Pages

Monday, July 1, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.07.19

திருக்குறள்


அதிகாரம்:ஈகை

திருக்குறள்:229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

விளக்கம்:

பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

பழமொழி

Measuring  thrice before you cut once

ஒரு செயலை செய்யும் முன் பலமுறை யோசி

இரண்டொழுக்க பண்புகள்

1. நான் தான் நாளைய இந்தியாவை நிர்ணயிக்கப் போகிறேன். எனவே இப்பொழுதே சிறந்த பாரதம் உருவாக்க என் நடத்தை, எண்ணம் மற்றும் திறமைகளை சீர்தூக்கி வளர்த்துக் கொள்வேன்.

2. டி. வி. சினிமா போன்ற பொழுது போக்குகளில் என் கவனத்தை செலுத்தாமல் ஆக்க பூர்வமாக நேரத்தை செலவிடுவேன்.

பொன்மொழி

பாராட்டுகளையும் ,விமர்சனங்களையும் முறையாக கையாளும் போது மனிதன் மாமனிதன் ஆகிறான் .

M.C மேரிகோம்

பொது அறிவு

ஜூலை 2-இன்று விளையாட்டுப் பத்திரிக்கையாளர்கள் தினம்

1. பத்திரிக்கை துறைக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது எது? புலிட்சர் விருது. (அமெரிக்கா, நியூயார்க் நகரத்தில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தால் வழங்கப்படுகிறது.)

2.உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இருமுறை இடம்பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றவர் யார்? சச்சின் டெண்டுல்கர்.

English words & meanings

Quick - fast, விரைவாக

Quakers-a group of people with same intrest, நண்பர்கள் குழு

ஆரோக்ய வாழ்வு

வெள்ளைச்சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டியை உணவில் பயன்படுத்தினால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புத்தேய்மானம் ஏற்படாமல் தடுக்கும்.

Some important  abbreviations for students

BP - Blood Pressure

 ECG -ElectroCardioGram

நீதிக்கதை

பெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான். முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன்.

நீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா! இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே! என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா! பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார். அன்பு வெளிப்படும் முறை இதுவன்று. இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு?
என்று முனிவர் கூறினார். மன்னன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.

செவ்வாய்

English & Art

* Difference between  look,see and
watch

Look, see and watch are verbs that we use to talk about our sense of sight - using our eyes. But they have important differences in meaning.

* look (at)
When we look, we try to see. We make a special effort. We concentrate our eyes on something.

Look! It's snowing!
Look at this photo! Isn't it beautiful?
I'm looking but I don't see it.

* see
We use see to mean simply that an image comes into our eyes. It may not be deliberate. As soon as we open our eyes, we see things.

I can see a cloud in the sky.
I suddenly saw a bird fly in front of me.
Didn't you see Ram? He was waving at you.

* watch
With the verb watch, we are much more active. Watch is like look, but requires more effort from us. We watch things that are going to move or change in some way. And we watch the movements and changes.

Art 28

காணொலியை காண இங்கே கிளிக் செய்யவும்


இன்றைய செய்திகள்

02.07.2019

* வீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* கேரள மாநிலம் வயநாட்டில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான வரைபடத்தை, நகராட்சியில் ஒப்படைக்கும் போது, எந்த இடத்தில் மரக்கன்று நடப்படுகிறது என்பதை குறிப்பிடுவதுடன், மரக்கன்றுகள் நடவு செய்திருந்தால் மட்டுமே கட்டட அனுமதியும், கதவு எண்ணும் வழங்கப்படுகிறது.

* விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று  தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை நடக்கிறது.

* சென்னையில் நடைபெற்ற தேசிய யு-14 டென்னிஸ் தொடரின் சிறுவர் ஒற்றையர் பிரிவு பைனலில், மேற்கு வங்க வீரர் அருனவா மஜும்தாரும்,  சிறுமியர் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழக வீராங்கனை குந்தனாவும் முதலிடம் பிடித்தனர்.

* உலக்கோப்பைக் கிரிக்கெட் : இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றது.

Today's Headlines

🌸 Mr.Krishnan has been appointed as the Finance Secretary of the Government of Tamil Nadu   Who was former secretary of housing board

 🌸 When handling over the municipalities map of the construction of new buildings in Wayanad, Kerala State specifies where the tree should be planted and then building permit and door number is given only if the saplings are planted.

🌸 The Wimbledon Tennis Tournament is being held in London from yesterday till the 14th.

 🌸 In the boys singles final of the National U-14 tennis tournament in Chennai, Arunava Majumdar of West Bengal in boys category and in girls single Kundana of Tamil Nadu topped in the final.

 🌸World Cup Cricket: Srilanka won by 23 runs against Westindies.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment