Pages

Sunday, March 31, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.04.19

திருக்குறள்


அதிகாரம்:பயனில சொல்லாமை

திருக்குறள்:198

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

விளக்கம்:

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

பழமொழி

Let everyman praise the bridge he passes over
உப்பிட்டவரை உள்ளளவும் நினை

இரண்டொழுக்க பண்புகள்

 1.பள்ளி பொது இடங்களில் உள்ள பொருட்களை உடைக்காமல் பாதுகாப்பேன்.
2.தே‌சிய சின்னங்கள், தே‌சிய கொடி மற்றும் தே‌சிய பாடலுக்கு உ‌ரிய மரியாதை அளிப்பேன்.

பொன்மொழி

நன்மையும் தீமையும் மனிதனது அனுபவத்தாலும் சிந்தனையாலும் தீர்மானிக்கப்பட்டது. நன்மைக்கு மட்டும் உங்களைத் திசை திருப்புங்கள்.

        - இங்கர்சால்

பொது அறிவு

1.எதன் நினைவாக ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது?

1930  பூரண சுயராஜ்ய பிரகடனம்

2. இந்திய அரசியல் அமைப்பின் பிரதான வடிவமைப்பாளராக கருதப்படுபவர் யார்?

B.R. அம்பேத்கர்

துரித உணவுகளால் ஏற்படும் தீமைகள்



1. துரித உணவுகள் சாப்பிடுவதாலும்,
உடற்பயிற்சி செய்யாததினாலும் நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் அலட்சியம் காட்டினால் உடலின் ஏனைய உறுப்புகளும் பாதிப்படையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

2. ஞாபக் குறைவு , கவனக் குறைவு, திட்டமிட்டு செயற்படும் திறன் இன்மை எனப் பல பிரச்சினைகள் ஏற்படும்.

3.தலைவலி, மனச்சோர்வு , உடற்ச்சோர்வு , உடல் எடை அதிகரிப்பு,உணவுக்கு ஏங்குதல் போன்ற வியாதிகளும் ஏற்படும்.

4.உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாமை ,வயிற்றுவலி , மூட்டுவலி , நாக்கு வீங்குதல் ஏற்படுவதுடன் நரம்புக் கலங்களும் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

5. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சிறுவயதிலேயே பருவமடைகின்றனர்.
இதற்கு பல காரணங்கள் உண்டு. எனினும் நம்முடைய உணவுப்பழக்கமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஈஸ்ட்ரஜன் எனும் ஓமோனை சுரக்கச் செய்வதில் பதப்படுத்தப்பட்ட துரித உணவு காரணியாக அமைகிறது.

English words and Meaning

Acquire - அடைவது
Chamber -அறை, படுக்கை அறை
Federal - கூட்டாண்மை
Predict- முன்னறிவித்தல், வருவது உரைத்தல்
Therapy - சிகிக்சை

அறிவியல் விந்தைகள்

கொறித்துண்ணிகள்
* இது கொறிப்பன வரிசையில் அமைந்த பாலூட்டி உயிரியாகும்; *இதன் மேல்தாடையிலும் கீழ்தாடையிலும் வளரும் ஓரிணை வெட்டுப்பற்கள் அமைந்துள்ளன. இந்த பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும் தன்மை உடையது.
* எனவேதான் இயற்கை இவைகளுக்கு கொறித்து கொண்டே இருக்கும் தன்மையை கொடுத்துள்ளது.
* எலிகள், அணில்கள் இக்குடும்பம் சார்ந்தே எனவேதான் அவை தங்களது உணவு இல்லாததையும் கொறிக்கின்றன.
* நீரெலி எனப்படும் பீவர் தன் பல்லால் பெரும் மரத்தையும் வீழ்த்தி விடும்.

Some important  abbreviations for students

* MBBS   -  Bachelor of Medicine and Bachelor of Surgery

* MCA - Master of Computer Application

நீதிக்கதை

ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது.

ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்; “வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்…”

இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. “இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் அவற்றை இரட்டை மடங்காக்க சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப் படமாட்டேன்!” என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.

“நான் உனக்கு உதவப் போகிறேன். நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன். உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்”.

பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான். அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது: “கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை…”

பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது. அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது. கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. “உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே?” என்றது அதிர்ஷ்ட தேவதை. “போதாது. இன்னும் வேண்டும்” என்றான் பிச்சைக்காரன்.

அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது, “உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது”. பிச்சைக்காரன் சொன்னான்… “இன்னும் கொஞ்சம் வேண்டும்”…”. அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு நிறுத்தியது.

“உன் கோணிப்பை கிழியப் போகிறது…”. பிச்சைக்காரன் மறுத்தான். “இல்லை… நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு! என் கோணிப்பை தாங்கும்…” மறு வினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.

இன்றைய செய்திகள்
01.04.2019

* தமிழகத்தில் 22 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* பான் எண்ணுடன் ஆதார் எண்ணை செப்.30 வரை இணைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

* எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்படும்:  இஸ்ரோ அறிவியல் செயலர் பேட்டி

* இந்தியா ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் கிடாம்பி, காஷ்யப்

* சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போலந்து அணியை பந்தாடியது இந்தியா: 10 கோல் போட்டு அசத்தல்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸In Tamilnadu, 22 turnpike,the raise of tarrif hike  came to effect   from midnight. As a result, prices of essential commodities including vegetables and groceries are rising.

🌸 Aadar number can be linked to PAN number up to 30th SEP announced by Central Government

🌸29 satellites  and Emisat  will be launched tomorrow: ISRO scientist interviewed

🌸In India open badminton semifinals , Kashyap and kidaambi was in

🌸In Sultan Azlan Shah hockey Poland was defeated by India . India has scored 10 goals.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🎊May day begins and end with gratitude.
Have a nice day🎊😊

No comments:

Post a Comment