Pages

Sunday, March 17, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.03.19

திருக்குறள்


அதிகாரம்:புறங்கூறாமை

திருக்குறள்:186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்.

விளக்கம்:

அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

பழமொழி

When the cat is away, the mice will play

ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை

இரண்டொழுக்க பண்புகள்
 1. கூட்டு முயற்சி வேலையை பகுத்து வெற்றியை கொடுக்கும்.

2. எனவே மற்றவர்களுடன் கூடி வாழ்ந்து எம் பள்ளி, எனது ஊர் மற்றும் என் நாடு சிறக்க உழைப்பேன்.

பொன்மொழி

விஞ்ஞானம் என்னும் அழியா ஒளி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது.

கார்ல் மார்க்ஸ்

பொது அறிவு

1.கிரஸ்கோகிராப் (crescograph)என்ற கருவி எதற்கு பயன்படுகிறது?

 செடிகளின் வளர்ச்சி

2. பார்த்தோ மீட்டர் (fathometer)என்ற கருவி எதற்கு பயன்படுகிறது?

 கடலின் ஆழத்தைக்   கண்டறிய.

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

சாயம் பூசிய பச்சை பட்டாணி



1. பச்சை பட்டாணியை நாம் பாக்கெட்டில் விற்பதை பார்த்திருக்கிறோம். அதன் நிறத்தை கூட்டுவதற்காக அதை சாய நீரில் போட்டு எடுக்கின்றனர். இதை பலமுறை சுடுநீரில் போட்டு அலசினாலும் இதன் சாயத்தை போக்குவது கடினம்.

2. எனவே பாக்கெட்டில் உள்ள பட்டாணியை வாங்குவதை முற்றிலும் தவிர்ப்பது நன்று. ஏனெனில் இவ்வகை சாயங்கள் நம் குடல்களில் ஒட்டிக்கொண்டு பல தொந்தரவுகளை தரவல்லது.

3. எனவே மேலுள்ள படத்தில் காட்டியவாறு காயுடன் உள்ள பட்டாணியை வாங்கி தோல் நீக்கி பயன்படுத்துவது மிகவும் நல்லது. நம் வேலைகளை எளிதாக்குவதாக எண்ணி இவ்வகை பொருள்களை வாங்குவோமானால் நமது உடல்நலம் கெடுவது உறுதி.

English words and Meaning

Direction.  திசை,வழி
Miracle
அற்புதம்,அதிசயம்
Probability.     வாய்ப்பு
Thrift.               சிக்கனம்
Labour.வேலை,உழைப்பு

அறிவியல் விந்தைகள்

ஆரோக்கியம்
*நாம் சில நிமிடங்களில் உண்ணும் உணவு முழுவதும் சீரணிக்க பட்டு சத்துக்கள் நம் உடலில் சேர 12 மணி நேரம் ஆகும்.
* நம் உடலின் பல செயல்பாடுகளுக்கு இரும்பு சத்து தேவை. இது முருங்கை கீரை, பேரீச்சம்பழம் மற்றும் காய்ந்த கருப்பு திராட்சையில் அதிகம் உள்ளது.
*உலக இறப்பின் 10% உணவு நச்சால் ஏற்படுகிறது.
* கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் அதிக நீர் சத்துள்ள காய்கறிகள் குளுமையான உணவுகளை உண்ண வேண்டும்.

Some important  abbreviations for students

* IIT   -  Indian Institutes of Technology

* INSAT   -   Indian National Satellite

நீதிக்கதை

ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, “என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்” என்று கத்தியது.

“மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?” என்றாள்.

ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது “நில் நில் ஓடாதே’ உன்னுடன் நானும் வருகிறேன்” என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி.

“அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்” என்றது, நிலக்கரி.

“என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்”. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று.

“சரி, வா போகலாம்” என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன.

மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

“இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்” என்றது, நிலக்கரி.

“அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்” என்றது பட்டாணி.

“நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்” என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல்.

முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன.

“ஷ்..ஷ்..ஷ்…”தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது.

அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன.

அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன.

தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார்.

இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது.

இன்றைய செய்திகள்
18.03.2019

* கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். அவருக்கு வயது 63.

* நாட்டின் முதல் லோக்பால் தலைவராகிறார் முன்னாள்  உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர போஸ்.

*  கீழடி அகழாய்வு ஆராய்ச்சி அதிகாரி அமர்நாத்தை 15 நாளில் தமிழகத்துக்கு மாற்ற வேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவு.

* ஆசிய இளைஞர் தடகளம் சென்னை வீராங்கனை தபிதா 2 தங்கம் வென்று சாதனை.

* ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன் வரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்திலும், பந்துவீச்சில் பும்ரா தொடர்ந்து முதலிடத்திலும் இருந்து  வருகின்றனர்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸Goa Chief Minister Manohar Parrikar passed away. He is 63 years old.

🌸Former Supreme Court judge Pinagi Chandra Bose is going to be the India's first Lokpal leader.

🌸Kiizhadi  excavation research officer Amarnath should be transferred to Tamil Nadu within15 days ordered by Supreme

🌸 In Asian Youth Athletics Chennai player Thabitha Won  2 gold and create a record

🌸India's captain Virat Kohli has been ranked as number one batman in the ICC ,ODI Player Rankings for the ODI series and Bumrah as the first in the bowling.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment