Pages

Thursday, July 30, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 31.07.26





திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:462

குறள்:

 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

பொருள்:

தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை. 

பழமொழி :

It is easier to destroy than to create

அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் என் கடமையை தவறாமல் செய்வேன். 

2. கல்லடிபட்டாலும் கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் பணி செய்ய முயற்சிப்பேன்.

பொன்மொழி : 

பிறருக்கு உதவுவது உயர்ந்த பண்பு என்றால் நேர்மை என்பது சிறந்த கொள்கை.

Thought for the Day :

Small steps taken daily lead to great success.

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

செங்காந்தள் மலர். 

2. ஜிம்பாபே நாட்டின் தேசிய மலர் எது? 

செங்காந்தள் மலர்.

English words :

Neat - Clean and organized, சுத்தமான.

Pure - Clean and untainted, தூய்மையான

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராம பஞ்சாயத்து என்பது மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களால் அமைக்கப்படுகிறது.

இதன் தலைவரை பஞ்சாயத்து தலைவர்  என்று அழைப்பார்கள்.

NMMS :

MAT 

பொருந்தாததைத் தேர்ந்தெடு

(1) கடத்தும் திசு

(2) புறத்தோல் திசு

(3) அடிப்படைத்திசுக்கள்

(4) இணைப்புத்திசு

விடை: (4) இணைப்புத் திசு

நீதிக்கதை

 பழைய உணவின் பாதிப்பு

ஒரு கிராமத்தில் சஹானா என்ற சிறுமி வாழ்ந்து வந்தாள். ஒருநாள் வீட்டில் சமைத்த உணவு மீதமிருந்தது. அதை அம்மா குளிர்சாதனப் பெட்டியில் வைத்தார்.

இரண்டு நாட்கள் கழித்தும் அந்த உணவை சஹானா சாப்பிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.

அம்மா, "பல நாட்கள் வைத்திருக்கும் உணவில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் வளரலாம். அதைச் சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கப்படும்," என்று கூறினார். ஆனால் சஹானா அதைக் கேட்காமல் அந்த உணவைச் சாப்பிட்டாள்.

சில மணி நேரங்களிலேயே அவளுக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்றபோது, "நீண்ட நாட்கள் வைத்திருந்த உணவைச் சாப்பிட்டதால் உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) ஏற்பட்டுள்ளது. இனிமேல் எப்போதும் புதிதாக சமைத்த உணவையே சாப்பிட வேண்டும்,"என்று அறிவுறுத்தினார்.

அதன்பிறகு சஹானா, பல நாட்கள் வைத்திருந்த உணவைச் சாப்பிடாமல், எப்போதும் சுத்தமான மற்றும் புதிய உணவையே சாப்பிடத்  தொடங்கினாள். 

நீதி:

பல நாட்கள் வைத்திருந்த உணவைச் சாப்பிடக்கூடாது; புதிய, சுத்தமான உணவே நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.

இன்றைய செய்திகள்

31.07.2026

🗒️குழந்தை தொழிலாளர் விவகாரத்தை கண்காணிக்க சிறப்பு குழு அமைச்சர் பர்வேஸ் தகவல்.

🗒️எல் நினோ காலநிலை மாற்ற நிகழ்வு குறித்து ஆராய்வதற்கு 7 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

🗒️தமிழகத்திற்கு காவிரியில் நீர் விடுவிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀காமன்வெல்த் விளையாட்டு: 

👍🏼நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கருக்கு வெள்ளிப் பதக்கம்.
👍🏼ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி.
👍குத்துச் சண்டையில் அரை இறுதிக்கு முன்னேறிய 6 இந்திய வீரர்கள்.

Today's Headlines
 
🗒️Minister Parvez said that a special committee has been formed to monitor child labour issues.

🗒️The Tamil Nadu government has formed a 7-member committee to study the El Niño climate change phenomenon.

🗒️The Cauvery Water Management Authority has directed the Karnataka government to release Cauvery water to Tamil Nadu.

Sports News

🏀Commonwealth Games:

👍🏼Murali Sreeshankar won the silver medal in the long jump.

👍🏼Neeraj Chopra has qualified for the javelin throw final.

👍🏼Six Indian boxers have advanced to the semi-finals.

Covai women ICT_போதிமரம்

 

Wednesday, July 29, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.07.26

டாக்டர் முத்துலட்சுமி 





திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:461

குறள்:
 
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

பொருள்:

ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

பழமொழி :

Humility often gains more than pride.

அடக்கம் ஆயிரம் பொன் தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் என் கடமையை தவறாமல் செய்வேன். 

2. கல்லடிபட்டாலும் கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் பணி செய்ய முயற்சிப்பேன்.

பொன்மொழி : 

இன்றைய போராட்டம்தான் நாளைய வெற்றிக்கான அடித்தளம்.

Thought for the Day :

Today's struggle is the foundation of tomorrow's success.

பொது அறிவு : 

1. உலகின் மிகப் பெரிய தீவு எது? 

கிரீன்லாந்து

2." தண்ணீர் தேசம்" அல்லது "மிதவை நகரம் " என்றழைக்கப்டும் நகரம் எது? 

வெனிஸ் நகரம்.

English words :

Alert - Quick to notice, விழிப்பான.

Direct - Straight to the point, நேரடியான.

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராம வளர்ச்சி, சாலை, குடிநீர், சுகாதாரம் போன்ற விஷயங்கள் குறித்து கிராம சபையில் ஆலோசிக்கப்படுகிறது.
மக்கள் நேரடியாக தங்கள் கருத்துகளை தெரிவிக்க முடியும்.

NMMS :

MAT 

2000°C வெப்பநிலையில் ______________________% நீரானது சிதைவடைந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களைத் தருகிறது. 

 (1) 0.02. 

 (2) 0.2. 

 (3) 2. 

 (4) 0.1. 

 விடை: (1) 0.02

ஜூலை 30


டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் பிறந்த நாள்

முத்துலட்சுமி (Muthulakshmi )(சூலை 30, 1886 - சூலை 22, 1968) மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார். 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். இந்திய அரசாங்கத்தின் பத்மபூசண் விருதைப் பெற்றுள்ளார்.

நீதிக்கதை

 "அளவான செலவே அமைதியான வாழ்க்கை "

ஒரு சிறிய நகரில் ரமேஷ், லதா என்ற தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ரமேஷுக்கு மாதந்தோறும் கிடை க்கும் வருமானத்தில் குடும்பத்தை சிக்கனமாக நடத்தி வந்தார்.

ஒருநாள் அக்கம்பக்கத்தினர் புதிய கார், விலையுயர்ந்த பொருட்கள் வாங்கியதைப் பார்த்த லதாவுக்கு, "நாமும் அவர்களைப்போல வாழ வேண்டும்" என்ற ஆசை வந்தது. அதனால் தேவையில்லாத பொருட்களை தவணையில் வாங்க ஆரம்பித்தார்கள்.

வீட்டுச் செலவுகளும் அதிகரித்தன. சில மாதங்களில் கடன் பெருகி, மாத இறுதியில் அத்தியாவசிய செலவுகளுக்குக் கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.

அப்போது ரமேஷின் தந்தை அவர்களிடம், "வருமானத்தை விட அதிகமாகச் செலவு செய்தால் மனநிம்மதியும் போய்விடும். முதலில் தேவைகளைப் பாருங்கள்; பிறகு ஆசைகளை நிறைவேற்றுங்கள்," என்று அறிவுரை கூறினார்.

அந்த அறிவுரையை ஏற்றுக்கொண்ட ரமேஷும் லதாவும் தேவையற்ற செலவுகளை நிறுத்தி, வருமானத்திற்கே ற்ப செலவு செய்யத் தொடங்கினர். சிறிது சிறிதாக கடன்களை அடைத்து, மீண்டும் நிம்மதியாக வாழ ஆரம்பித்தனர்.

நீதி:

வருமானத்திற்குத் தகுந்தபடி செலவு செய்தால் வாழ்க்கை வளமாகும்.

அகலக்கால் வைத்தால் கடனும் கவலையும் மட்டுமே பெருகும்.

இன்றைய செய்திகள்

30.07.2026

🗒️தொழில் துறையில் AI பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசுடன் கைகோர்த்த சென்னை ஐ.ஐ.டி. சிறப்பு தொழில்நுட்ப மையம்.

🗒️இந்திய மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம்  தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேறியது..

🗒️இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்திய அமெரிக்கா.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலப்பதக்கம் வென்ற சோனம் ஜோடி.

 🏀தைபே ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, தைவானின் வாங் போ வெய் உடன் மோதி வெற்றி பெற்றார்.

Today's Headlines

🗒️ IIT Madras has joined hands with the Tamil Nadu Government to increase the use of AI (Artificial Intelligence) in industries.

🗒️ The Examination Reforms Bill was passed in the Indian Parliament (Lok Sabha) by a voice vote.

🗒️ The United States quickly implemented its plan to impose a 100% tariff on India.

Sports News

🏀 At the ISSF World Cup Shooting, the Sonam pair won a bronze medal.

🏀 At the Taipei Open Badminton Tournament, Indian player Unnati Hooda defeated Wang Po-Wei of Taiwan.

Covai women ICT_போதிமரம்

Tuesday, July 28, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.07.26

பன்னாட்டுப் புலி நாள்
      




திருக்குறள்: 

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:46  சிற்றினம் சேராமை

குறள் எண்:460

குறள்: 
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.   

பொருள்:

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை. 

பழமொழி :

Hitch your wagon to a star

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் என் கடமையை தவறாமல் செய்வேன். 

2. கல்லடிபட்டாலும் கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் பணி செய்ய முயற்சிப்பேன்.

பொன்மொழி : 

தடைகள் வந்தால் நின்றுவிடாதே; அவற்றைத் தாண்டிச் செல்ல கற்றுக்கொள்.

Thought for the Day :

When obstacles appear, don't stop. Learn to overcome them.

பொது அறிவு : 

1. அஞ்சல் தலை (STAMP) பற்றி படிக்கும் படிப்பின் பெயர் என்ன? 

பிலாடலி (PHILATELY). 

2. இந்தியாவில் முதன் முதலில் அஞ்சல் தலை வெளியானது எப்போது? 

மே 6, 1854.

English words :

Wise - Having good judgment, அறிவார்ந்த.

Polite - Having good manners, மரியாதையான

புவியியலும் சுற்றுசூழலும் :

கீழ்கண்டவைகள் இந்தியாவின் முக்கிய புவியியல் பிரிவுகள் ஆகும். 

1. வடக்கு மலைப் பகுதி – இமயமலைத் தொடர்

2. வட இந்திய சமவெளி – கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதிகளால் உருவான வளமான சமவெளி

3. தீபகற்ப பீடபூமி – இந்தியாவின் பழமையான பாறைப் பகுதி

4. கடலோரச் சமவெளிகள் – கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகள்

5. தீவுகள் – அந்தமான்–நிக்கோபார் மற்றும் இலட்சத்தீவுகள்

NMMS :

MAT 

பச்சைக் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்கள் சமைக்கப்படும் நிகழ்வு கீழ்க்காணும் எவ்வகை வினையைச் சேர்ந்தது? 

 (1) மின்னாற் பகுத்தல் 

 (2) வெப்பச்சிதைவு 

 (3) ஒளி வேதி வினைகள்

 (4) வினைவேக மாற்றி வினைகள் 

 விடை: (2) வெப்பச்சிதைவு

ஜூலை 29

பன்னாட்டுப் புலி நாள்

பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள் என்பது புலி வளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29இல் கொண்டாடப்படும் நாளாகும்.இந்நாள் 2010இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில் உருவாக்கப்பட்டது. இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.

நீதிக்கதை

 "மலரும் மண்ணும்"

ஒரு கிராமத்தில் ராகுல், விஷால் என்ற இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.

பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு செடி கொடுத்து வளர்க்க ஆசிரியர் கூறினார்.

ராகுலுக்கு தோட்ட வேலை பிடிக்காது. ஆனால் ஆசிரியர் சொன்னதால் மட்டும் தினமும் விருப்பமில்லாமல் செடிக்கு தண்ணர் ஊற்றினான். சில நாட்களில் அதை மறந்துவிடுவான். "ஆசிரியர் சொன்னதால் செய்கிறேன், அதுவே போதும்" என்று எண்ணினான்.

விஷால் மட்டும், "இந்தச் செடி நன்றாக வளர வேண்டும். இது நிழலும் காற்றும் தரும்" என்று மனமார விரும்பி தினமும் அன்புடன் தண்ணர் ஊற்றி, களைகளை அகற்றி, கவனமாக வளர்த்தான்.

சில மாதங்களுக்குப் பிறகு, ராகுலின் செடி வாடிப்போனது. ஆனால் விஷாலின் செடி பசுமையாக வளர்ந்து மலர்களால் குலுங்கியது.

அதைப் பார்த்த ஆசிரியர் கூறினார்:

"கட்டாயப்படுத்தி ஒரு செயலை ஆரம்பிக்கலாம். ஆனால் அதை வெற்றிகரமாக முடிக்க முடிவது, அந்தச் செயலை முழு மனதுடன் தன்னார்வமாகச் செய்பவரால்தான்."

நீதி:

எந்தச் செயலையும் பிறர் கட்டாயப்படுத்துவதால் அல்ல, நாமே முழு மனதுடனும் தன்னார்வத்துடனும் செய்தால்தான் உண்மையான வெற்றி  கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

29.07.2026

🗒️தமிழ்நாட்டில் தடையற்ற மின் விநியோகம், மேம்பட்ட மின் வலையமைப்பு, தூய்மையான எரிசக்தி பயன்பாடு மற்றும் எதிர்காலத்  தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தும் அரசின் உறுதியான முன்னெடுப்பாக அமையும் என மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

🗒️யூரியா உரம் இறக்குமதியில் தட்டுப்பாடு இருப்பதால்  மாற்று வழிக்கு அனுமதி அளித்தது  மத்திய அரசு.

🗒️ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சர்வேஷ் குஷாரே வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

Today's Headlines


🗒️ The Electricity Minister said that the government’s strong efforts will help provide uninterrupted power supply, improved electricity networks, clean energy usage, and the implementation of future technologies in Tamil Nadu.

🗒️ Due to a shortage in urea fertilizer imports, the Central Government has allowed alternative methods to solve the issue.

🗒️ A powerful earthquake was felt in Japan. A tsunami warning has also been issued.

Sports News

🏀 In the Commonwealth Games held in Glasgow, India’s Sarvesh Kushare won a silver medal in the high jump event.

Covai women ICT_போதிமரம்

 

Monday, July 27, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.07.26

உலகக் கல்லீரல் அழற்சி நாள்




திருக்குறள்: 

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:46  சிற்றினம் சேராமை

குறள் எண்:459

குறள்: 

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. 

பொருள்:

மனத்தின் செம்மையாலே மறுமை இன்பம் உண்டாகும்; மற்று அந்த மறுமையும், சேர்ந்த இனத்தின் செம்மையால் நல்ல பாதுகாப்புடன் இருக்கும்.

பழமொழி :

Health is wealth

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் என் கடமையை தவறாமல் செய்வேன். 

2. கல்லடிபட்டாலும் கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் பணி செய்ய முயற்சிப்பேன்.

பொன்மொழி : 

கடின உழைப்பும் தொடர்ந்த போராட்டமும் வெற்றியின் இரு சிறகுகள்.

Thought for the Day :

Hard work and continuous struggle are the two wings of success.

பொது அறிவு : 

1. இந்திய ரூபாய் சின்னத்தை வடிவமைத்தவர் யார்? 

டி. உதயகுமார்

2. நாணயங்கள் பற்றி படிக்கும் படிப்பு எது? 

நாணயவியல் (NUMISMATICS)

English words :

Keen - Sharpened or eager, கூர்மையான / ஆர்வமுள்ள.

Bold - Brave and confident, துணிச்சலான.

புவியியலும் சுற்றுசூழலும் :

"இந்தியாவின் அமைவிடம்:

இந்தியா வட அரைக்கோளம் மற்றும் கிழக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.

வடக்கில் – இமயமலை

தெற்கில் – இந்தியப் பெருங்கடல்

மேற்கில் – அரபிக்கடல்

கிழக்கில் – வங்காள விரிகுடா ஆகியவை எல்லைகளாக உள்ளன"

NMMS :

MAT - Science

காற்றில் மெக்னீசியம் நாடா எரிக்கப்படும்போது  உருவாகும் சேர்மம் எது?                                 

(1) மெக்னீசியம் கார்பனேட்                  

(2)மெக்னீசியம் குளோரைடு                    

(3) மெக்னீசியம் ஆக்ஸைடு                              

 (4) மெக்னீசியம் சல்ஃபேட்                                                 

 விடை: (3) மெக்னீசியம் ஆக்ஸைடு

ஜூலை 28

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.


உலகக் கல்லீரல் அழற்சி நாள்

உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது

நீதிக்கதை

 "தாமதமாக விழித்த அரவிந்த்"

அரவிந்த் என்ற மாணவனுக்கு இரவு நேரம் வரை மொபைல் பார்த்தும்,

விளையாடியும் விழித்திருக்கும் பழக்கம் இருந்தது. தினமும் நள்ளிரவுக்குப் பிறகே தூங்குவான். அதனால் காலையில் சரியான நேரத்தில் எழ முடியாமல் பள்ளிக்குச் செல்ல அவசரப்படுவான்.

ஒருநாள் பள்ளியில் முக்கியமான அறிவியல் செய்முறைப் போட்டி நடந்தது. ஆனால் அரவிந்த் தாமதமாக எழுந்ததால் பள்ளிக்குச் செல்லவும் தாமதமானது.

போட்டியில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பை இழந்தான். மிகவும்

வருத்தமடைந்தான்.

அதைப் பார்த்த ஆசிரியர், "இரவில் சரியான நேரத்தில் தூங்கி, காலையில் சீக்கிரம் எழுபவர்கள்தான் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்து தங்கள் இலக்கை எளிதில் அடைவார்கள்" என்று அறிவுரை கூறினார்.

அன்றிலிருந்து அரவிந்த் தினமும் இரவு சீக்கிரம் தூங்கி, காலையில் நேரத்தில் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். படிப்பிலும் முன்னேறி, போட்டிகளிலும் வெற்றி பெறத் தொடங்கினான்.

நீதி:

"இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல், சீக்கிரம் தூங்கி, காலையில் நேரத்தில் எழுவது ஆரோக்கியத்திற்கும் வெற்றிக்கும் அடிப்படை .”

இன்றைய செய்திகள்

28.07.2026

🗒️தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீடு பற்றிய விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு  பொறியியல் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.

🗒️ரூ.100 கோடிக்கு கூடுதலான வருவாய், தனிநபர் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய அரசுத் தகவல்.

🗒️விண்வெளி குப்பைகளை கண்காணிப்பது அவசியமாகிறது என்பதால்  விண்வெளி கழிவுகளை கண்காணிக்க புதிய செயற்கைக் கோளை சீனா ஏவியுள்ளது .

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀காமன்வெல்த் போட்டிகள்
 பளுதூக்குதல் இந்திய வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்.

👍🏼ISSF
 உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மகளிர் பிரிவில் ஈஷா சிங் தங்கப்பதக்கத்தையும், மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

Today's Headlines

🗒️The Directorate of Technical Education, Tamil Nadu, said that students who need help about engineering counselling or seat allotment can contact the Tamil Nadu Engineering Admission (TNEA) Facilitation Centres.

🗒️The Central Government said that the number of people earning more than ₹100 crore has increased four times in the last five years.

🗒️China has launched a new satellite to monitor space debris (space junk), as tracking space waste has become important.

Sports News

🏀Commonwealth Games:
An Indian woman weightlifter won the silver medal.

👍🏼ISSF World Cup Shooting:
In the women's events, Esha Singh won the gold medal, and Manu Bhaker won the bronze medal, bringing pride to India.

Covai women ICT_போதிமரம்