Pages

Tuesday, December 4, 2018

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.12.18

திருக்குறள்


அதிகாரம்: நடுவுநிலைமை

திருக்குறள்:112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து.

விளக்கம்:

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

பழமொழி

Where there's a will there's a way

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

இரண்டொழுக்க பண்புகள்

1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.
2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்

பொன்மொழி

பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள்.

  - அப்துல்கலாம்

பொதுஅறிவு

1.நோபல்  பரிசு வழங்கும் நாடு எது?

  ஸ்வீடன்

2. சகாரா பாலைவனம் எந்த கண்டத்தில் உள்ளது?

 ஆப்பிரிக்கா

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

கொய்யா பழம்



கொய்யாப் பழத்தினை “ஏழைகளின் ஆப்பிள்” என்றுகூடச் சொல்வார்கள்.

1. இந்த எளிய பழம் வைட்டமின் சி, லைக்கோபீனே மற்றும் தோலிற்கு நன்மை பயக்கும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் (ஆண்டிஆக்ஸிடண்ட்) அதிக அளவில் கொண்டுள்ளது. மேலும் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கும் பயன்படும் மெக்னீசியமும் கொய்யாவில் நிறைந்துள்ளது.

2. கொய்யாப் பழம் கருவுறுதலை மேம்படுத்தும் ஃபோலேட் (Folate) எனப்படும் கனிமச்சத்தினையும் கொண்டுள்ளது. கொய்யாப் பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த அளவினை சீராக வைக்க உதவுகின்றது.

3. கொய்யாப் பழமும், வாழைப்பழமும் ஏறத்தாழ ஒரே அளவு பொட்டாசியத்தைத் தான் பெற்றுள்ளன. மேலும் இவற்றில் உள்ள 80 சதவீதம் தண்ணீர், தோலில் உள்ள நீர் ஆவியாகி வெளியேறுவதைத் தடுக்கிறது.

English words and meaning

Radical. அடிப்படையான
Raiment. உடுப்பு
Rampant கட்டுக்கடங்காத
Rebate. தள்ளுபடி
Relish. ஆர்வம்,விருப்பம்

அறிவியல் விந்தைகள்

* சூரிய ஒளி புவியை அடைய 500 வினாடிகள் ஆகும்.
* நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் எஃகு இரும்பையும் கரைக்கும் வல்லமை உடையது
* வைரஸ் என்றால் நஞ்சு என்று பொருள். அது உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள் இரண்டின் குணத்தையும் கொண்டிருக்கும்.

நீதிக்கதை

ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.

ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.
பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக்  கொள்ளலாம்' என்று சொன்னான்.

மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.

இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.

அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.

பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.

மற்ற ஒன்பது விவசாயிகளும் "இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.

அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.

அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.

அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.

மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.

முடிவுகளில் கவனம் தேவை....

இன்றைய செய்திகள்

05.12.2018

* மேகதாது குறித்து விவாதிக்க.. தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம்.. நாளை மறுநாள்

* காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தில் கோவை, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னோடியாக திகழ்கிறது என்று பாபா அணு ஆராய்ச்சி மைய அதிகாரி தெரிவித்தார்.

* காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு 25 கோடி அபராதம்! - பசுமைத் தீர்ப்பாயம்

* இந்திய கடற்படையில் 56 போர்க்கப்பல்கள் சேர்க்கப்படும் என்று கடற்படை தளபதி சுனில் லன்பா தெரிவித்தார்.

*உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி  வெற்றி பெற்றது.

* விடைபெற்றார் கம்பீர்: அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு

Today's Headlines

🌹 Special meeting of the Tamil Nadu Legislative Assembly meeting will be conducted  for discussing about megathathu

🌹 Navy Commander Sunil Lanba said 56 warships would be added to the Indian Navy.

🌹 Baba Atomic Research Officer said that  in Coimbatore, Periyanankanpalayam is the pioneer in the project to get electricity from vegetable wastes.

🌹  25 crore fine for Delhi government for  failing to control air pollution! - Green Tribunal

🌹 Argentina defeated New Zealand by 3-0 in a league match at the World Cup Hockey

🌹 Gambhir got Retirement from all forms of cricket matches

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment