Wednesday, January 28, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.01.2026




 






திருக்குறள்: 

குறள் 331: 

நில்லாத வற்றை நிலையின என்றுணரும் 
புல்லறி வாண்மை கடை. 

விளக்க உரை: 

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

பழமொழி :

Learning never goes waste. 

கற்றது ஒரு போதும் வீணாகாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.


2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.

பொன்மொழி : 

விவேகத்துடன் செயல்லாற்றுபவர் எந்த தடைகளையும் தாண்டிவருவார்.குறித்த இலக்கை அடையும் வரை அயராது உழைக்க வேண்டும்.

--------டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாம்

பொது அறிவு : 

01.நீரின் கொள்ளளவு அடிப்படையில்உலகின் மிகப்பெரிய நீர் தேக்கம் எது?

கரிபா ஏரி-Lake Kariba,
ஜாம்பேசி நதி Zambezi- ரிவேர் ஆப்பிரிக்கா - Africa

02.ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் பிரிக்கும் முக்கிய நீர்வழிப்பாதை எது?

சூயஸ் கால்வாய் -The Suez Canal

English words :

invincible-unbeatable

generosity-willing to give freely

தமிழ் இலக்கணம்: 

 கட்டடம் மற்றும் கட்டிடம் வேறுபாடு இரண்டுமே கட்டுமானப் பொருளைக் குறித்துப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், சிறிய நுணுக்கமான வேறுபாடு உள்ளது. கட்டடம் (Building) என்பது ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்கு அடுக்கான அமைப்பைக் (Structure) குறிக்கிறது. கட்டிடம் (Site/Plot) என்பது கட்டப்படுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், மனை அல்லது நிலத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

நீதிக்கதை

 பலமும் பயமும்


சிங்கம் ஒன்று காட்டு வழியே நடந்து வந்து கொண்டிருந்தது. அதற்குச் சேவல் கூவும் ஒலியைக் கேட்டால் போதும் மிகவும் பயந்துவிடும். நான் காட்டரசனாக மிகுந்த பலத்துடன் இருந்து என்ன பயன்? ஒரு சேவல் கூவுவதைக் கண்டு பயந்து வாழ்வது ஒரு வாழ்வா? என்று தனக்குத்தானே மிகவும் நொந்து கொண்டே இருந்தது. அப்போது எதிரே ஒரு யானை மிகவும் சோர்வுடன் தனது காதுகளை இருபக்கமும் வேகமாக ஆட்டிக்கொண்டே வந்தது. அதனைக் கண்ட சிங்கம், யானையாரே, மிகப் பெரிய உருவம் கொண்ட உமக்கு என்ன கவலை? ஏன் வாட்டமாக வருகிறீர்? என்று கேட்டது. 


சிங்க நண்பரே, அதையேன் கேட்கிறீர்? எனக்கு நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. இதோ எனது காதுகளின் பக்கத்தில் குளவி ஒன்று பறந்துகொண்டே இருக்கிறது. அது காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால் அந்த வலியைத் தாங்க முடியாது. அந்தக் குளவி காதிற்குள் நுழைந்து விடக் கூடாதே என்ற கவலையுடன் காதுகளை ஆட்டிக் கொண்டே வருகிறேன் என்று கூறியது யானை. எத்தகைய வல்லமை உள்ள உயிருக்கும் கூட அதுக்குன்னு ஒரு கவலை நிச்சயம் உண்டு. அதுபோலத்தான் நமக்கும் என்று உலக வழக்கத்தைப் புரிந்து கொண்டு அதிலிருந்து எதற்கும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் சிங்கம் வாழ ஆரம்பித்தது. 


நீதி :

பயம், பலவீனம் இரண்டும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவானது.

இன்றைய செய்திகள்

29.01.2026

⭐ பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் &  சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களை
பொருளாதார ரீதியாக முன்னேற்றும் நோக்கில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் (TABCEEDCO) ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்க தமிழக அரசு
முன்வந்துள்ளது.

⭐ இந்தியாவிலேயே பெண்களை அதிகம் பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டிலுள்ள 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

⭐ தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைத்து அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.

⭐சில்லறை தட்டுப்பாட்டை தீர்க்க சிறு ரூபாய் நோட்டுகளுக்கான ATM - மத்திய அரசு திட்டம். ஹைப்ரிட் ஏடிஎம்'களாக அமைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்களை அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் விளையாடவுள்ளது.

🏀பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி முடிவு செய்தது.

Today's Headlines

⭐ Tamilnadu government has come forward to provide loan assistance of up to Rs. 25 lakhs to the Backward Classes Economic Development Corporation (TABCEEDCO), which aims to economically advance the backward classes, the most backward classes and the scheduled castes.

⭐ The Chief Minister of Tamil Nadu has launched a free vaccination program for girls under the age of 14 in Tamil Nadu to prevent oral cancer.

⭐A government order has been issued in Tamil Nadu reducing the passing marks for the Teacher Eligibility Test by 5%.

⭐Central Government Scheme for ATMs for Small Currency Notes to Address Retail Shortage. * The Central Government is considering setting up hybrid ATMs. Also
The government will prioritise installing these ATMs in places where people congregate.

 SPORTS NEWS 

🏀 Bangladesh team out of World Cup series. * The Scotland team will play in the T20 World Cup due to the Bangladesh team's withdrawal.

🏀All teams are preparing for the T20 World Cup series starting on February 7. In that regard, the Australian team has decided to play a 3-match T20 series with Pakistan.

Covai women ICT_போதிமரம்

Tuesday, January 27, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.01.2026

லாலா லஜபதி ராய்




திருக்குறள்: 

குறள் 444: 

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் 
வன்மையு ளெல்லாந் தலை. 

விளக்க உரை: 

தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

பழமொழி :

Mistakes are lessons in disguise. 

தவறுகள் அனைத்தும் மறைந்துள்ள பாடங்கள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.


2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.

பொன்மொழி : 

சிந்தனையைவிட செயலால்தான் எல்லோரையும் மாற்றி அமைக்க முடியும்.

   - வில்லியம் வேர்ஸ்ட்வொர்த்

பொது அறிவு : 

01.தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் இடம் எது?

பாளையங்கோட்டை -
Palayamkottai

02.உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த (Venomous) மீன் எது?

ஸ்டோன்ஃபிஷ்
Stonefish(Synanceia)

English words :

Struggle, scuffle   -   இழுபறி

Vagrant, vagabond  -  நாடோடி

தமிழ் இலக்கணம்: 

 சரியான முறையில் எண்களை தமிழில் எழுதுவது எப்படி பாகம் 2
இருபத்தி, முப்பத்தி, ஐம்பத்தி என்று எழுத கூடாது என்று பார்த்தோம். 
இருபத்து மூன்று, முப்பத்து நான்கு இவற்றில் மூன்று, நான்கு என்பவை உயிர் மெய் எழுத்துகள் எனவே அவற்றை பிரித்து எழுதலாம். ஆனால் ஐம்பத்து ஆறு என்பதில் ஆ உயிர் எழுத்து எனவே சேர்த்து எழுதுவது சிறப்பு.
ஐம்பத்தாறு, எழுபத்தியேழு, எண்பத்தொன்பது முதலியன.

ஜனவரி 28

லாலா லஜபதி ராய் அவர்களின் பிறந்தநாள்

லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்

நீதிக்கதை

 நாயும் அதன் நிழலும்


ஒரு இறைச்சிக் கடையில் இருந்த மாமிசத்துண்டு ஒன்றை திருடிய நாய் ஒன்று அதனை தன் வாயில் கவ்விக் கொண்டு தன் இருப்பிடம் நோக்கிச் சென்றது. தன் இருப்பிடத்திற்குச் செல்லும் வழியில் நாய் ஒரு ஓடையைக் கடக்க முயன்ற போது அதன் உருவமும், அது தன் வாயில் வைத்திருந்த மாமிசத்துண்டும் தண்ணீரில் தெரிந்தது. அதைக் கண்ட நாய் அந்த உருவம் தன்னுடையது என்று அறியாமல் தண்ணீரில் தெரிந்த மாமிசத்துண்டினையும் கவ்வ எண்ணி லொள், லொள் எனக் குரைத்து கொண்டே தண்ணீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது. அப்போது அதன் வாயில் இருந்த மாமிசம் தண்ணீரில் விழுந்தது. மாமிசத்தைத் தேடிச் சென்ற நாய் தண்ணீரில் தத்தளித்து. ஆற்றிலிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று நினைத்துக் கரையேறியது. 


நீதி :

ஒருவனிடம் இருப்பதையும் இல்லாமல் போகச் செய்வது பேராசை

இன்றைய செய்திகள்

28.01.2026

⭐தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தவும், பெற்றோர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கவும் வகை செய்யும் “தமிழ்நாடு பள்ளிகள் திருத்தச் சட்டம்- 2026 தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றியுள்ளது.

⭐சென்னையில் பெண்கள் மட்டுமே பயணிக்க 10 'பிங்க்' பஸ்
சேவைகள்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

⭐ஐரோப்பிய ஒன்றியம் உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு ஜவுளி மற்றும் ஆடைகள் மீதான வரி 12% லிருந்து 0% ஆகக் குறையும். ரயில்வே, கப்பல் தயாரிப்புகள் மீதான வரி 7% லிருந்து 0% ஆகக் குறையும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

🏀 இந்தியா - நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 3-0 கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

Today's Headlines

⭐TheTamilnadu Schools Act-2026 - Amendment, which will regulate the fees of private schools in Tamilnadu and provide more power to parents, has been unanimously passed in the Tamilnadu Legislative Assembly.

⭐ Tamil Nadu Chief Minister inaugurated 10 Pink bus services for women only in Chennai.

⭐The trade agreement with the European Union will see India's tariffs on textiles and clothing reduced from 12% to 0%. And tariffs on railway and shipping products will be reduced from 7% to 0%.

 SPORTS NEWS 

 🏀The Australian Open, the first Grand Slam of the year, is underway in Melbourne. The tournament runs until February 1.

 🏀 India and New Zealand are playing a 5-match T20 series. India won the series 3-0 after the first 3 matches.

Covai women ICT_போதிமரம்

Monday, January 26, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.01.2026




 






திருக்குறள்: 

குறள் 441: 

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்.     

விளக்க உரை: 

அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

பழமொழி :

A goal without effort stays a dream. 

முயற்சி இல்லாத இலக்கு வெறும் கனவாகவே இருக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.


2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.

பொன்மொழி : 

புத்தகமும் கதவும் ஒன்றே. இரண்டையும் நீங்கள் திறந்தால் வேறு ஒரு உலகிற்கு செல்வீர்கள் - ஜீனெட் விண்டர்சன்

பொது அறிவு : 

01.உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த விலங்குகளில் முதன்மையானது எது?

  பந்தயக் குதிரை- Race horse

02. பழங்காலத்தில் சேரன் தீவு என்று அழைக்கப்பட்ட நாடு எது?

 இலங்கை- Srilanka

English words :

Ingenious -clever and inventive

Dreadful-extremely bad

ஜனவரி 27

பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் (International Holocaust Remembrance Day

நீதிக்கதை

 நட்புக்குத் துரோகம்


ஒரு அடர்ந்த காட்டில் வசித்து வந்த ஒரு நரியும், ஒரு கழுதையும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து நாள்தோறும் இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், அப்படி இரைத் தேடச் செல்லும் போது இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்க போராட வேண்டும் என்றும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தன. 


ஒரு நாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக கழுதையின் இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், சிங்கம் ஒன்று நரியினை வழி மறித்தது. நரி உடனே சிங்கத்தை நோக்கி, மன்னாதி மன்னா! அற்பப் பிராணியாகிய என்னை கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. என்னுடைய நண்பனாகக் கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அந்த கழுதையை தின்பதால் உங்களுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு உணவு கிடைக்கும் என்று கூறியது. சிங்கமும் ஒப்புக் கொண்டது. நரி, சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது. 

நண்பனே! இரை தேடச் செல்லலாமா? எனக் கழுதையை அழைத்துக் கொண்டு சிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததும் மறைந்திருந்த சிங்கமானது, கழுதையின் மீது பாய்ந்துக் கொன்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது. நரி பதறிப் போய், மகாராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் கூட்டி வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே! என்று நரி நடுக்கத்துடன் கேட்டது. 

நீ உன் நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காதவன். நாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்று என்ன நிச்சயம். ஆகவே, உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது என்று கூறிக் கொண்டே சிங்கம், நரியையும் கொன்று வீழ்த்தியது. 

நீதி :

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

இன்றைய செய்திகள்

27.01.2026

⭐நிலத்தடி நீரை எடுத்தல் மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்லுதலை ஒழுங்குமுறைப்படுத்தவும், 'தமிழ்நாடு நீர்வளங்கள் மசோதா' தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ளது.

⭐அமெரிக்காவின் பெரும் பகுதி (3-ல் 2 பங்கு) பனிப்புயலின் பிடியில் சிக்கியுள் ளது.உறைபனியின் தாக்கத்தால் லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. 14 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது. சுமார் 13,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

⭐ உலகின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் 410 கப்பல்களில் 6,223 மாலுமிகளுக்கு ஊதியம் கிடைக்க வில்லை அதில் 1,125 மாலுமிகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கவுகாத்தி: நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.வரலாறு படைத்தார் அபிஷேக் ஷர்மா; நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது இந்தியா.

Today's Headlines

⭐The Tamilnadu Water Resources Bill has been passed in the Tamilnadu Legislative Assembly to regulate the extraction and expensive of ground water.

⭐ A large part of the United States (2/3) is caught in the grip of a blizzard. Millions of homes have been plunged into darkness due to the 
impact of the freezing temperatures.
It has completely disrupted the normal lives of 140 million people. More than 13,000 flights have been canceled.

⭐ Out of 410 ships operating in various parts of the world, 6,223 sailors have not received their salaries, out of which 1,125 sailors are from India.

 *SPORTS NEWS* 

🏀 Guwahati: India won the 3rd T20 cricket match against New Zealand by 8 wickets. Abhishek Sharma created history; India defeated New Zealand easily.

Covai women ICT_போதிமரம்

Sunday, January 25, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.01.2026




 






திருக்குறள்: 

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 

பொருள்:
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

பழமொழி :

A calm mind solves difficult problems. 

அமைதியான மனம் கடினமான பிரச்சனைகளையும் தீர்க்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.
2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.

பொன்மொழி : 

முதலில் சிறந்த புத்தகங்களை படியுங்கள் இல்லையெனில் அவற்றைப் படிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் - ஹென்றி டேவிட் தோரோ

பொது அறிவு : 

01.நமது நாட்டின் 2026 குடியரசு தின அணிவகுப்புக்கான கருப்பொருள் என்ன?

" வந்தே பாரதத்தின் 150 ஆண்டுகள்"
150 Years of Vande Mataram.”

02. 2026 குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் எந்த கருப்பொருளை கொண்டு அலங்கார ஊர்தி இடம்பெறவுள்ளது?

"வளமையின் மந்திரம்: தற்சார்பு இந்தியா'
Mantra of Prosperity: Self-Reliant India

English words :

pass down -transfer tradition to the next generation

tormenting -torturing

தமிழ் இலக்கணம்: 

 சில எண்களின் பெயரை தமிழில் எழுதும் போது நாம் பேச்சு வழக்கில் தவறாக எழுதி விடுகிறோம். அவற்றை எவ்வாறு எழுத வேண்டும் என்று பார்ப்போம்
23 –இருபத்தி மூன்று 
34 –முப்பத்தி நான்கு
56 –ஐம்பத்தி ஆறு
மேல் கூறிய மூன்றும் தவறு.
இருபத்தி, முப்பத்தி, ஐம்பத்தி என்பவைகள் முறையே இரு பத்திகள், மூன்று பத்திகள், ஐந்து பத்திகள் என்று பிரிந்து வேறு பொருள் தந்து விடும். ஆனால் 
இருபத்து, முப்பத்து, ஐம்பத்து என்று எழுதும் போது இரு பத்துகள், மூன்று பத்துகள், ஐந்து பத்துகள் என்று பிரிந்து சரியான பொருள் தரும்.
இனி 
இருபத்து மூன்று 
முப்பத்து நான்கு என்று பிழையில்லாமல் எழுதுவீர்கள் தானே?
        தொடரும்

ஜனவரி 26

இந்தியக் குடியரசு நாள் 

* 1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்

"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."

    * 12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியலமைப்பு சட்டவரைவை மக்களவையில் சமர்ப்பித்தது.

     * 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

     * அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது

நீதிக்கதை

 நல்லதே செய்


ஒரு பெரிய முதலாளியிடம் பல அடிமைகள் வேலை செய்து வந்தனர். அவர்கள் பல வகையிலும் கொடுமைப் படுத்தப்பட்டு வந்தனர். துன்பத்திற்குள்ளான அவர்களில் ஒருவன் முதலாளியிடமிருந்து எப்படியோ தப்பி காட்டிற்குள் ஓடி விட்டான். 


அவன் காட்டில் ஒளிந்து திரிந்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் அருகில் வந்தது. அது மிகுந்த வலியால் துடிப்பதை அடிமை பார்த்தான். அவன் சிறிதும் பயம் இல்லாமல் அதன் காலைத் தூக்கிப் பார்த்தான். அதன் பாதத்தில் ஒரு பெரிய முள் தைத்திருந்ததைப் பார்த்தான். சிங்கத்தின் காலில் தைத்திருந்த முள்ளை மிகவும் சிரமப்பட்டுப் பிடுங்கி எறிந்தான். அதன் காலை தடவிக் கொடுத்தான். சிங்கமானது ஆபத்தில் தனக்கு உதவிய அந்த மனிதனை நன்றியுணர்வுடன் பார்த்துவிட்டு வலி நீங்கி மகிழ்ச்சியுடன் சென்றது. 


காட்டில் அவன் இருப்பதை அறிந்த அந்த அடிமை மனிதனை முதலாளியின் ஆட்கள் பிடித்துச் சென்றனர். அந்தக் காலத்தில் தப்பியோடும் அடிமைகளுக்கு மரண தண்டனை அளிப்பது வழக்கம். அதன்படி ஒரு கூண்டிற்குள் ஒரு சிங்கத்தை அடைத்து அச்சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு வைத்து அந்த அடிமை மனிதனை அக்கூண்டிற்குள் தள்ளிவிட்டு சிங்கத்தை ஏவி விடுவர். அவ்வாறு இந்த அடிமையையும் சிங்கம் இருக்கும் கூண்டிற்குள் தள்ளிவிட்டனர். பசியோடு இருந்த அந்த சிங்கம் அந்த அடிமையை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவன் அருகில் வந்ததும், அந்த மனிதன் தன் காலில் முள் தைத்து அவதிப்பட்டபோது உதவியவன் என்பதை அடையாளம் கண்டு கொண்டது. மிகவும் பணிவுடன் அவன் அருகில் வந்து வாலை ஆட்டிக் கொண்டு இருந்தது. அடிமை, சிங்கத்தைத் தடவிக் கொடுத்தான். 


இந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசனும், பொதுமக்களும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். அரசன், அடிமை மனிதனிடம் விபரங்களைக் கேட்டறிந்தான். அடிமை மனிதன் சொன்ன செய்தியைக் கேட்டு அறிந்த அரசன் அடிமையை விடுதலை செய்தான். நன்றியுணர்வு மிக்க சிங்கத்தைக் காட்டில் கொண்டுபோய் விடச் செய்தான். 


நீதி :

நமக்கு நன்மை செய்தவனுக்கு நாம் நன்றி மறவாமல் நடக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

26.01.2026

⭐குடியரசு தினத்தை முன்னிட்டு 44 காவல்துறை அதிகாரிகள்-பணியாளர்களுக்கு பதக்கங்கள்: முதலமைச்சர் ஆணை.

⭐தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்' வழங்க மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

⭐பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது

⭐அமெரிக்காவை முடக்கிய பனிப்புயல்- 13 ஆயிரம் விமானங்கள் ரத்து.
* பனிப்புயலால் 15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பனிப்புயலால் சுமார் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀U19 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா

🏀 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.

Today's Headlines

⭐Chief Minister ordered Medals to 44 police officers and personnel on the occasion of Republic Day

⭐ MK Stalin has ordered to award the Tamil Nadu Chief Minister's Medal for Meritorious Intelligence and the Medal for Meritorious Special Performance.

⭐The Padma Awards are usually announced every year on the occasion of Republic Day. Accordingly, the Padma Awards for the year 2026 have been announced.

⭐ America has been affected by a snowstorm that paralyzed the whole state, with 13,000 flights canceled. A state of emergency has been declared in 15 states, and about 140 million people have been affected by the snowstorm.

 SPORTS NEWS 

🏀U19 World Cup: India beats New Zealand to advance to Super Sixes 

🏀 Indian squad announced for Asia Cup.

Covai women ICT_போதிமரம்