Pages

Sunday, August 4, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.08.19

திருக்குறள்


அதிகாரம்:புலான்மறுத்தல்

திருக்குறள்:253

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

விளக்கம்:

கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எண்ணாது.

பழமொழி

 The frog that talks is soon dead.

நுணலும் தன் வாயால் கெடும்

இரண்டொழுக்க பண்புகள்

1. நம் நாட்டின் பாரம்பரிய உணவுகளை தெரிந்து கொண்டு அவற்றை உண்டு என உடல்நலத்தை பாதுகாப்பேன்.

2. சுய சுத்தம், தலை முடி ஒழுங்காக வெட்டுதல் மற்றும் சரியான நேரத்திற்கு பள்ளி வருதல் போன்றவற்றை கடைபிடிப்பேன்.

பொன்மொழி

அன்றாட வாழ்வில் அனைவரையும் ஒரு புள்ளியில் இயங்க வைப்பது அன்புதான். தெய்வம் என்பதை  காணவேண்டும் என்றால் அன்பான இதயத்தால் தான் முடியும் ..
--- அன்னை தெரசா.

 பொது அறிவு

1. தமிழ்நாட்டில் எத்தனை ரயில்நிலையங்கள் உள்ளன?

 532

2.தமிழ்நாட்டில் எத்தனை தேசியநெடுஞ்சாலைகள் உள்ளன?

24

English words & meanings

Papaya - a perennial fruit plant with hollow stem
பப்பாளி மரம். அமெரிக்கா இதன் தாயகம். இதில் ஆண் மரம், பெண் மரம் மற்றும் இரு பால் மரங்கள் உண்டு. ஆண் மரம் கனி தருவதில்லை.

ஆரோக்ய வாழ்வு

ரோஜாப்பூ - தலைசுற்றல், கண்நோய் ஆகியவற்றை குணமாக்குகிறது.

Some important  abbreviations for students

• lat.   -   latitude.
 
•  long.    -    longitude

நீதிக்கதை

கடவுள் : ஏன் நீ எப்பொழுதும் சோகத்திலேயே முழுகி இருக்கிறாய்? சந்தோஷமாய் இருக்க இவ்வுலகில் எவ்வளவோ இருக்கிறது. அதெல்லாம் உன் கண்களுக்கு தெரியவில்லையா?

மனிதன் : அட போங்க சாமி! தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனை நடந்து விடுகிறது. அதுவே என் மனதை நாள் முழுவதும் அரித்து கொண்டிருக்கிறது. வேறு எந்த விஷயத்திலும் என் மனம் செல்ல மறுக்கிறது.

கடவுள் : ஓ! அப்படியா! இன்றைக்கு என்ன உன் பிரச்சனை?

மனிதன் :ஆபிஸில் மானேஜர் திட்டிவிட்டார்

கடவுள் : ஏன் திட்டினார்?

மனிதன் : என்னுடைய வேலையில் ஒரு சிறிய தவறு செய்து விட்டேன். அதனால் தான் திட்டினார்.

கடவுள் : தவறு செய்தால் திட்டத்தான் செய்வார்கள். அப்போது தான் அது நம் மனதில் ஆழமாய் பதியும். மறுபடியும் அந்த தவறை இழைக்க மாட்டோம்.

மனிதன் : அது சரி சாமி! இருந்தாலும் அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நாள் முழுவதும் என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது

கடவுள் : அதில் இருந்து வெளியில் வருவதற்கு நமக்கு பிடித்த, சந்தோஷம் தரும் செயல்களை செய்ய வேண்டும். கஷ்டம், துன்பம் எல்லா நாளும் வர தான் செய்யும். அதனால் நான் சந்தோஷமாக இருக்க மாட்டேன் என்று சொன்னால் உன் வாழ்நாள் முழுவதும் நீ சந்தோஷத்தையே பார்க்க முடியாது.வேரில்லாமல் மரம் இல்லை. அது போல் துன்பம் இல்லாத வாழ்க்கையும் இல்லை. அதையே எண்ணிக் கொண்டு நேரத்தை வீணடிப்பதும், மனதை காயபடுத்துவதும் முட்டாள் தனம். பூப்போல் இருக்க வேண்டிய மனதை, நீ பிச்சி எறிந்து காயபடுத்தலாமா??

மனிதன் : எனக்கு இப்ப எல்லாம் புரியுது சாமி. இனிமேல் நான் சந்தோஷமாக இருப்பேன். நடந்ததையே நினைத்து வருத்தப்பட மாட்டேன்.

திங்கள்
தமிழ்

தூய தமிழ் சொற்கள் அறிவோம்

சந்தர்ப்பம்   -  வாய்ப்பு சினேகம்.  -     நட்பு
சீதோசனம்.  -  தட்பவெப்பம்
சுதந்திரம்    -  விடுதலை
சுபாவம்    -   இயல்பு

இன்றைய செய்திகள்

05.08.2019

* 10-ம் வகுப்பு மாதிரி வினாத்தாளை www.tnscert.org என்ற இணையதளத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  மாதிரி வினாத்தாள் அடிப்படையில் தான் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* மும்பையில் மீண்டும் மிக கனமழை பெய்து வருவதால் புதிய ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

* 30 கிராம் எடையில் நீர் செயற்கைகோள் - 30-ஐ (வாட்டர் சாட் - 30) கண்டுபிடித்த கரூர் மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பை, சந்திராயன் 1 செயற்கைக்கோளின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வியந்து பாராட்டியிருக்கிறார்.

* வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 96 ரன் இலக்கை எட்டி இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

* இளம் நீச்சல் வீரர், வீராங்கனைகளை கண்டறிவதற்கான சென்னை மாவட்ட தேர்வு முகாம், ஆக.6ல் நடைபெறும்.இந்த முகாமில் பங்கேற்க  விரும்புபவர்கள், 1-1-2010ம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வு முகாம் ஆக.6ல் நேரு உள் விளையாட்டு அரங்கிலும், தொடர்ந்து அண்ணா நீச்சல் குள வளாகத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Today's Headlines

🌸 1. 10th model questions are published in the http://www.tnscert.org website. As per this model questionnaire only the quarterly, half-yearly and annual questions will be framed.

 🌸 2. As there is heavy rain again in Bombay a new Red Alert is declared.

🌸 Former Project Director of the Chandrayaan 1 satellite, MayilSamy Annadurai, has lauded the extraordinary discovery of Karur district government school students who have discovered the water satellite - 30 (Water Sat - 30) weighing 30 grams.

 🌸 India won the first T20 match against the West Indies by 96 runs.

 🌸 A selection camp for young swimmers both boys and girls will be held in Chennai camp on August 6th. To participate in this the participants should born on or after 1-1-2010. The selection process will be held in the inner stadium and after wards at the Anna Swimming pool area.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment