Pages

Monday, March 4, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.03.19

திருக்குறள்


அதிகாரம்:வெஃகாமை

திருக்குறள்:175

அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

விளக்கம்:

யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால், ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?

பழமொழி

The proof of the pudding is in the eating

அப்பம் வெந்தது பிட்டுப் பார்த்தால் தெரியும்

இரண்டொழுக்க பண்புகள்

1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.
2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்

பொன்மொழி

எல்லா நன்மைக்கும் தாயாக இருப்பது துணிவு ஒன்றே. கல்வி, செல்வம், வீரம் என எல்லாவற்றையும் துணிவால் பெற முடியும்.

   - பாரதியார்

பொது அறிவு

1.முதல் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?

 கோலாலம்பூர்- மலேசியா (1966)

2. பத்தாவது உலக தமிழ் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

  சிகாகோ- அமெரிக்கா( ஜூலை 2019)

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

பனங்கருப்பட்டி



1. பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

2. கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.

3. சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து  சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்.

English words and Meaning

Approach. நெருங்கு, அணுகுமுறை

Background பின்புறம்,          மறைவிடம்

Comfort   சுகமான, ஆறுதல்

Decision முடிவு, நிலைப்பாடு

Enrichment. வளமாக்குதல், மேம்படுத்துதல்

அறிவியல் விந்தைகள்

இழுதுமீன் அல்லது ஜெல்லி மீன்
*கடல் இழுதுகள் அல்லது ஜெல்லி மீன்  என்பது குழியுடலிகள் இனத்தைச் சேர்ந்த கடலில் வாழும் ஒரு உயிரினமாகும். *இதனைச் சொறிமீன், கடல்சொறி எனவும் அழைப்பர். மீன் என்று பரவலாக அழைக்கப்பட்டாலும் இவை மீன் அல்ல.
 *கடல் உயிரினங்களிலேயே அழகானதும் ஆட்பறிக்கக்கூடியதுமான உயிரினம் இழுதுமீன் ஆகும்.
*இவை கடலின் ஆழப்பகுதிகளில் காணப்படும் அவை கரையில்
*ஒதுங்கிக் கிடக்கும்போது பார்வைக்கு மிக அழகான உயிரினமாகவும், கடற்பகுதிகளில் உலாவிக்கொண்டிருக்கும்போது மிகுந்த தீங்கு விளைவிக்கக்கூடிய உயிரினமாகவும் இருக்கின்றன.
*இதுவரை 2000இனங்கள் கண்டறியப் பட்டுள்ளன.

Some important  abbreviations for students

* HIV   -  Human Immuno-deficiency Virus

* HMT   -   Hindustan Machine Tools

நீதிக்கதை

பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து “உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று கூறினான்.

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் “மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை” என்றான்.

“உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்” என்றான் நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.

மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான்.

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் “உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்” என்றான்.

அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து “சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?” என்று ஏளனம் செய்தார்கள்.

அதற்கு அவன் “நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்” என்றான்.

மற்ற தளபதிகள் “அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே” என்றார்கள்.

யூதத் தளபதி சொன்னான் “நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்”

இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.

அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

இன்றைய செய்திகள்
05.03.2019

* கோடையின் தாக்கத்தால் வறண்டு வரும் காவிரி; மேட்டூர் அணை நீர்வரத்து 15 கனஅடியாக வீழ்ச்சி.

* சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மென்பொருள் உருவாக்கும் போட்டியான ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான்’ போட்டியின் இறுதிச் சுற்றில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

* வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், தருமபுரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் நாமக்கல், வேலூர், கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும்,  தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பெண்களுக்கான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை கோஸ்வாமி முதலிடம் பிடித்துள்ளார்.

* துபாய் ஓபனை வென்றதன் மூலம் டென்னிஸ் தரவரிசையில் ரோஜர் பெடரர் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Today's Headlines

* Cauvery dried  by summer's impact; The Mettur dam water supply is down to 15 coins.

* Many students participated in the final round of the competition 'Smart India Hayekan' competition, the software development competition at Satyabhama Debt University, Chennai.

* The Chennai Regional Meteorological Survey (ICZR) said that thermal winds in 11 districts of Tamil Nadu on the 6th and 7th will be flooded. Tirupur, Dharmapuri, Coimbatore, Erode, Salem, Krishnagiri, Dindigul Namakkal, Vellore, Karur and Thiruvannamalai districts will be affected by thermal winds and in the internal districts of Tamil Nadu will increase by 2 to 3 degrees Celsius.

* Goswami is India's fastest women bowler in the ICC ODI Cricketer of the Year.

* Roger Federer advanced to the 4th spot in the tennis rankings by winning the Dubai Open.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment