சத்துக்கள் ,பாஸ்பரஸ் ,கால்சியம் ,இரும்புச்சத்து ,வைட்டமின் ஏ ,நிக்கோட்டினிக் ஆசிட் ,ரிபோமினேவின்,தயாமின் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன .

Some important  abbreviations for students

* RJQ - Return Journey Quota       

 * RLWL- Running Line Waiting List

நீதிக்கதை

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே தாங்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.

ஒருநாள்-

அவர்கள் மரத்தால் ஒரு பெரிய வீடு கட்டத் தீர்மானித்தனர். அதற்கான நல்ல மரத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் காட்டுக்குப் போக முடிவு செய்தனர். அப்போது, அவர்களில் மிகவும் அதிபுத்திசாலி யான ஒருவன் சொன்னான்.

''நான் குதிரை வண்டியில் ஏறி முதலில் போகிறேன். நீங்க ளெல்லாம் பின்னால் வாருங்கள்!'' என்றான்.

எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டனர்.

அதிபுத்திசாலி குதிரை வண்டியில் ஏறி காட்டுக்குப் பாய்ந்து சென்றான். ஆனால், வழியில் அவன் குதிரைவண்டி ஒரு கல்லின் மீது ஏறியதால் கவிழ்ந்தது. அவன் கையிலிருந்த கோடாரி தூரத்தில் சென்று விழுந்தது. அவனும் ஆழமான ஒரு குழியில் விழுந்து விட்டான்.

குதிரை வண்டிக்குப் பின்னால் வந்த மற்ற அறிவாளிகள், அதிபுத்திசாலியின் கோடாரி வழியில் கிடப்பதைப் பார்த்தனர். அவர்களில் மிகச் சிறந்த அறிவாளி அவன்தான் என்பதால், அவன் கோடாரியை விட்டுச் சென்றதற்கு ஏதும் முக்கியமான காரணம் இருக்கும் என்று மற்றவர்கள் நினைத்தனர். அதனால், எல்லாரும் மரம் வெட்டுவற்காகத் தங்கள் கையில் எடுத்து வந்திருந்த கோடாரியை அப்படியே போட்டுவிட்டுத் தொடர்ந்து சென்றனர்.

காட்டுக்குச் சென்று வெட்டுவதற்கு ஏற்ற மரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், யார் கையிலும் கோடாரி இல்லையே, பிறகு எப்படி மரம் வெட்டுவது? எல்லாரும் ஒன்றாக அமர்ந்து இதற்கு என்ன வழியென்று சிந்தித்தனர்.

அங்கிருந்தவர்களில் முக்கியமான அறிவாளி சொன்னான்.

''நான் ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறேன். மரத்தை வெட்ட முடியவில்லை என்றாலும் நாம் மரத்தின் கிளையை ஒடிப்போம். இப்போது இருப்பதில் நான்தானே பெரிய அறிவாளி. அதனால் நான் முதலில் மரத்தில் ஏறி உறுதியான ஒரு கிளையைப் பிடித்துத் தொங்குகிறேன். அப்போது உங்களில் ஒருவர் என் காலைப் பிடித்துத் தொங்க வேண்டும். அவருடைய காலைப் பிடித்து மற்றொருவர் தொங்க வேண்டும். அப்படி நீண்ட சங்கிலி போல ஒருவர் காலை ஒருவர் பிடித்துத் தொங்கும் போது நம் பாரம் தாளாமல் கிளை ஒடிந்து கீழே விழும்!'' என்றான்.

அது மிகவும் நல்ல கருத்துதான் என்று எல்லாரும் ஏற்றுக் கொண்டனர். அவ்வாறு அந்த அறிவாளி பக்கத்திலிருந்த மரத்தில் ஏறி ஒரு உறுதியான கிளையைப் பிடித்து தொங்கினான். அவன் காலை மற்றொருவன் பிடித்துத் தொங்கி னான். அவன் காலை இன்னொருவன் பிடித்துத் தொங்கினான். இப்படியே எல்லாரும் ஒருவர் காலை ஒருவர் பிடித்துத் தொங்கினர். மிகப் பெரிய பாரத்தால் கிளை, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விடக்கூடிய நிலைக்கு வந்தது. அப்போது அறிவாளி சொன்னான்.

''நண்பர்களே, கிளை இப்போது ஒடிந்து விடும். அதற்கு முன்பு நான் இந்தக் கிளையை இன்னும் கொஞ்சம் பலமாகப் பற்றிக் கொள்கிறேன்!'' என்றான்.

கிளையை மேலும் வலுவாகப் பற்றிக் கொள்வதற்காக அவன் கையைச் சற்று அசைத்ததும் அவன் பிடி நழுவியது. எல்லாரும் கீழே விழுந்தனர். ஆனால், அந்த மரக்கிளையோ, முறியாமல் அப்படியே இருந்தது. இனி என்ன செய்வது என்று எல்லாரும் ஆலோசித்தனர். அந்தக் கூட்டத்தி லிருந்த வேறொரு அறிவாளி இப்படிச் சொன்னான்.

''நண்பர்களே, நாம் இந்த மரத்தின் கீழே தீ மூட்டுவோம். அந்த வெப்பத்தில் கிளை ஒடிந்து கீழே விழுந்துவிடும்!'' என்றான்.

எல்லாரும் அது ஒரு சிறந்த கருத்துத்தான் என்று ஏற்றுக் கொண்டனர். அந்த அறிவாளி அவனிடம் இருந்த ஒரே ஒரு தீப்பெட்டியை வெளியே எடுத்தான். ஆனால், அவனுக்கு ஒரு சந்தேகம். தீக்குச்சி ஏரியவில்லை என்றால் என்ன செய்வது? அவன் ஒரு தீக் குச்சியை உரசி பற்றி வைத்துப் பார்த்தான். அது எரிந்தது. ஆயினும் அடுத்த குச்சி எரியவில்லையென்றால் என்ன செய்வது? அவனுக்கு மீண்டும் சந்தேகம் வந்தது. அடுத்த தீக்குச்சியையும் அவன் பற்ற வைத்துப் பார்த் தான். அப்படி தீப்பெட்டியில் இருந்த எல்லா தீக்குச்சியும் தீரும்வரை அவன் உரசி உரசிப் பார்த்தான். கடைசியில் அவன் திருப்தியுடன் சொன்னான்.

''தீக்குச்சிகளெல்லாம் தீர்ந்துவிட்டன. ஆயினும் என்ன? எல்லா தீக்குச்சிகளும் நன்றாக எரியக்கூடியவைதான் என்று நமக்குத் தெளிவானது அல்லவா?'' என்றான்.

முன்பு மரத்திலிருந்து விழுந்த அறிவாளி, மற்றொரு கருத்தைச் சொன்னான்.

''நண்பர்களே, நான் முன்பு மரத்திலிருந்து கீழே விழுந்தபோது என் தலை கிளையில் மோதியது. அப்போது நான் நிறைய நட்சத்திரங்களையும், தீப்பொறிகளையும் பார்த்தேன். அது போன்ற தீப்பொறிகளை வைத்து நாம் இந்த மரத்தை எரிய வைக்க லாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் என் தலையில் மாறி மாறி அடிக்க வேண்டும். அப்போது நான் பார்க்கும் தீப்பொறிகளை நீங்கள் உடனே பிடித்துச் சேகரிக்க வேண்டும்!'' என்றான்.

நண்பர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். பிறகு அந்த அறிவாளியை மாறி, மாறி அடித் தனர். அடி வாங்கும்போது அவன் நிறைய நட்சத்திரங்களையும், தீப்பொறிகளையும் பார்த்தான். ஆனால், அதையெல்லாம் பிடித்து நண்பர்களிடம் கொடுப்பதற்கு அவனால் முடியவில்லை.

அவர்கள் மீண்டும் கூடி அமர்ந்து சிந்தித் தனர். அவர்களில் ஒருவன் அப்போது நல்ல படியாகச் சிந்தித்தான். அவன் சொன்னான்.

''நண்பர்களே, நாம் திரும்பிச் சென்று, வழியில் போட்டுவிட்டு வந்த கோடாரிகளை மீண்டும் எடுத்து வரலாம். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை!'' என்றான்.

அவ்வாறு அவர்கள் சென்று தங்கள் கோடாரிகளுடன் திரும்பி வந்தனர். தேவை யான மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றனர்.
தங்களது புத்திசாலித்தனத்தை நினைத்து தங்களை தாங்களே மிகவும் மெச்சிக் கொண்டனர்.

 திங்கள்

தமிழ்

தூய தமிழ் சொற்கள் அறிவோம்

கிரயம் -விலை
கோஷ்டி -குழாம்
சக்தி -ஆற்றல்
சக்கரவர்த்தி- பேரரசன்
சந்தேகம் -ஐயம்

இன்றைய செய்திகள்

19.08.2019

* தமிழகத்தில், ஆவின் பால் விற்பனை விலை,லிட்டருக்கு, 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. பால் கொள்முதல் விலையையும், அரசு அதிகரித்துள்ளது. புதிய விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.

* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  * கோவை பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையில் இருந்து ஆயக்கட்டு பாசனத்திற்கு வினாடிக்கு 120 கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஆழியார் அணையில் நீர் திறப்பால் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

*  அரசு  பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரண்டு பாடவேலைகள் ஒதுக்கீடு. 

* வேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை: தமிழக அரசு எச்சரிக்கை.

* நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

🌸 In Tamilnadu, the selling price of Avin milk has been raised by Rs 6 per liter.  The government has also increased the price of milk.  The new price hike will go into effect today.

 🌸Due to the atmospheric overlapping cycle, most areas in Tamil Nadu and New Delhi will experience moderate rainfall for the next two days, the Meteorological Department said. 
             
🌸120 cubic feet of water is opened per second for irrigation from Aliyar Dam near Coimbatore in Pollachi  .6,400 acres of field will get irrigation facilities.
     
🌸Allocation of two periods for library reading in government schools.
                                                     
🌸1000 fine or 6 months jail sentence for fast driving.
   
🌸Sri Lanka won the first Test against New Zealand by 6 wickets.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment