Pages

Thursday, January 31, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.02.2019

திருக்குறள்


அதிகாரம்:ஒழுக்கம் உடைமை

திருக்குறள்:140

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

 விளக்கம்:

 உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

பழமொழி

வாள் முனையை விட பேனா முனை வலிமையானது

Pen is mightier than  sword

இரண்டொழுக்க பண்புகள்

* பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.
* ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.

பொன்மொழி

   இடர்ப்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பர்களை எடுத்து காட்டும்.

  - அரிஸ்டாட்டில்

பொது அறிவு

1.இந்தியாவின் மிகப்பெரிய நாடாளுமன்ற தொகுதி எது?

மல்கஜ்கிரி ( தெலுங்கானா)

2.செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம் - 10 தொகுதிகளை தொகுத்தவர் யார்?

இரா.இளங்குமரனார்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

இலந்தை பழம்



1. இதன் சிறப்பம்சத்திற்கு காரணம் இதிலுள்ள பொட்டாசியம், கால்சியம் ,சோடியம் மற்றும் இரும்பு சத்துக்கள் மிகுதியான இருப்பதனாலே  அதனால் தான் நரம்பு மண்டலம் வலுவடைகிறது  இதன் காரணமாக ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது... என்கிறார்கள்.

2. பித்தத்தை சமநிலை படுத்தி கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி உடலில் உள்ள சர்க்கரையை எரித்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது. இதனால் தான் இலந்தை பழம் சாப்பிட்டால் வாந்தி தலைசுற்றல் மயக்கம் எல்லாம் தீரும்.

3. அதிக விலை கொடுத்து வாங்கும் கிவி,ஆஸ்திரேலிய ஆப்பிள் போன்ற  மேற்கத்திய பழங்களை விட பத்து ரூபாய்க்கு வாங்கி சாப்பிடும் இலந்தையின் சிறப்பு 100 மடங்கு சிறப்பானவை.

English words and Meaning

Nickname, செல்லப்பெயர்
Neutral.    . நடுநிலைமை
Meadow.    புல்வெளி
Mesh.          சிக்க வை
Metal.           உலோகம்

அறிவியல் விந்தைகள்

மூங்கில்
* ஒரு அற்புத தாவரம்.
* இது புதராக வளரும் தன்மை உடையது.
* இந்தியாவில் கேரளா மற்றும் அஸ்ஸாமில் வளரும் மூங்கில் புல்லாங்குழல் செய்ய பயன்படுகிறது.
* இது ஒரு வ‌கை புல் ஆகும்.
* இது உயரமாக வளரும்
* நன்கு வளர்ச்சி அடைந்த மூங்கில்கள் கட்டுமான பணிக்கு உதவுகின்றன.

Some important  abbreviations for students

* CAD    -    Command Area Development

* CASE    -    Commission for Alternative Sources of Energy

நீதிக்கதை

ஆசிரிய நண்பர்களே...
உங்களுக்கு ஒரு குட்டி கதை சொல்கிறேன்...
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சொர்க்கத்தீவு என்று ஒரு தீவு இருந்துச்சாம். அந்த தீவுக்குச் சென்று அதன் கொள்ளை அழகைக் கண்டு இரசிக்கவேண்டுமென்று
பலருக்கும் ஆசை...
ஒரு குழு அந்த தீவை எப்படியும் அடைந்துவிட வேண்டுமென்ற வேட்கையில் புறப்பட்டது.. குழுவில் பலருக்கும் அந்த தீவை அடைவது வாழ்நாள் கனவும்கூட...

தீவுக்குச் செல்ல அந்தக்குழு பல வருடங்கள் உழைத்து மிகப்பெரிய, வலிமையான படகு ஒன்றை தயார் செய்தது. அந்த உறுதியான படகு ஒருசில வழிகாட்டிகளுடன்,  சிலநூறு பேர்களை ஏற்றிக்கொண்டு குறிப்பிட்ட நாளில் சாதகமான வானிலையின்போது  புறப்பட்டது...

பயணம் சிறப்பாகத் தொடங்கியதும் அவர்களுடைய  மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தங்களுடைய நீண்டநாளைய கனவு நனவாகப் போவதை எண்ணி எண்ணி உற்சாகத்துடன் சில நாட்களும் நகர்ந்து. திடீரென ஒருநாள் அவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி கிடைத்தது, படகை தொடர்ந்து இயக்க எரிபொருள் இல்லையென்று..!

இனி படகை துடுப்புகள் கொண்டுதான் இயக்கவேண்டும். அந்த உடல்பெருத்த படகை துடுப்புகள் கொண்டு இயக்க சிலநூறு கைகள் வேண்டும்... அக்குழுவின் அத்தனை கைகழும் ஒன்றுபட்டு துடுப்புப்போட்டு படகை இயக்கியது. படகு மெல்லமெல்ல நகரத்தொடங்கியது...

நாட்கள் சென்றது... அவர்களிடம் இருந்த உணவும், நீரும் வெறுங்குவளைகள் ஆயின. நாளுக்கு நாள் குழுவுக்குள் பதட்டமும்  அதிகரித்தது. நாக்கு வறண்டது, காதுகள் அடைத்தது...
யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை, அவர்கள் உடலில் நீர்ச்சத்துக்கூட நீர்த்துப்போனது.  களைத்துப்போய் சலனமற்று கிடந்தார்கள். அன்று இரவு முழுவதும் மிகப்பெரிய சூறாவளி, காற்று சுழன்று சுழன்று அடித்தது அவர்கள் மனதுக்குள். பயம் அவர்களை நிரந்தரமாக  கவ்விக்கொண்டது.
கடலில் வீசும் சிறிய அசைவுகள்கூட அவர்களை அச்சுறுத்தியது...

மறுநாள் அதிகாலை பனித்திரை விலகியதும், எதிரில் பேரழகை சூடிக்கொண்டு, வானுயர்ந்த மலைகளோடு அந்த சொர்க்கத்தீவு அவர்களுக்கு எதிரில் வெகுதொலைவில் இவர்கள் வருகைக்காக காத்து நின்றது...

ஆனால் அதை அடைவதற்கு இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம்! கண்ணுக்கெதிரே இலக்கு இருந்தது. திடீரென கடலின் பேரிரைச்சல், அவர்களை அசைத்துப் பார்த்தது..!
கேக்கும்திறன் குறைந்துவிட்ட  அவர்களின் காதுகளில் அந்த பேரிரைச்சல் படகு ஓட்டை, படகு ஓட்டை என்ற அபாய ஒலியாக கேட்டது.. உள்ளத்தில் பயம் பற்றிக்கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தார்கள் எதுவுமில்லை. ஆனால் சத்தம் மட்டும் அவர்களுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. வழிகாட்டிகள் அனுபவமுள்ளவர்கள், இது பெருங்கடலின் வெற்றுக் கூச்சல்கள் யாரும் பதட்டமடையத் தேவையில்லையென்று எச்சரித்தும் யாரும் அதற்கு உடன்படவில்லை.  அவர்களுக்குத் தெரியவில்லை, படகில் உள்ளவரைதான் அவர்களுக்கு பாதுகாப்பென்று...
உயிர்பயம் அவர்களை படகிலிருந்து விரட்டியது.. படகிலிருந்து ஒருசிலர் குதித்தார்கள். வழிகாட்டிகள் கதறினார்கள், இச்செயல் தற்கொலைக்கு சமம், இப்பொழுதுதான் நாம் பதட்டமில்லாமல் ஒற்றுமையுடன் செயல்படவேண்டுமென்று...
எதுவும் அவர்களின் செவிகளில் ஏறவில்லை. மேலும் சிலர் படகிலிருந்து குதித்தார்கள்.
அதைக்கண்ட அந்த மந்தைக் கூட்டம், கூட்டம் கூட்டமாக குதித்தன. கடல் தன்னுடைய அசுர வாயை, அதிகார வாயைத் திறந்து உள்ளே விழுங்கிக் கொண்டது... அந்த தருணத்திற்காகவே காத்திருந்த அந்த வெள்ளை சுறாக்கள் அவர்களை நீலக்கடலுக்குள் இழுத்துச் சென்றது...

படகிலே ஒருசிலரே மிஞ்சியிருந்தார்கள். அப்பெரிய படகை இவர்களின் ஒருசில கைகளால் இம்மி அளவிற்கும் நகர்த்த முடியாது.  கண்ணுக்கெதிரே இலக்கு தெரிகிறது!
படகு நிறைய துடுப்புகள் இருக்கிறது, இருந்தும் அவற்றை இயக்க இன்னும் சிலநூறு கைகள் தேவை. அக்கைகள் இனி அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை, நீந்திக்கடக்க அவர்களின் உடலில் ஆற்றலும் இல்லை.

அவர்கள், இவர்களை  தனிமரம்போல நிற்கதியாக விட்டுச்சென்றதைப் போல உணர்ந்தார்கள்..
இயலாமை அவர்களை வாட்டியது. இறந்தவர்களின்  அறியாமை அவர்களை கலங்கச் செய்தது. பசியும், தாகமும் அவர்களைப் பிச்சி தின்றது...

கடலில் குதிப்பது தற்கொலைக்கு சமம் என்று அவர்களுக்குத் தெரியும். அதே படகிலே இறந்து தங்கள் உடல் நீரிலும், காற்றிலும் அழுகி, புழுபுழுத்து முடை நாற்றமெடுக்க, அதை கடல்பறவைகள் கொத்தி கிழித்து சிதறடிக்க விரும்பாதவர்களாய் அதே கடலுக்குள் அவர்களும்  அமிழ்ந்துபோனார்கள். இறந்துபோனவர்களுக்காக அவர்கள் சிந்திய கடைசித்துளி கண்ணீரும் அந்த கடலுப்போடு கலந்துபோனது...

இறுதியாக அவர்களையும்  உள்வாங்கிக் கொண்டு அந்த அசுரக்கடல், அதிகாரக்கடல்  பேரிரைச்சலோடு எக்காலமிட்டது...

இன்றைய செய்திகள்
01.02.2019

* மார்ச் 1 முதல் தமிழகத்தில் உரிமம் இன்றி எவ்வித பெண்கள், குழந்தைகள் விடுதியும் இயங்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

* தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள்: இறுதிப் பட்டியலை வெளியிட்டார் தமிழக தேர்தல் அதிகாரி.

* அணு மின் நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நச்சுத்தன்மையுடன் இருக்கக்கூடிய  எரிபொருள்களை வெளியேற்ற முடியாமல் பல நாடுகளும் விழித்துவரும் நிலையில் அணுசக்திக் கழிவின் பெருக்கம் உலகம் முழுவதும் பெருகிவருவதாக கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

* இந்தியாவிற்கு எதிரான 4- வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 91 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது.

* உலகக்கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து, வங்காள தேசத்துடன் இந்தியா மோதுகிறது.

Today's Headlines

*No women and children home should be allowed to operate without a license in Tamilnadu from March 1st: High Court order

* 5.91 crore voters in Tamilnadu: The final list was issued by the Tamil Nadu Electoral Officer.

* Greenpeace organisation found that the growth of nuclear waste is growing worldwide, as many countries are awake without being able to eject thousands of years of toxic exposure to nuclear power plants.

* New Zealand won easily against India by 91 runs in the 4th ODI.

* World Cup Cricket practice matches: New Zealand, India crashes with Bangladesh.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment