Pages

Thursday, December 13, 2018

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.12.18

திருக்குறள்


அதிகாரம்:
நடுவுநிலைமை

திருக்குறள்:119

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

விளக்கம்:

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.

பழமொழி

An artist lives everywhere

கற்றோருக்குச்  சென்ற இடமெல்லாம் சிறப்பு

இரண்டொழுக்க பண்புகள்

* விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற பிற உயிர்களை கல்லால் அடித்து கஷ்டப் படுத்த  மாட்டேன்.

* சிறு உயிரினங்கள் அடிபட்டு கிடந்தால் அவைகளை
பெரியவர்கள் உதவியுடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவோ அவற்றிற்கு மருந்து இடவோ முயற்சிப்பேன்.

பொன்மொழி

நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.

         - கார்ல் மார்க்ஸ்

பொதுஅறிவு

1.இந்தியாவின் மிகப்பெரிய கோளரங்கம்  எது?

 பிர்லா கோளரங்கம் (கொல்கத்தா)

2. இந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம் எது?

 அந்தமான் நிக்கோபர் தீவுகள்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

சீத்தாப் பழம்



1. இந்த பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. இப்பழத்தில் சரி விகிதத்தில் குளுக்கோசும், சுக்ரோசும் இருப்பதனால்தான் அதிக இனிப்பு தன்மையை கொண்டுள்ளது.

2. சீத்தாப்பழத்தில் கால்சியம் சத்து, வைட்டமின்-சி மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

3. ஆயுர்வேத, சித்த வைத்தியத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இப்பழம் ரத்தத்தை அதிகரித்து உடலுக்கு பலம் தருகிறது.

English words and Meaning

Voyage.  பிரயாணம்
Wages.    சம்பளம், கூலி
Xyst உடற்பயிற்சி கூடம்
Yore.  பண்டைக்காலம்
Zealous. ஆர்வமுள்ள

அறிவியல் விந்தைகள்

டோடோ பறவை

* பார்ப்பதற்கு வாத்து போல் இருக்கும் டோடோ பறவை இன்று அழிந்து விட்டது.

* இதன் இருப்பிடம் மொர்ஷியஸ் தீவுகள் ஆகும்.

* அங்கு சென்ற டச்சு மாலுமிகளை நம்பி இவைகள் அவர்களோடு பழகியது. ஆனால் அவர்கள் அவற்றை கொன்று உண்டு விட்டார்கள்.

*இதை முதலில் 1598 இல் மனிதன் முதலில் கண்டு பிடித்தான். 1662 இல் இது முற்றிலும் அழிந்து விட்டது.

* அதன் பின்னர் தான் ஆர்வலர்கள் ஆர்வம் காட்டி இதைப் போன்ற விலங்கினங்கள் மற்றும் பறவைகள் அழியாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க தொடங்கினர்.

நீதிக்கதை

காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.

சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.

ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.

நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.

சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.

“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.

சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.

இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.

உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.

சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.

வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.

தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.

கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.

இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.

“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.

உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.

நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை

இன்றைய செய்திகள்

14.12.2018

* தேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த் தேக்கத்தில் இருந்து  டிசம்பர் 14 பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

*  தெலங்கானா முதல்வராக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்.

* வயிற்றுப் பகுதியில் நுண்துளை மூலம் அறுவைச் சிகிச்சை செய் வதற்கான கருவிகளை உட் செலுத்துவதற்குப் பயன்படும் நவீன உபகரணத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவர் வடிவமைத் துள்ளார்.

* உலகக் கோப்பை ஹாக்கி அரையிறுதி போட்டிக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

* வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ்: உலகின் நெ.1 வீராங்கனையை வென்றார் பி.வி.சிந்து!

Today's Headlines

🌹 The government has ordered to open water for irrigation from Shanmuganathi water reservoir in Theni district from Dec 14

🌹Mr.Chandrashekhar Rao became   the Chief Minister of Telangana.

🌹The Pudukottai government physician has designed the latest equipment used to pump the tools for surgical treatment with in  a pelvic area.

🌹England and Australia have qualified for the World Cup Hockey Semi-finals.

🌹 World Tour Finals: P.V.Sindhu won world number' 1 'badminton player

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment