Pages

Wednesday, January 9, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.01.19

ஜனவரி 10


தேசிய கழுகுகள் பாதுகாப்பு தினம்

கழுகுகள் பாதுகாப்பு தினம்  ஜனவரி 10 ஆம் தேதி ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது..    பல கழுகு வகைகள் அழிவுறும் நிலையில் உள்ளன.

உலகம் முழுவதும் 70 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இயற்கை துப்புரவாளர்களான கழுகுகள் மனிதர்கள் பயன்படுத்தும் வலி நிவாரணிகள்,  பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற ஆபத்துகள்
மூலம் அழிந்துக் கொண்டிருக்கின்றன.

திருக்குறள்

அதிகாரம்:ஒழுக்கம் உடைமை

திருக்குறள்:135

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

விளக்கம்:

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதது போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வும் இல்லை.

பழமொழி

வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்

Your effort is what all you have got

 இரண்டொழுக்க பண்புகள்

* எங்களது பகுதியில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். அவைகளின் அழிவுக்கு நான் காரணமாக மாட்டேன்.

* நம் மாநில மரமாகிய பனைமரம் மற்றும் அழிந்து கொண்டு இருக்கும் இலுப்பை மரம் போன்ற மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன்.

பொன்மொழி

பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.

   - அரிஸ்டாட்டில்

 பொது அறிவு

1.மேட்டூர் அணையின் மற்றொரு பெயர் என்ன?

 ஸ்டான்லி அணை

2. தமிழ் மறை என்று அழைக்கப்படும் நூல் எது?

 திருக்குறள்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

வெள்ளரிக்காய்



1. வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.

2. இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல்இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.
செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும்.

3. வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேச ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

English words and Meaning

Headlong. கண்மூடித்தனமாக
Hearken. உற்றுக்கேள்
Heed   கவனம்
Handle. கையாளுதல்
Hap வாய்ப்பு, சந்தர்ப்பம்

அறிவியல் விந்தைகள்

தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த
உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

🐝தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள்,
பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை’யில்
சேகரித்துக்கொள்ளும்.

🐝அந்த மதுரம்
முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

🐝கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள்,
கூட்டின் வாசலில் காத்திருக்கும்
தேனீக்களிடம் அந்தத் திரவத்தை
ஒப்படைக்கும்.

🐝அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து
எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

🐝ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.

கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்
ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,
அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும்.

🐝பிறகு அந்தத் திரவத்தில்
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக
தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

🐝பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை
மெழுகைப் பூசிவைக்கும்.

🐝இத்தனை
நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம்
சுவைக்கும் தேன் உருவாகும்.

Some important  abbreviations for students

BARC   -    Bhabha Atomic Research Centre

BBC   -    British Broadcasting Corporation

நீதிக்கதை

அது ஒரு மலையடிவாரம்.

அதன் அருகே அழகிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அங்கே ஆறு ஓடிக் கொண்டிருந்ததால் மலையடிவாரத்தில் பச்சைப் பசேல் என்று புல் வளர்ந்திருந்தது.

மலையடிவாரத்தின் மேலே அங்கங்கே காணப்படும் சமபரப்புப் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை.

அங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. உடல் பருத்து, கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அதைப் பார்த்து மற்ற ஆடுகள் பயந்து ஒதுங்கிப் போய்விடும். அதனால் அந்த முரட்டு ஆட்டுக்கு திமிர் வந்து விட்டது. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும்.

ஒரு நாள் –

ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து விட்டு பயந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தது. பயந்து ஓடி வந்த அந்த ஆடு முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது.

அதைப் பார்த்த முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, “நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம்” என்று கோபமாகக் கேட்டது.

அதற்கு அந்த ஆடு, “அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன்” என்று அமைதியாக சொன்னது.

முரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டை போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சண்டைப் போட விரும்பாமல் சமாதானமாகவே பேசியது. முரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று ஆக்ரோஷமாக சண்டையிட்டது.

மலைச் சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி மலையடிவாரத்தில் உருண்டு போய் ஆற்றில்விழுந்தது.

ஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக் கொண்டு ஆற்றினுள்ளே சென்று விட்டது.

தானே பெரியவன் என்ற மமதை ஏற்பட்டால் இதுதான் கதி.

இன்றைய செய்திகள்
10.01.2019

* பொதுமக்கள் தகவல் சரிபார்ப்புக்காக காவல்துறையின் புதிய இ-சேவை தொடங்கப்பட்டுள்ளது.

* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு.

* நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பளபளக்கும் சாலைகளை அமைக்கும் பணி தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது.
திருப்பூரை சேர்ந்த சி.எம்.ஆர். பிட்பிளாஸ்ட்(CMR Bitplast) என்கிற தனியார் நிறுவனமும் கரூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஈரச் செயல்முறை மூலம் தொலைதூர கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் சாலைகளை அமைத்து வருகின்றனர்.

* சிட்னி சர்வதேச டென்னிஸ்: நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப் அதிர்ச்சி தோல்வி

* 66-வது மாநில சீனயர் கபடி சாம்பயின்ஷிப் தொடருக்கான சென்னை மாவட்ட கபடி அணிக்கான வீராங்கனைகள் தேர்வு நாளை நடக்கிறது.

Today's Headlines

🌹 The new e-service of the police has been launched for public information verification.

🌹 24,708 special buses would be operated on the Pongal festival: Minister M.R Vijayabaskar announced.

🌹The process of building glazed roads with plastic waste which we throw is intensifying in Tamil Nadu.
CMR Bitplast from Tirupur( a private company) and Karur district administration, joined together in the process of establishment to construct plastic roads in remote rural areas.

🌹 Sydney International Tennis: Simone Halle lose his match shockingly

🌹Chennai  Kabaddi team  selection for 66th State Kabaddi Championship will be held tomorrow💐

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment