Pages

Tuesday, October 2, 2018

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.10.2018

அக்டோபர் 3

உலக இயற்கை தினம்
உலக வாழ்விட தினம்

திருக்குறள்

கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
வினைபடு பாலாற் கொளல்.

விளக்கம்:

நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ் இசை இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்.

பழமொழி

Carry not coals to Newcastle

 கொல்லன் தெருவில் ஊசி விற்காதே!

இரண்டொழுக்க பண்பாடு

1. என்னுடைய பிறந்தநாளிலும் ஒரு மரக்கன்றை நடுவேன்.

2. அம்மரக்கன்றுகளை நன்கு பராமரிப்பேன்.

 பொன்மொழி

எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்கு தெரிவதில்லை எனவே தோல்வியை தழுவுகின்றனர்.

       - தோமஸ் எடிசன்

பொது அறிவு

1.இந்திய பறவையியலின் தந்தை  என அழைக்கப்படுபவர் யார்?

A.O.  ஹியூம்

2.  சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை எங்கு அமைந்துள்ளது?

 மதுரை

தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

*வெந்தயம்*

1. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

2. உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

English words and meaning

Air - காற்று
Acid - அமிலம்
Atom - அணு
Algae - பாசி
Amphibians - இருவாழ்வி

நீதிக்கதை

குரங்கின் அறிவு

ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்

ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை! தாங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது

ஆண்முதலை யோசித்தது என்ன செய்வதென்று! திடீரென ஒரு ஆசை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம்... அவனும் வருவான் கொன்று அவன் இதயத்தை சாப்பிடு என கூடியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம், சந்தோசம்...!

அடுத்த  ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்தது முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது.

நடு ஆற்றில் சென்றுகொண்டிருக்கும் பொது ஆண் முதலை கூறியது "இப்போ ஏன் விருந்துக்கு  போறோம் ன்னு தெரியுமான்னு கேட்டது"

அப்பாவி குரங்கு விருந்துக்கு தானே ன்னு சொன்னது.

முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னைகூட்டிகிட்டு போறேன் ன்னு கூறியது.

சற்று குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

சற்று யோசித்த குரங்கு... அடடா என்ன நண்பா இத முன்னாடியே சொல்லகூடாதா? நேத்து நான் என இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே இருக்கு ன்னு கூற

முதலையும் அப்படியா வா திரும்பி போய் எடுத்துகொண்டு வருவோம்னு திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலிடம் கூறியது...! முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொல்ல பாக்கிறியான்னு சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி போய்டுசாம்.

இன்றைய செய்திகள்

03.10.18

*இந்தோனேஷியாவுக்கு 1 மில்லியன் டாலர்கள் நிவாரணம் வழங்கப்படும் என கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

* உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

* இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் அஷ்கின், பிரான்சை சேர்ந்த ஜெரார்டு மவுரு, கனடாவை சேர்ந்த டோனோ ஸ்டிரிக்லேண்ட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்டதற்காக பரிசு அறிவிக்கப்பட்டது.

* பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு புதன்கிழமை முதல் ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

* ஹாக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக மொகமது முஷ்டாக் அகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Today's Headlines

🌸Mr. Sunder picchai announced that $ 1 million will be given to Indonesia as relief fund by  Google⭐

🌸Weather Center announces the possibility of heavy rainfall in one or two places in Tamil Nadu⭐

🌸The Nobel Prize for Physics for this Year, Arthur Ashkin of the United States, Gerard Mouru of France and Canada's Dono Strickland have been announced. The prize was announced for their innovation in laser technology⭐

🌸 Qualified Applicants from Plus 2, Tenth Class Special Examination will be awarded with intergereted original certificates from Wednesday.⭐

🌸Mohammed Mushtaq Ahmed has been elected as the new head of the  Indian Hockey organization🤝

Prepared by
Covai women ICT_போதிமரம்

1 comment: