Pages

Thursday, March 7, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.03.19

மார்ச் 8

சர்வதேச பெண்கள் தினம். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் சம வேலைக்கு சம ஊதியம், 8 மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை  உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினர். பலவித போராட்டங்களுக்குப் பின் பிரெஞ்சு அரசன் வாக்குரிமை, அரசவை குழுக்களில் இடம்பெற உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கினான். அத்தினமே பெண்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வரலாறு அறிய

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D

திருக்குறள்

அதிகாரம்:வெஃகாமை

திருக்குறள்:178

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

விளக்கம்:

தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.

பழமொழி

Mother and mother land are greater than the heaven

தாயும்,தாய் நாடும் சொர்க்கத்தை விடச் சிறந்தவை.

இரண்டொழுக்க பண்புகள்

1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.
2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி

எந்தக் காரியத்தையும் உற்சாகத்தோடு செய்கிறவன், தன் நோக்கத்தை தவறுவது அபூர்வம்.

           - வால்மீகி

பொது அறிவு

1.ஐநா சபை அறிவிப்பின் படி எந்த ஆண்டு முதல் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது?

 1975 மார்ச் 8

2. 2019 மகளிர்  தின கொண்டாட்டத்தின் கருப்பொருள் என்ன?

 "சமமான சிந்தனை ஸ்மார்ட் உருவாக்க மாற்றத்திற்கான புதுமை"

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

உளுந்து களி



1. உளுந்து புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டதாகும். உளுந்து களி சாப்பிட்டு வருவதால் குடலில் இருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது.

2. சீத பேதி எனப்படும் மிக கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் உளுந்து களியை சாப்பிடுவதால் வயிற்று போக்கை நிறுத்தி, உடலுக்கு பலத்தை சேர்க்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.

3. உளுந்து களியை அவ்வப்போது சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு உளுந்தில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து சாப்பிடும் உணவுகளில் இருக்கும் சத்துக்களை உடலின் சேர்த்து, ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை சரியான விகிதத்தில் வைத்து, நீரிழிவு பாதிப்பு கடுமையாகாமல் காக்கிறது.

English words and Meaning

Hallticket. நுழைவுச்சீட்டு
Passport   கடவுச்சீட்டு
Individual  தனிப்பட்ட,
Shortcut.   குறுக்கு வழி
Perfection முழுமையாக

அறிவியல் விந்தைகள்

பலா
*பலாப்பழம்  அல்லது சக்கப்பழம் பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம்.
*மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும்.
*உலகின் சில இடங்களில் இது 'பழங்களின் அரசன்' என்று போற்றப் படுகிறது.
*இது  இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் முதன் முதலில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது
* இது தமிழ் இலக்கியங்களில் முக்கனிகளில் ஒன்றாக உள்ளது.

Some important  abbreviations for students

* IAAI   -  International Airport Authority of India

* IAF   -   Indian Air Force

நீதிக்கதை

தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன.

குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான்.

“அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?”

தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும்.

“நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகப் படுத்திக் கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு”

குட்டி திரும்பவும் கேட்டது. “அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக் கொள்ள மூடி இருக்கே? மத்த மிருகத்துக்கு அப்படி இல்லையே. அது ஏன்”

தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது.

“பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண்ணுலயும் மூக்குலையும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு”

குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது. “இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?”

“அது கண்ணு, மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான்”. பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம்.

“பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே. அது ஏன்?”. இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி.

அம்மா ஒட்டகம் சொன்னது. “பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா?”

இப்போது குட்டி பட்டென்று கேட்டது. “அம்மா! இதையெல்லாம் வைத்துக் கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்.

இன்றைய செய்திகள்
08.03.2019

* இந்தியாவில் விரைவில் அழகிய வடிவில் புதிய ரூ.20 நாணயம் புழக்கத்தில் விடப்பட உள்ளது.

* புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் புகழ்பெற்ற ஈரோடு ரக மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

* சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் செங்கோட்டையில் அருங்காட்சியகம்
திறக்கப்பட்டுள்ளது.

* வேகமாக முன்னேறி வரும் நகரத்திற்கான விருது பெற்றது சென்னை மாநகராட்சி : அகில இந்திய அளவில் 61வது இடம் பெற்றுள்ளது.

* சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி அணியை வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸 The new  20  RS coins will be released in India in a beautiful form soon.

🌸A geodetic code has been given to the legendary Erode turmeric that destroys cancer cells.

🌸 The museum at Chenkottai is worth paying respect to freedom fighters was
Open.

🌸 Chennai City Corporation is been awarded as the fastest growing city in the country .Ranks with 61TH place in India

🌸 In the Champions League soccer season, the PSG was defeated by Manchester United team and advanced to quarter-finals.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment