Pages

Monday, March 11, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.03.19

திருக்குறள்


அதிகாரம்:புறங்கூறாமை

திருக்குறள்:181

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது.

விளக்கம்:

அறநெறியைப் போற்றாமல், அவ்வழியில் நடக்காமல் இருக்கின்றவர்கள் கூட, மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது.

பழமொழி

Yesterday never comes

கடந்து போன காலம் கரணம் போட்டாலும் வராது.

இரண்டொழுக்க பண்புகள்

 1. எனது உணவானது விவசாயி, பாதுகாப்பவர், விற்பவர் மற்றும் சமைப்பவர் உழைப்பில் வருகிறது.
2. எனவே உலகில் உணவு  இல்லாமல் நிறைய பேர் இருக்கும் போது உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி

நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது.

   - காமராஜர்

பொது அறிவு

1. இந்தியாவின் முதல் பெண் காவல்துறை தலைமை இயக்குனர் (DGP)யார்?

 கஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா

2. இந்தியாவின் முதல் பெண்   இந்திய  ஆட்சிப்பணி அதிகாரி(IAS) யார்?

அன்னா ராஜம் மல்ஹோத்ரா

உணவை விஷமாக்கும் மைதா



1. இரத்த சர்க்கரையின் அளவினை அதிகப்படுத்தும்
மைதா வகை உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் கொண்டது. இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது உங்களின் இரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும்.

2. மைதா வகை உணவுகளை அதிகம் எடுத்து வந்தால் உங்கள் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு உடல் பருமன், இருதய கோளாறு, இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளை கொண்டு வரும்.

3. மைதாவில், கோதுமையில் உள்ள அளவுக்கு நார்ச்சத்து இல்லை . எனவே இதனை உண்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் பிரச்சினை உண்டாகும்.

4. மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். ஏனெனில் இதில் ஏராளமான இரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளன.

English words and Meaning

Shunt   தவிர், திருப்பு
Strife
சண்டை, விவாதம்
Minority.  குறைந்த எண்ணிக்கையில்
Detect
துப்பறி,கண்டுபிடி
Costly. விலை அதிகமான, மதிப்புமிக்க

அறிவியல் விந்தைகள்

சூரியகாந்தி பூ (Helianthus annuus )
*இது அமெரிக்க நாடுகளில் உருவான ஆண்டுத் தாவரங்கள் ஆகும். இவை மிகப்பெரிய பூங்கொத்து உடையவை.
*இதில் பூ என அழைக்கப்படுவது உண்மையில் பெரும் எண்ணிக்கையிலான சிறிய பூக்கள் ஒன்றாக்கப்பட்ட கொத்தாகும் முறையாகக் கூறுவதாயின் கூட்டுப் பூ
*சூரியகாந்திக் கொத்துக்குள் உள்ள சிறுபூக்கள் சுருளி அமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்(இதை கணிதத்தில் ஃபிபனாச்சி எண்கள் என்று கூறுவர்)
*மொட்டு நிலையிலுள்ள சூரியகாந்திகளே சூரியனை நோக்கி திரும்பும் தன்மை உடையது.

Some important  abbreviations for students

* ICC   -   International Cricket Council

* ICDS   -   Integrated Child Development Service

நீதிக்கதை

கல்லில் சிலை வடிக்கும் சிற்பி ஒருவன் ஒரு தேவதையின் சிலையை வடித்துக் கொண்டிருந்தான். அற்புதமாக தத்ரூபமாகத் தோற்றமளித்த அந்தச் சிலை வடித்து முடித்த கணம் ஒரு மின்னல் நேரத்தில் உயிர் பெற்றது. தேவதை மகிழ்ச்சியுடன் சிற்பியின் கலைத் திறனைப் பாராட்டி வேண்டிய வரம் ஒன்று கேட்குமாறு சொன்னது.

சிற்பிக்கு வல்லவர்களுக்கு வல்லவனாக வேண்டும் என்ற வெகுநாள் ஆசை. அவன் அதை தேவதையிடம் சொன்னான். தேவதை அன்புடன் சிரித்துக் கொண்டே “சிற்பியே! நன்கு சிந்தித்துத்தான் கேட்கிறாயா?” என்று கேட்டது. சிற்பியும் மிகுந்த ஆவலுடன் “ஆம்!” என்றான்.

தேவதை “சரி! அடுத்த இரண்டு நாட்களுக்கு நீ யாரை அல்லது எதை வல்லவன் என்று நினைக்கிறாயோ அதுவாகவே மாறிவிடுவாய்” என்று வரம் அளித்து விட்டு அதே மின்னல் வேகத்தில் மறுபடியும் சிலை வடிவிற்குப் போய் விட்டது,

சிற்பி திடீரென்று நிகழ்ந்த இந்த நிகழ்வைப் பற்றி நம்புவதா வேண்டாமா என்று தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தான்.

சூரியன் உச்சிக்கு வந்து தகித்துக் கொண்டிருந்தது. சிலை வடிக்கும் கருங்கற்பாறை கொதித்தது. கல்லைக் கொத்தும் உளி கொதித்தது. சிற்பியின் உடலெல்லாம் வியர்த்து வழிந்தது. சிற்பி “இந்த சூரியன் மிகச் சக்தி படைத்தவனாக இருக்கிறானே. எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறானே! இவன்தான் மிக வல்லவனாக இருக்க வேண்டும்” என்று நினைத்தான். என்ன ஆச்சரியம்! உடனே அவன் தேவதை கொடுத்த வரத்தின் சக்தியால் சூரியனாகவே மாறிவிட்டான்.

சிறிது நேரம் உலகைச் சுற்றி வந்து தனது சக்தியால் ஆனந்தமாக கண்ணில் பட்ட எல்லாவற்றையும் தகிக்கச் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு இடத்தில் மேகங்கள் சூழ்ந்திருந்தன. அவை சூரியனின் கதிர்களை மறைத்தன. ஆகவே அவை மறைத்த இடங்களை சூரியக் கதிர்கள் சென்றடைய முடியவில்லை. சூரியனாக இருந்த சிற்பி, தன் மிக உக்கிரமான கதிர்களை அந்த மேகங்கள் மேல் செலுத்திப் பார்த்தான். அந்தக் கருமேகக் கூட்டங்கள் அசைவதாக இல்லை. “என்ன… இந்த மேகக் கூட்டங்கள் சூரியனின் சக்திமிக்க கதிர்களையே மறைக்கும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றனவே” என்று நினைத்தவுடன் அவன் அந்தக் கருமேகங்களாக மாறிவிட்டான்.

சிறிது நேரம் மகிழ்ச்சியாக சூரியக் கதிர்களை மறைத்துக் கொண்டு ஆனந்தப் பட்டுக் கொண்டிருந்தான். அப்போது பலமாகக் காற்றடித்தது. அந்தக் காற்று மேகக் கூட்டங்களை இப்படியும் அப்படியுமாக அலைக்கழித்தது. சிற்பி எவ்வளவு முயன்றும் காற்றின் வேகத்திற்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை. “சூரியனின் கதிர்களை மறைக்கும் மேகத்தையே செலுத்தும் காற்று எவ்வளவு வல்லமை படைத்ததாக இருக்க வேண்டும்” என்று நினைத்தான். அந்தக் கணமே அவன் காற்றாக மாறிவிட்டான்.

காற்று வடிவில் சிற்பி தென்றலாகவும், புயலாகவும் எண்ணப் படி மாறி மாறி உலகைக் கலக்கிக் கொண்டிருந்தான். மிகவும் வல்லமை படைத்தவனாகத் தன்னைப் பற்றி எண்ணி எண்ணி நினைத்த இடத்திற்கெல்லாம் சடுதியில் சென்று மகிச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு முறை அப்படிக் கடும் புயலாக மாறிச் சென்று கொண்டிருந்த வழியை மறித்துக் கொண்டு ஒரு நெடிதுயர்ந்த மலை நின்று கொண்டிருந்தது. எவ்வளவோ உக்கிரமாக முட்டி மோதிப் பார்த்தும் கடும் புயலாய் வடிவெடுத்திருந்த சிற்பியால் அந்த மலையைக் கடந்து செல்ல முடியவில்லை. “அட.. இந்த மலைக்குக் கடும் புயலையும் மிஞ்சும் சக்தி இருப்பது முன்னமேயே நமக்குத் தெரியாமல் போய் விட்டதே!” என்று நினைத்த மாத்திரம் அவன் ஒரு மலையாக மாறிவிட்டான்.

அப்போது மற்றொரு சிற்பி அந்த மலை மேல் மெதுவாக ஏறி வந்தான். அவன் ஒரு இடத்தில் உள்ள மலையின் பாறைகளைத் தேர்ந்தெடுத்து தன் உளியையும் சுத்தியலையும் கொண்டு பாறையைப் பிளந்து சிலை வடிக்க ஆரம்பித்தான். மலை வடிவில் இருந்த சிற்பி “சக்தி வாய்ந்த மலையின் பாறைகளையே பிளக்கும் சிற்பிதான் மலையை விட வல்லவன்” என்று நினைத்தான்.

தேவதையின் வரம் பாக்கியிருக்கிறதே! அதனால் அப்படி நினைத்த மாத்திரத்தில் பழைய படி அவன் தன் சுய உருவை அடைந்து விட்டான்.

சுய உருவிற்கே திடீரென்று திரும்பி விட்ட அவனுக்கு இப்போது மூளைக்குள் ஏதோ பொறி தட்டியது போல் இருந்தது. நிதானமாக அமர்ந்து, தன் அனுபவங்களை நினைத்துப் பார்த்தான்.

ஒவ்வோருவருக்கும் ஒரு தனித்துவமும் அதைச் சார்ந்து வல்லமைகளும் இருப்பதை அறிந்து கொண்டான். அனைவருக்கும் வல்லவனாக் விளங்க வேண்டும் என்ற நினைப்பைக் கை விட்டான். தன் வல்லமைகளைப் முடிந்த வரை பெருக்கிக் கொண்டு அவற்றின் மூலம் உலகிற்கு உப்பாக விளங்குவதே சிறந்தது என்று நினைக்க ஆரம்பித்தான்.

தேவதை அவன் முன் திரும்பவும் தோன்றி அவனுக்கு நிறையப் பரிசுகளை மிக மகிழ்ச்சியுடன் வழங்கியது.

இன்றைய செய்திகள்
12.03.2019

* நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* அந்தமான் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.

* வடகிழக்கு பருவமழை பொய்த்து வருவதால் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 136 அடியிலிருந்து 114 அடியாக குறைந்துள்ளது.

* ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் சீன வீராங்கனை சென் யூபே 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் தாய் ஜூ யிங்கை சாய்த்து ‘சாம்பியன்’ பட்டத்தை தட்டிச்சென்றார்.

* பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தகுதி பெற்றார்.

Today's Headlines
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸The Supreme Court has directed the Central and State Governments to respond to the judgment of the Green Tribunal over the Neutrino Research Center.

🌸 Because of the earthquake that occurred in the Andaman Islands today, people were panicked by the shaking of buildings.

🌸Mullai Periyar dam water level has fallen from 136 feet to 114 feet due to the failure of Northeast monsoon rainfall.

🌸In the UK  Badminton, Chen Yube won Thai Zhu Ying by 21-17, 21-17  and won the Championship title

🌸 Indian  Brinsesh Gunasewaran qualifies to play in PNB Pariba open  men's singles third round  tennis tournament

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment