Pages

Monday, September 10, 2018

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.09.18

திருக்குறள்


நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.

விளக்கம்:

நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.

பழமொழி

Second thoughts are best

மறு பரிசீலனை மிகவும் சிறந்தது

இரண்டொழுக்க பண்பாடு

1.  நான் எப்பொழுதும் சாலை விதிகளை பின்பற்றி நடப்பேன்.

2.  நான் என்றும் பொதுசொத்துகளை சேதப்படுத்தாமல் பாதுகாப்பேன்.

 பொன்மொழி

பயமும் தயக்கமும் உள்ளவனை தோல்வி துரத்திக்கொண்டே இருக்கும்.

    - சாணக்கியர்

பொது அறிவு

1.தமிழ்நாட்டில்  முதன்முதலில் தொடங்கப்பட்ட ரயில் நிலையம் எது?

 ராயபுரம்

2. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும்    இடையே ஓடிக்கொண்டிருக்கும் ரயில் எது?

SAMJHAUTA EXPRESS 

சம்சவுதா  எக்ஸ்பிரஸ்

English words and. Meanings

Bamboo-மூங்கில்
Banyan-ஆலமரம்
Barrister -வழக்கறிஞர்
Backbone- முதுகெலும்பு
Badge -அடையாளச்சின்னம்

தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

 *வேப்பிலை*

1. இது நோய் எதிர்ப்பு ஆற்றல்  கொண்டது.

2. அம்மை நோய்கான மருந்தாக பயன்படுகிறது.

3. இது கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது.

நீதிக்கதை

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

"மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்ற குரல் கேட்டது.

தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.

அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு... நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,'' என்றது.

"நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?'' என்றான் மனிதன்.

"மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்று நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன்
பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே... அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி'' என்றான்.

"என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்றது சிங்கம்.

"கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா? உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல'' என்றான் மனிதன்.

அப்போது அவ்வழியாக ஒரு நரி வந்தது.

"இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய மனிதன் நடந்த

கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.

"எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே...'' என்றது.

அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து
 விட்டது. உதவி செய்த மனிதனைக் காப்பற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல் பட்டது. அதனால் ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்து.


"நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்'' என்றது நரி.

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

"நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்...''

"எந்தக் கூண்டிற்குள்?'' என்றது நரி.

"அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்'' என்றது சிங்கம்.

"எப்படி அடைந்து கிடந்தீர்கள்?'' என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

"நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.

"நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்'' என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.


நீதி: ஒருவர் செய்த உதவியை எப்போதும் மறக்ககூடாது.

இன்றைய செய்திகள்

11.09.18

* பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைப்பதாக அம்மாநில அரசு நேற்று  அறிவித்தது.

*  பாகிஸ்தானின் 13-ஆவது புதிய அதிபராக ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த ஆரிஃப் அல்வி (69) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

* தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

* மேட்டூர் அணை நிரம்பி வழிந்தாலும், டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வரத்து இல்லாததால் சம்பா பருவ நெல் சாகுபடியும் தாமதமாகிறது என டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

* யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் ஜூவான் மார்டின் டெல் போட்ரோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிச். இதன் மூலம் அவர் தனது 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

* டாக்காவில் நடைபெற்று வரும் தெற்காசிய கால்பந்து சாம்பியன் போட்டி (சாஃப்) போட்டியில் மாலத்தீவு அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறயுள்ளது.

Today's Headlines

🌸 Petrol and diesel prices are Ascending everyday, the state government of Andhra Pradesh announced yesterday that they will reduce the petrol and diesel prices by Rs 2 per litre🌹

🌸 Arif Alvi (69) of the ruling Tehreek-e-Insaf party was sworn in as the 13th new president of Pakistan on Sunday🌹

🌸The Government Examination Department has said that the Tenth Class sub-examination to be held in September and October in Tamil Nadu will be applicable today in Datkal🌹

🌸Even though the Mettur dam is overflowing, Delta farmers have informed that Samba seasonal paddy is delayed due to lack of water in Delta districts🌹

🌸Jogovich defeated Juan Martin Del Potro in the US Open tennis final and won the championship title. He has won his 14th Grand Slam title🌹

🌸 India won the Maldives 2-0 in the South Asian Football Championship match in Dhaka, where our India progressed to semi-finals ,🎖🏆

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment