Pages

Sunday, June 30, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.07.19

திருக்குறள்


அதிகாரம்:ஈகை

திருக்குறள்:228

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

விளக்கம்:

ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?

பழமொழி

Appearance is deceitful.

உருவத்தை கண்டு ஏமாறாதே

இரண்டொழுக்க பண்புகள்

1. நான் தான் நாளைய இந்தியாவை நிர்ணயிக்கப் போகிறேன். எனவே இப்பொழுதே சிறந்த பாரதம் உருவாக்க என் நடத்தை, எண்ணம் மற்றும் திறமைகளை சீர்தூக்கி வளர்த்துக் கொள்வேன்.
2. டீ. வி. சினிமா போன்ற பொழுது போக்குகளில் என் கவனத்தை செலுத்தாமல் ஆக்க பூர்வமாக நேரத்தை செலவிடுவேன்

பொன்மொழி

வெற்றி யின் தூரம் ஒரு பொருட்டல்ல, நம்  கால்கள் உறுதியுடன் நடக்கத் தயாரானால்  பாதைகள்  கண்முன் தோன்றும் .

முல்லா சிந்தனைச்சிற்பி

பொது அறிவு

ஜூலை 1- இன்று தேசிய மருத்துவர்கள் தினம் மற்றும் தேசிய தபால்  ஊழியர்கள் தினம்.

1. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (புதுக்கோட்டை மாவட்டம்)

2. உலகில் அதிக தபால் நிலையங்கள் உள்ள நாடு எது?
இந்தியா.

English words & meanings

Palm - a tree, inside part of hand
உள்ளங்கை, பனை

Parallel - lines or path run apart in a same distance, இணை கோடுகள்

ஆரோக்ய வாழ்வு

தினம் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டுவந்தால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.

Some important  abbreviations for students

* NOL - Net Operating Loss

* HSA - Health Savings Account

நீதிக்கதை

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.

“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”

“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.

கடவுள் சிரித்தார்.

“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”

“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”

கடவுள் சொன்னார்…

“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.

பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…

எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!

சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”

கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.

“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”

-மீண்டும் கேட்டான்.

கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…

“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவுக்கு நடந்து கொள்.

வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…

ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.

எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்!

நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்…  ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…

நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…

பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.

இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.

ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!

அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…

நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”

-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள். அவரது கதவுகள் மூடின…

தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்… விழித்தெழுந்தான் அவன்!

திங்கள்

தமிழ் & பாடல்

*தூய தமிழ் சொற்கள் அறிவோம்*

* உபயோகம் - பயன்   *உற்சாகம் - ஊக்கம்
* கலாச்சாரம் -   பண்பாடு     
*கஷ்டம் - தொல்லை, துன்பம்

பாடல்

'தமிழுக்கும் அமுதென்று பேர்'

பாடலைக் காண இங்கே கிளிக் செய்யவும்

இன்றைய செய்திகள்

01.07.2019

* தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகமும் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

* தமிழ்மறவன் பட்டாம்பூச்சி இனத்தை தமிழக அரசு சின்னமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

* ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரித்துள்ளது; இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

* உலகில் ஆபத்தான 7 மலைச் சிகரங்களை சென்றடையும் சவால் முயற்சியில் ஈடுபட்ட இந்தோ-திபத்து எல்லைப் பாதுகாப்பு படை வீராங்கனை அபர்ணா குமார் தனது சாதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

* பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

🌸Mr.K. Shanmugam was sworn in as the new Chief Secretary of Tamil Nadu and Mr.J.K Thripaathi as the new DGP of Law and Order.

 🌸The Tamilnadu Government has declared the Tamilnadu butterfly as a symbol of the Tamil Nadu Government.

 🌸Temperature has risen to unprecedented levels in European countries;  The government has warned people to be cautious.

 🌸Aparna Kumar has successfully completed the Indo-Tibetan Border Security Force's heroic effort to challenge the world's 7 deadliest mountain peaks.

 🌸Rahul Dravid has been appointed as the president of the National Cricket Academy in Bangalore.

 🌸 World Cup Cricket: England won by 31 runs against India.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment