Pages

Friday, September 21, 2018

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.09.18

திருக்குறள்


வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

விளக்கம்:

மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.

பழமொழி

call a spade a spade

 உள்ளதை உள்ளவாறு சொல்

இரண்டொழுக்க பண்பாடு

1. எண்ணெய் பொருட்களை அதிகம் உண்ணாமல் தவிர்த்திடுவேன்.

2. எனக்கு ஏற்படும் சிறு உபாதைகளுக்கு இயற்கை முறையில் தீர்வுக்கு  காண முயல்வேன்.

 பொன்மொழி

எவன் ஒருவன் தனக்குத்தானே  மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே சிறந்த மனிதனாவான்.

            - மகாத்மா காந்தி

பொது அறிவு

1. இந்திய தேசிய பாடலான வந்தே மாதரத்தை இயற்றியது யார் ?

பக்கிம்  சந்திர சட்டர்ஜி

2.உலகிலேயே மிக நீளமான பழமையான கால்வாய் எது ?

 கிராண்ட் கால்வாய்(  சீனா )

தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

*நெல்லிக்காய்*

1. வைட்டமின்  சி சத்து அதிகம் உள்ளது. நீண்ட ஆயுள் கூடும்.

2. முதுமையை தள்ளிப் போடும் வல்லமை பெற்றது.

English words and meaning

Importance.  முக்கியம்
Inside      உள்ளே
Island.      தீவு
Interest.    ஆர்வம்
Iron.           இரும்பு

நீதிக்கதை

ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..🌴🌴🌴

அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.🌿🌿🌿🌿🌿

வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ....

ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை 🌲🌲🌲🌲🌲
நடந்து சென்றே...

ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் 🍀🍀

முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக
அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்! 🍀🍀🍀

ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்! 🌲🌲🌲

இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம்
சம்பாதித்து விடுவார்!

பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை; 🌴🌴🌴

ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்!

காரணம்
ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது! 🌴🌴🌴

ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....

சிறிது நேரத்தில் 🍀🍀🍀🌴
பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க... அவருக்காக மளிகைக்காரர் ...
எடைபோட... அதில் ஒன்பது கிலோ
மட்டுமே இருந்தது!....🌲🌲🌲🌲

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! 🍀🍀ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்,
இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே!

இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!😣😣

அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்! 💐💐

நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்! 🌴🌴

நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்! 👍👍

"கையும் களவுமாக பிடிக்கவேண்டும்என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார் ராமசாமி.. 🌳🌴

அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது. 🌴

வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்! 💐💐

இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா? 👌 கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன்,

இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனார் ராமசாமி. 🌴🌴🌴

அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க..

ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன்.

"இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, 🌴🌲🍀🌴🌴
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது....

"தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்! 💐💐

இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...

அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது! 🌴🌲🌸

இது தான் உலகநியதி!

நாம் எதை தருகிறோமோ ↪
அதுதான் நமக்கு திரும்ப வரும் ....↩
நல்லதை தந்தால் நல்லது வரும்,...🌴🌴

தீமையை தந்தால் தீமை வரும்! 🌴🌴

வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,
ஆனா.... 🌴🌲🌳
நிச்சயம் வரும்!

ஆகவே #நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்!! 🌴

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." 🌴🌴🌴

இன்றைய செய்திகள்

22.09.18

* வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தயே புயல் ஒடிசாவின் வடக்கு நோக்கி நகர்ந்து குறைந்த காற்றழுத்தமாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

* ஆன் லைன் மருந்து சேவைக்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதை திரும்ப பெறக்கோரி, 28ம் தேதி நாடு முழுவதும், மருந்துக் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.

* காஷ்மீரில் நிலவி வரும் அசாதாரண சூழலினால் இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான சந்திப்பை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

* ஆசிய கோப்பை 'சூப்பர்-4' சுற்றுப்போட்டியில் இந்தியாவின் ஜடேஜா 'சுழலில்' அசத்த வங்கதேச அணி 173 ரன்களுக்கு சுருண்டது.

Today's Headlines

🌸The Indian Meteorological Center has warned that the Thaye Storm, which is in the Bay of Bengal, can move to the north of Odisha and may become less windy⭐.

🌸 The pharmaceutical shoppers decided to oppose the Central Government by mortifing the pharmaceutical  shop across the country.This is because to oppose the bill on online pharmaceutical service which is yet to be passed in the parliament⭐

🌸The central Government has cancelled the meeting between India and Pakistan Foreign Ministers due to the extraordinary situation in Kashmir⭐.

🌸Bangladesh loss by 173 runs due to spin bowling by India's Jadeja in the Asian Cup Super-4 Tournament ⭐

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment