Pages

Tuesday, June 25, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.06.19

திருக்குறள்


திருக்குறள்:225

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

விளக்கம்:
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பவரின் வலிமையைவிட, பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பவரின் வலிமையே சிறந்ததாகும்.

பழமொழி

All things come to those who wait

பொறுத்தவர் பூமி ஆள்வார்.

இரண்டொழுக்க பண்புகள்

1. உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும் எனவே என் உள்ளத்தில் நல்ல எண்ணங்களை எப்போதும் வளர்த்து கொள்வேன்.

2. நல்ல எண்ணங்கள் வளர்த்து கொள்ள நல்ல புத்தகங்கள் வாசிப்பேன்.

பொன்மொழி

விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பாளர்களும் வசிப்பிட சூழல்களே நிர்ணயிக்கின்றன.

---F.P.ஸ்மித்

 பொது அறிவு

ஜூன் 26- இன்று சர்வதேச  சட்டவிரோத போதை மருந்து கடத்தல் எதிர்ப்பு தினம்.

1.போதை மருந்து கடத்தலுக்கு இந்தியாவில் வழங்கப்படும் தண்டனை என்ன?

10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை ,அபராதம் அல்லது மரண தண்டனை.

2.புற்றுநோய் சிகிச்சை செய்ய பயன்படும் மின்காந்த அலைகள் எவை?

காமா கதிர்கள்

English words & meanings

*Mass - a lot of something or people, பெருந்திரள்

*Mention - refer or suggest something or some people, குறிப்பிட பட்டது.

ஆரோக்ய வாழ்வு

முருங்கை இலையில்  வாழைப்பழத்தை விட  3  மடங்கு பாெட்டாசியம்,கேரட்டை விட  4  மடங்கு வைட்டமின்  ஏ, பாலை விட 4  மடங்கு  கால்சியம் உள்ளது.

Some important  abbreviations for students

* SMS - Short Message Service

*  ISO - International Organization for Standardization

நீதிக்கதை

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.

எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.

என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?

கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.

உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்…வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?”

“ஆ.. நல்ல யோசனை… அப்படியே செய்வோம்…”

நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.

தலை…!

வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு.

அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!

துணைத் தளபதி வந்தான். ‘நாம் வென்றுவிட்டோம்… கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா…” என்றான் உற்சாகத்துடன்.

“ஆமாம்… உண்மைதான்” என்படி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.

நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!

புதன்

கணக்கு & கையெழுத்து

புதிரோடு விளையாடு

கீழ்கண்ட எண் தொகுப்பில் தலைகீழாக பார்த்தாலும் தன் மதிப்பை மாற்றாத எண் எது??
A) 889
B) 996
C) 689

விடை: C

கையெழுத்துப் பயிற்சி - 3



இன்றைய செய்திகள்

26.06.2019

* தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல்  நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

* தமிழகத்துக்குரிய ஜூன், ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

* இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் நியமனம்.

* ஹாலே ஓபன் டென்னிஸ்: பெல்ஜியம் வீரர் டேவிடை வீழ்த்தி 10-வது முறையாக ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

* உலக கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

🌸The Election Commission has announced that the Rajya Sabha elections will be held on July 18 for 6 vacant seats in Tamil Nadu.

 🌸 The Cauvery Management Commission has ordered the Karnataka government to fully open the waters of Tamil Nadu in June and July.

 🌸 K. Natarajan from Tamil Nadu appointed as the new Director of the Indian Coastal  Guard.

 🌸 Halle Open Tennis: Roger Federer won the championship for the 10th time, defeating Belgian player David.

 🌸World Cup Cricket: Australia won by 64 runs against England.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment