Pages

Tuesday, February 19, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.02.19

பிப்ரவரி 20


சமூக நீதி நாள்

வறுமையை போக்குதல் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சிகளை ஊக்குவிக்கவும்,  அங்கீகரிக்கவும் சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுகிறது.2009 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை பிப்ரவரி 20 ஆம் தேதியை உலக சமூக நீதி தினமாக அறிவித்தது.

திருக்குறள்

அதிகாரம்:அழுக்காறாமை

திருக்குறள்:165

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

விளக்கம்:

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டாம். அவர்களின் பொறாமைக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.

பழமொழி

He who hunts two hares loses both

பேராசை பெரு நஷ்டம்

இரண்டொழுக்க பண்புகள்

1) அனை‌த்து மக்களும் கடவுளின் சாயலே எனவே அனைவரையும் மதித்து நடப்பேன்.
2) தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நீதி போதனைகளை என்னால் முடிந்த அளவு கடை பிடிப்பேன்.

பொன்மொழி

மன உறுதி மட்டும் இருந்தால் போதாது; அந்த உறுதியைப் போலவே செயல் ஊக்கத்துடன் கூடிய உழைப்பும் சேர்ந்தால்தான் வெற்றிக்கு வழிவகுக்கும்.

    - ஷெல்லி

பொது அறிவு

1.கொல்கத்தா டம்டம் விமான நிலையத்தின் தற்போதைய பெயர் என்ன?

 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம்

2. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?

 தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

பீர்க்கங்காய்



1. பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன.

2. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.

3.பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும். நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.

English words and Meaning

Elite        சிறந்த,
                 உயர்ந்தோர்,
Ease.      ஓய்வு  ,
              இளைப்பாறுதல்
Ecstasy  பெருமகிழ்ச்சி
Efflux     காலப்போக்கு,
                நீரோட்டம்
Egress   வெளியேறுதல்,
               புறந்  தள்ளுதல்

அறிவியல் விந்தைகள்

*தகைவிலான் அல்லது தகைவிலாங் குருவி* (Barn Swallow - Hirundo rustica) *இவ்வகை பறவைகளில் அதிகம் பரவலாகக் காணப்படும் ஒன்றாகும். இதைத் தரையில்லாக் குருவி என்றும் கூறுவர். மிக அரிதாகவே தரையிறங்கும் *இப்பறவை, சளைக்காமல் பறந்து கொண்டும் உயர்மின் கம்பிவடங்களில் கூடுவதுமாகவும் இருப்பதால் இதற்கு இப்பெயர் பொருந்தும்
*இது 18 செ.மீ நீளமுள்ளது. மேல் சிறகுத்தொகுதி பளபளப்பான அடர்நீல நிறமும் செம்பழுப்புக் கழுத்தும் வெண்ணிற அடிப்பகுதியும் கொண்டு பிளவுண்ட வாலும் உடையது; பறக்கும் போது அடிப்பகுதியை நோக்கினால் வாலில் கொடி போன்று வெண்புள்ளிகள் தென்படும்
*  தகைவிலான் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தான் தம் இனப்பெருக்க உறைவிடங்களான இமயமலைத் தொடருக்கு வலசை போகும்.
 *மாலை வேளைகளில் பெருந்திரளாக இவற்றைக் காணலாம். நாணல் கதிர்கள் நிறைந்த ஏரிகள், வயல்கள் ஆகிய இடங்களில் அங்கும் இங்குமாக வேகமாகப் பறந்தபடியே பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.

Some important  abbreviations for students

* FAQ     -    Frequently Asked Questions


* FBI    -    Federal Bureau of Investigation (of the U.S.A.)

நீதிக்கதை

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

இன்றைய செய்திகள்
20.02.2019

* மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் தற்போது விவசாயத்திலும் தீவிரம் காட்டி வருகிறது. சுமார் 60 ஏக்கரில் தென்னை, மா, நெல் உள்ளிட்ட பல்வகை பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து, அதில் வருமானம் ஈட்டி கோயில் காரியங்களுக்கு செலவிட்டு வருகிறது.

* கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் துகள்கள் மூலம் ‘தென்னை தட்டுகள்’ தயாரிப்பு: பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

* ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பொருட்களை உடனடியாக புளோரிடா ஆய்வக சோதனைக்கு அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு.

* தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து வந்தாலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது.

* இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஐசிசியின் 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி  தொடங்க இன்னும் 100 நாள்கள் உள்ளன என கவுண்ட்டவுனை தொடங்கியுள்ளது  போட்டியை நடத்தும் இங்கிலாந்து.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸Madurai Meenakshi Amman temple management is currently concentrating on agriculture. Around 60 acres of coconut, mango and paddy and variety of crops are cultivated by natural resources and the income is spent for temple purposes.


🌸Coconut trays made from coconut particles of the affected palm trees from kaja Strom, can be used as substitute for plastic products.


🌸 Adhichanallur excavation products are to be immediately send to the Florida laboratory for test ordered  by high court


🌸The Tamil Nadu government has begun to prepare for public examination as it has been suggested that the Cabinet meeting will be discussed at the general meeting about the 5th and 8th classes public exam in Tamil Nadu.


🌸 England and Wales continue to play in the ICC's ODI World Cup 2019 .100days yet to be there.countdown started by England

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment