Pages

Wednesday, November 7, 2018

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.11.18

திருக்குறள்


அதிகாரம்:இனியவைகூறல்

திருக்குறள்:92

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

விளக்கம்:

முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.

பழமொழி

Learn to labour and to wait

உழைக்க கற்றபின் பொறுக்கக் கற்க

இரண்டொழுக்க பண்பாடு

* முடிந்த அளவு தேவையில்லா பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பேன்.
* மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களையே வாங்கி என்னால் இயன்ற அளவு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருப்பேன்.

 பொன்மொழி

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

   - அப்துல்கலாம்

பொது அறிவு

1. இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

 எம் எஸ் சுவாமிநாதன்

2. மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் யார்?

 மம்தா பானர்ஜி

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

வரகு அரிசி



1.  வரகைக் கோவில் கும்பத்தில் வைத்து பத்திரப்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அதற்கு இடியைத் தாங்கும் தன்மை உள்ளது.

2. அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.  வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன.

English words and meaning

Xebec    பாய்மரக்கப்பல்
Xyst     உடற்பயிற்சிக் கூடம்
Xenocryst.  மாற்றுப் பாறை
Xenophobia இனவெறி,
அந்நியம்  எதிர்ப்பு
Xerox.     நகல் பொறி

அறிவியல் விந்தைகள்

தவளை

* நான் நிலத்திலும் நீரிலும் வாழும் படியாக படைக்கப்பட்டுள்ள இருவாழ்வி.
* என்னுடைய உடல் அதற்கு ஏற்றார் போல் அமைக்கப்பட்டுள்ளது. நான் நிலத்தில் இருக்கும் போது உங்கள் போல நுரையீரல் மூலமும் நீரில் இருக்கும் போது தோல் மூலமாகவும் சுவாசிப்பேன்.
* எனது கண்கள் சற்று விசேக்ஷம். ஒரே நேரத்தில் எல்லா பக்கமும் கண்களை சுழற்றி பார்க்க முடியும்
* எனது நாவு நீண்டு ஒரு நிமிடத்தில் இரையை பிடித்து விடும்
* அந்த இரையை விழுங்க என் கண்களை சுழற்றி உதவுகிறேன் என்பது நீங்கள் பலரும் அறியாத தகவல்.

நீதிக்கதை

இயல்பு

 இரு துறவிகள் ஆற்றில் தவம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு தேள் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தனர். உடனடியாக ஒரு துறவி அந்த தேளை எடுத்து ஆற்றங்கரையில் விட்டார். அப்போது அத்தேள் அவரைக் கடித்துவிட்டது.

சிறிது நேரத்தில் திரும்பவும் அத்தேள் ஆற்றில் விழுந்து விட்டது. மீண்டும் அத்துறவி அதனை எடுத்து கரையில் விடும் போது அத்தேள் அவரைக் கொட்டிவிட்டது. இதனைக் கண்ட இன்னொரு துறவி, ”நண்பரே , தேள் கொட்டும் எனத் தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் அதனைக் காப்பாற்ற எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார்.

துறவி சொன்னார்: “கொட்டுவது தேளின் இயல்பு. காப்பாற்றுவது எனது இயல்பு”

இன்றைய செய்திகள்

08.11.18

* சென்னை மாநகர குடிநீர் வாரியம் மூலம்  ரூ.10 கோடியில் நிரந்தர கட்டமைப்புக்கு ஏற்பாடு: சென்னை மாநகரின் நீராதாரமாக மாறும் சிக்கராயபுரம் கல் குவாரிகள்.

* ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியாக உள்ளதாக இணையதள ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சீனாவின் ட்சே சியாங் மாநிலத்தின் வூஜென் நகரில்  5வது  சர்வதேச இணைய மாநாடு  நேற்று தொடங்கியது.

* 61 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 111 ரன்கள் எடுத்து 4வது டி20 சதமெடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்த இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளை வீழ்த்தி டி20 தொடரை 2-0 என்று வென்றது.

* சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

Today's Headlines

🌻 Chennai Metropolitan  Board to establish a permanent structure at Rs.10 crore: Chikarayapuram stone quarries that become the source of water for Chennai City.

🌻 An Internet survey has stated that one fifth of the goods sold online are false.

🌻 The 5th International Internet Conference in Wuenzin, China's Tian Chiang Mai, began yesterday.

🌻 Rohit Sharma made world record of 4th T20 crown with the score of 111 runs with 7 sixes in the 61 balls and defeated the T20 series 2-0 to defeat the IPL.

🌻 India's leading player in the China Open Badminton Championship, Kidambi Srikanth advanced to the quarterfinals.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment