Pages

Monday, February 4, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.02.19

திருக்குறள்


அதிகாரம்:பொறையுடைமை

திருக்குறள் :152

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று.

விளக்கம்:

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.

பழமொழி

Empty vessels make much noice

குறைகுடம் கூத்தாடும்

இரண்டொழுக்க பண்புகள்

1.  விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.

2. என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.

பொன்மொழி

 வெற்றியோ, தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளிபடும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

        பி.ஆர்.அம்பேத்கர்

  பொது அறிவு

1.விமானம் பறக்கும் உயரத்தை அளக்கும் கருவியின் பெயர் என்ன?

 ஆல்டி மீட்டர்

2. முதன்முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு எது?

 சீனா

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

மரச்செக்கு எண்ணெய்



* பாரம்பரிய முறைப்படி மருத்துவ குணம் நிறைந்த வாகை மரத்தினால் ஆன மரச்செக்கில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட முதல் தரமான எண்ணெய் வித்துக்களை கொண்டு ஆட்டப்பட்டு, ஆயுர்வேத முறைப்படி சூரிய ஒளியில் தெளிவிக்கப்பட்ட நல்லெண்ணெய், கடலெண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய், மனித உடலுக்கு மிகவும் நன்மையானது.

* மரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்கள் முழுமை பெறாத PUFA (Poly unsaturated Fatty Acid) ஆக நலம் தரும் நல்ல கொலஸ்ட்ராலாக (HDL)உள்ளது. எனவே இவை எளிதில் ஜீரணமாகும்.

* ரோட்டரி, எக்ஸ்பெல்லர்ஸ் (Rotary, Expellers)-ல் ஆட்டப்படும் எண்ணெய்கள் அதிக சூடு ஆவதால் PSFA (Saturated Fat) ஆகமாறி பிரீ ரேக்கல்ஸை தோற்றுவித்து இரத்தத்தை அசுத்தமாக்கி கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) கூட்டி இதய இரத்தத்தை தடை செய்கிறது.

English words and Meaning

Saturate முற்றிலும் ஈரமாக்குதல்.
Scan சோதனை செய்தல்
Scene நிகழ்ச்சி, சம்பவம்
Sceptre. செங்கோல்
Scent வாசனை ஏற்றுதல்.

அறிவியல் விந்தைகள்

கங்காரு
* இது ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு ஆகும்
* வயிற்று பையில் குட்டியை பேணும் இனத்தைச் சேர்ந்தது.
* கங்காருவின் முன்னங்கால்கள் குட்டையாகவும் பின்னங்கால்கள் நீண்டும் மிக வலிமையானது ஆகவும் காணப்படும்.
* இவைகள் மிக வேகமாக குதித்து செல்லும்
* இவைகள் அவற்றின் உயரத்தை விட மூன்று மடங்கு உயரமாக குதிக்கும்.

Some important  abbreviations for students

* CPU    -    Central Processing Unit

* CID.   -   Criminal Investigation Department

நீதிக்கதை

ஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா.

காஹா தாத்தாவைப் பார்த்து “ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா?” என்று கேட்டது.”

ஒரு ஆத்மா கூட இல்லை” என்றான் மீனவன்.

“நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்” என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது.

அன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.

அந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை.

ஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.

“அரசனுக்கு காஹா ஏன் தேவை?” மீனவன் தண்டோராவிடம் கேட்டான்.”

அரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்” என்று கூறிய தண்டோரா. சட்டென்று “உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே?” என்று கேட்டான்.

இதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. “அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது” என்று உளறினான்.

தண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், “காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது” என்று கூறினான்.

அரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது.

மீனவன் “காஹா! உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்” என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான்.

அவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை.

அன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

இன்றைய செய்திகள்
05.02.2019

* பலத்த சர்ச்சைகளுக்கிடையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் ஷுக்லா, நேற்று காலை பொறுப்பேற்றார். இவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

* நாட்டின் அதிவேக ரயிலான ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி.

* கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

* எகிப்தில் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த 50 மம்மிக்கள் கண்டுபிடிப்பு.

* ஐசிசி ஒருநாள் தரவரிசைப்பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் கோலியும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ராவும் அசைக்கமுடியாமல், தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றனர்.

Today's Headlines

* The newly-elected CBI director, Rishi Kumar Shukla, took charge  yesterday. His tenure is 2 years.

* The Vande Bharath Express train of the country's high speed train test ride has been successfully finished.

* The Central Government has given approval for the Archeology Department to conduct the excavation again in Keezhadi.

* The discovery of 50 mummies from the pre-historic period in Egypt.

* In the ICC ODI rankings, Kohli is the number one batsman in the series and Bumhra in the  bowlers line are constantly on the top.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment