Pages

Tuesday, July 28, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.07.26

பன்னாட்டுப் புலி நாள்
      




திருக்குறள்: 

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:46  சிற்றினம் சேராமை

குறள் எண்:460

குறள்: 
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.   

பொருள்:

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை. 

பழமொழி :

Hitch your wagon to a star

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் என் கடமையை தவறாமல் செய்வேன். 

2. கல்லடிபட்டாலும் கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் பணி செய்ய முயற்சிப்பேன்.

பொன்மொழி : 

தடைகள் வந்தால் நின்றுவிடாதே; அவற்றைத் தாண்டிச் செல்ல கற்றுக்கொள்.

Thought for the Day :

When obstacles appear, don't stop. Learn to overcome them.

பொது அறிவு : 

1. அஞ்சல் தலை (STAMP) பற்றி படிக்கும் படிப்பின் பெயர் என்ன? 

பிலாடலி (PHILATELY). 

2. இந்தியாவில் முதன் முதலில் அஞ்சல் தலை வெளியானது எப்போது? 

மே 6, 1854.

English words :

Wise - Having good judgment, அறிவார்ந்த.

Polite - Having good manners, மரியாதையான

புவியியலும் சுற்றுசூழலும் :

கீழ்கண்டவைகள் இந்தியாவின் முக்கிய புவியியல் பிரிவுகள் ஆகும். 

1. வடக்கு மலைப் பகுதி – இமயமலைத் தொடர்

2. வட இந்திய சமவெளி – கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதிகளால் உருவான வளமான சமவெளி

3. தீபகற்ப பீடபூமி – இந்தியாவின் பழமையான பாறைப் பகுதி

4. கடலோரச் சமவெளிகள் – கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகள்

5. தீவுகள் – அந்தமான்–நிக்கோபார் மற்றும் இலட்சத்தீவுகள்

NMMS :

MAT 

பச்சைக் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்கள் சமைக்கப்படும் நிகழ்வு கீழ்க்காணும் எவ்வகை வினையைச் சேர்ந்தது? 

 (1) மின்னாற் பகுத்தல் 

 (2) வெப்பச்சிதைவு 

 (3) ஒளி வேதி வினைகள்

 (4) வினைவேக மாற்றி வினைகள் 

 விடை: (2) வெப்பச்சிதைவு

ஜூலை 29

பன்னாட்டுப் புலி நாள்

பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள் என்பது புலி வளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29இல் கொண்டாடப்படும் நாளாகும்.இந்நாள் 2010இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில் உருவாக்கப்பட்டது. இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.

நீதிக்கதை

 "மலரும் மண்ணும்"

ஒரு கிராமத்தில் ராகுல், விஷால் என்ற இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.

பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு செடி கொடுத்து வளர்க்க ஆசிரியர் கூறினார்.

ராகுலுக்கு தோட்ட வேலை பிடிக்காது. ஆனால் ஆசிரியர் சொன்னதால் மட்டும் தினமும் விருப்பமில்லாமல் செடிக்கு தண்ணர் ஊற்றினான். சில நாட்களில் அதை மறந்துவிடுவான். "ஆசிரியர் சொன்னதால் செய்கிறேன், அதுவே போதும்" என்று எண்ணினான்.

விஷால் மட்டும், "இந்தச் செடி நன்றாக வளர வேண்டும். இது நிழலும் காற்றும் தரும்" என்று மனமார விரும்பி தினமும் அன்புடன் தண்ணர் ஊற்றி, களைகளை அகற்றி, கவனமாக வளர்த்தான்.

சில மாதங்களுக்குப் பிறகு, ராகுலின் செடி வாடிப்போனது. ஆனால் விஷாலின் செடி பசுமையாக வளர்ந்து மலர்களால் குலுங்கியது.

அதைப் பார்த்த ஆசிரியர் கூறினார்:

"கட்டாயப்படுத்தி ஒரு செயலை ஆரம்பிக்கலாம். ஆனால் அதை வெற்றிகரமாக முடிக்க முடிவது, அந்தச் செயலை முழு மனதுடன் தன்னார்வமாகச் செய்பவரால்தான்."

நீதி:

எந்தச் செயலையும் பிறர் கட்டாயப்படுத்துவதால் அல்ல, நாமே முழு மனதுடனும் தன்னார்வத்துடனும் செய்தால்தான் உண்மையான வெற்றி  கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

29.07.2026

🗒️தமிழ்நாட்டில் தடையற்ற மின் விநியோகம், மேம்பட்ட மின் வலையமைப்பு, தூய்மையான எரிசக்தி பயன்பாடு மற்றும் எதிர்காலத்  தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தும் அரசின் உறுதியான முன்னெடுப்பாக அமையும் என மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

🗒️யூரியா உரம் இறக்குமதியில் தட்டுப்பாடு இருப்பதால்  மாற்று வழிக்கு அனுமதி அளித்தது  மத்திய அரசு.

🗒️ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சர்வேஷ் குஷாரே வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

Today's Headlines


🗒️ The Electricity Minister said that the government’s strong efforts will help provide uninterrupted power supply, improved electricity networks, clean energy usage, and the implementation of future technologies in Tamil Nadu.

🗒️ Due to a shortage in urea fertilizer imports, the Central Government has allowed alternative methods to solve the issue.

🗒️ A powerful earthquake was felt in Japan. A tsunami warning has also been issued.

Sports News

🏀 In the Commonwealth Games held in Glasgow, India’s Sarvesh Kushare won a silver medal in the high jump event.

Covai women ICT_போதிமரம்

 

Monday, July 27, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.07.26

உலகக் கல்லீரல் அழற்சி நாள்




திருக்குறள்: 

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:46  சிற்றினம் சேராமை

குறள் எண்:459

குறள்: 

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. 

பொருள்:

மனத்தின் செம்மையாலே மறுமை இன்பம் உண்டாகும்; மற்று அந்த மறுமையும், சேர்ந்த இனத்தின் செம்மையால் நல்ல பாதுகாப்புடன் இருக்கும்.

பழமொழி :

Health is wealth

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் என் கடமையை தவறாமல் செய்வேன். 

2. கல்லடிபட்டாலும் கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் பணி செய்ய முயற்சிப்பேன்.

பொன்மொழி : 

கடின உழைப்பும் தொடர்ந்த போராட்டமும் வெற்றியின் இரு சிறகுகள்.

Thought for the Day :

Hard work and continuous struggle are the two wings of success.

பொது அறிவு : 

1. இந்திய ரூபாய் சின்னத்தை வடிவமைத்தவர் யார்? 

டி. உதயகுமார்

2. நாணயங்கள் பற்றி படிக்கும் படிப்பு எது? 

நாணயவியல் (NUMISMATICS)

English words :

Keen - Sharpened or eager, கூர்மையான / ஆர்வமுள்ள.

Bold - Brave and confident, துணிச்சலான.

புவியியலும் சுற்றுசூழலும் :

"இந்தியாவின் அமைவிடம்:

இந்தியா வட அரைக்கோளம் மற்றும் கிழக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.

வடக்கில் – இமயமலை

தெற்கில் – இந்தியப் பெருங்கடல்

மேற்கில் – அரபிக்கடல்

கிழக்கில் – வங்காள விரிகுடா ஆகியவை எல்லைகளாக உள்ளன"

NMMS :

MAT - Science

காற்றில் மெக்னீசியம் நாடா எரிக்கப்படும்போது  உருவாகும் சேர்மம் எது?                                 

(1) மெக்னீசியம் கார்பனேட்                  

(2)மெக்னீசியம் குளோரைடு                    

(3) மெக்னீசியம் ஆக்ஸைடு                              

 (4) மெக்னீசியம் சல்ஃபேட்                                                 

 விடை: (3) மெக்னீசியம் ஆக்ஸைடு

ஜூலை 28

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.


உலகக் கல்லீரல் அழற்சி நாள்

உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது

நீதிக்கதை

 "தாமதமாக விழித்த அரவிந்த்"

அரவிந்த் என்ற மாணவனுக்கு இரவு நேரம் வரை மொபைல் பார்த்தும்,

விளையாடியும் விழித்திருக்கும் பழக்கம் இருந்தது. தினமும் நள்ளிரவுக்குப் பிறகே தூங்குவான். அதனால் காலையில் சரியான நேரத்தில் எழ முடியாமல் பள்ளிக்குச் செல்ல அவசரப்படுவான்.

ஒருநாள் பள்ளியில் முக்கியமான அறிவியல் செய்முறைப் போட்டி நடந்தது. ஆனால் அரவிந்த் தாமதமாக எழுந்ததால் பள்ளிக்குச் செல்லவும் தாமதமானது.

போட்டியில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பை இழந்தான். மிகவும்

வருத்தமடைந்தான்.

அதைப் பார்த்த ஆசிரியர், "இரவில் சரியான நேரத்தில் தூங்கி, காலையில் சீக்கிரம் எழுபவர்கள்தான் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்து தங்கள் இலக்கை எளிதில் அடைவார்கள்" என்று அறிவுரை கூறினார்.

அன்றிலிருந்து அரவிந்த் தினமும் இரவு சீக்கிரம் தூங்கி, காலையில் நேரத்தில் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். படிப்பிலும் முன்னேறி, போட்டிகளிலும் வெற்றி பெறத் தொடங்கினான்.

நீதி:

"இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல், சீக்கிரம் தூங்கி, காலையில் நேரத்தில் எழுவது ஆரோக்கியத்திற்கும் வெற்றிக்கும் அடிப்படை .”

இன்றைய செய்திகள்

28.07.2026

🗒️தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீடு பற்றிய விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு  பொறியியல் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.

🗒️ரூ.100 கோடிக்கு கூடுதலான வருவாய், தனிநபர் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய அரசுத் தகவல்.

🗒️விண்வெளி குப்பைகளை கண்காணிப்பது அவசியமாகிறது என்பதால்  விண்வெளி கழிவுகளை கண்காணிக்க புதிய செயற்கைக் கோளை சீனா ஏவியுள்ளது .

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀காமன்வெல்த் போட்டிகள்
 பளுதூக்குதல் இந்திய வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்.

👍🏼ISSF
 உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மகளிர் பிரிவில் ஈஷா சிங் தங்கப்பதக்கத்தையும், மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

Today's Headlines

🗒️The Directorate of Technical Education, Tamil Nadu, said that students who need help about engineering counselling or seat allotment can contact the Tamil Nadu Engineering Admission (TNEA) Facilitation Centres.

🗒️The Central Government said that the number of people earning more than ₹100 crore has increased four times in the last five years.

🗒️China has launched a new satellite to monitor space debris (space junk), as tracking space waste has become important.

Sports News

🏀Commonwealth Games:
An Indian woman weightlifter won the silver medal.

👍🏼ISSF World Cup Shooting:
In the women's events, Esha Singh won the gold medal, and Manu Bhaker won the bronze medal, bringing pride to India.

Covai women ICT_போதிமரம்

Sunday, July 26, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

APJ அப்துல் கலாம்





திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:46 சிற்றினம் சேராமை

குறள் எண்:458

குறள்:

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.

பொருள்:

மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.

பழமொழி :

Honesty is the best policy.

நேர்மையே சிறந்த கொள்கை.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் என் கடமையை தவறாமல் செய்வேன். 

2. கல்லடிபட்டாலும் கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் பணி செய்ய முயற்சிப்பேன்.

பொன்மொழி : 

போராட்டங்கள் உன்னை உடைக்க வருவதில்லை; உயர்த்த வருபவையே.

Thought for the Day :

Struggles do not come to break you; they come to lift you higher.

பொது அறிவு : 

1. கபில் தேவ் அவர்களின் சுயசரிதையின் பெயர் என்ன? 

STRAIGHT FROM THE HEART. 

2.நெல்சன் மண்டேலா அவர்களின் சுயசரிதையின் பெயர் என்ன? 

LONG WALK TO FREEDOM.

English words :

Expand – Enlarge, விரிவாக்கு.
Maintain – Preserve, பராமரி.

புவியியலும் சுற்றுசூழலும் :

நமது இந்திய துணைக்கண்டம் ஆசியக் கண்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும்.

இது இந்தியாவையும் அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்காளதேசம், இலங்கை மற்றும் மாலத்தீவுகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது.

NMMS :

MAT - SCIENCE

கார்போஹைட்ரேட் பலபடிகளுக்கு எடுத்துக்காட்டுகள்

 (1) எத்திலீன் 

(2) புரோபைலீன் 

(3) லிக்னின் 

(4) மெத்திலீன் 

விடை: (3) லிக்னின்

ஜூலை 27

அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாள்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.  2002 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 27, 2015 இல் இந்தியாவின், மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.

நீதிக்கதை

 "ஒரு வதந்தியின் விலை"

ஒரு பள்ளியில் அமுதா மற்றும் காவ்யா என்ற இரண்டு தோழிகள் படித்து வந்தனர். ஒருநாள், அமுதா எந்த ஆதாரமும் இல்லாமல், "காவ்யா தேர்வில் நண்பர்களைப் பார்த்து எழுதித்தான் அதிக மதிப்பெண் பெற்றாள்" என்று சில நண்பர்களிடம் கூறினாள்.


அந்தச் செய்தி சிறிது நேரத்தில் பள்ளி முழுவதும் பரவியது. பலரும் காவ்யாவைத் தவறாகப் புரிந்துகொண்டு அவளுடன் பேசுவதைத் தவிர்த்தனர். இதனால் காவ்யா மிகவும் மனவேதனை அடைந்தாள்.


இதைக் கவனித்த வகுப்பு ஆசிரியர் அனைவரையும் அழைத்து, "உண்மை தெரியாமல் ஒருவரைப் பற்றி புரளி பேசுவது, அவர்களின் மனதையும் நற்பெயரையும் காயப்படுத்தும். ஒரு வார்த்தையைப் பேசுவதற்கு முன் அது உண்மையா, நல்லதா, பயனுள்ளதா என்று சிந்திக்க வேண்டும்," என்றார்.


பின்னர், காவ்யா நேர்மையாகப் படித்து உழைத்ததால்தான் அதிக மதிப்பெண் பெற்றது தெரியவந்தது. அமுதா தன் தவறை உணர்ந்து, அனைவரின் முன்னிலையிலும் காவ்யாவிடம் மன்னிப்பு கேட்டாள்.


நீதி:

 உண்மை தெரியாமல் யாரைப்பற்றியும் புரளி பேசாதே; ஒரு வதந்தி ஒருவரின் நற்பெயரைக் கெடுத்துவிடும்.

இன்றைய செய்திகள்

27.07.2026

🗒️எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவை மருத்துவ கல்வி இயக்குனரகம் கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி தொடங்கியது.

🗒️ மத்தியக் கல்வித்துறை அமைச்சராக  பிரகலாத் ஜோஷி கூடுதல் பொறுப்பை ஏற்றார்.

🗒️ 100 ஆண்டுகால புதிருக்கு விடை கண்டுபிடித்த சீன  விஞ்ஞானிகளுக்கு கணித உலகின் உயரிய விருதான பீல்ட்ஸ் மெடல்' ஐ அமெரிக்கா வழங்கியுள்ளது.

 விளையாட்டுச் செய்திகள்

🏀 காமன்வெல்த் விளையாட்டு: இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம்  கிடைத்தது. காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கம் - மீராபாய் சானு அசத்தல்.
   *  ஆண்களுக்கான பவர் லிப்டிங் பிரிவில் களம் கண்ட  இந்திய வீரர் ஜாண்டு குமார் வெண்கல பதக்கம் வென்றார்.

🏀உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இந்திய வீராங்கனை 
இந்திய வீராங்கனை அனகத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.

Today's Headlines

🗒️ The last date to apply for MBBS and BDS courses has been extended up to this evening. The Directorate of Medical Education started the online application process for medical counselling on June 29.

🗒️ Pralhad Joshi has taken additional charge as the Union Minister for Education.

🗒️ Chinese scientists, who solved a 100-year-old mathematics problem, have been awarded the Fields Medal, the highest honour in mathematics.

Sports News

🏀 Commonwealth Games: India wins its first gold medal. Commonwealth Weightlifting: India's first gold – Mirabai Chanu shines.
   *  Indian athlete Jandu Kumar won the bronze medal in the men's powerlifting event.

🏀 World Junior Squash: Indian player Anahat Singh won the championship title.

Covai women ICT_போதிமரம்

Thursday, July 23, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.07.26

யஷ் பால்
 




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:46 சிற்றினம் சேராமை

குறள் எண்:457

குறள்:

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

பொருள்:

மனத்தின் நல்ல நிலையே மன்னுயிர்க்கு ஆக்கம் தரும்; இனத்தின் நல்ல துணையோ எல்லாவகையான புகழையும் ஒருவனுக்குத் தருவதாகும்.

பழமொழி :

Good beginning makes a good ending.

நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பொது அறிவு மற்றும் நற்பண்புகளால் என்னை நான் உயர்த்திக் கொள்வேன். 

2. என் பெற்றோரையும் ஆசிரியர்களையும் துன்புறுத்தும் எந்த ஒரு செயலையும் நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி : 

வீழ்வது தோல்வி அல்ல; மீண்டும் எழாமல் இருப்பதே தோல்வி.

Thought for the Day :

Falling is not failure; refusing to rise again is.

பொது அறிவு : 

1.உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய நாடு எது? 

ரோம். 

2.இந்தியாவின் முதல் முறையான சூரியசக்தி விமான நிலையம் எது? 

கொச்சின், கேரளா.

English words :

Remarkable - Worth noticing; extraordinary, குறிப்பிடத்தக்க / அசாதாரணமான. 

Acquire – Obtain, பெறு.

புவியியலும் சுற்றுசூழலும் :

இது உள்ளாட்சி அமைப்புகளில் மிகவும் அடிப்படையானது.

கிராம நிர்வாகத்தின் முக்கிய அமைப்புகள்

1. கிராம சபை

18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் கிராம சபை உறுப்பினர்கள் ஆவர்

NMMS :

MAT 

கொடுக்கப்பட்டுள்ள படங்களில் வேறுபட்டதைத் தேர்ந்தெடு 



விடை: (1)

ஜூலை 24

யஷ் பால் அவர்களின் நினைவுநாள்

யஷ் பால் (Yash Pal, 26 நவம்பர் 1926 - 24 சூலை 2017) இந்திய அறிவியலாளர் ஆவார்.இவர் விண்வெளிக் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் முதலில் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் பணியைத் தொடங்கி, பின்னர் இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவில் தலைமைப் பொறுப்பிலும் இருந்துள்ளார்.

அறிவியலின் வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இவருக்கு கலிங்கா விருதை வழங்கிச் சிறப்பித்தது.

இந்திய அரசின் பத்ம பூசண் விருதை 1976ஆம் ஆண்டில் பெற்றார்.

2013ஆம் ஆண்டில், பத்ம விபூசண் விருதைப் பெற்றார்.

நீதிக்கதை

  "வெற்றி மட்டும் இலக்கு அல்ல"


ஒரு பள்ளியில் அம்பிகா மற்றும் அருணன் என்ற இரு மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். பள்ளியில் ஓவியம், ஓட்டப்பந்தயம், பேச்சுப் போட்டி போன்ற பல போட்டிகள் நடைபெறவிருந்தன.


அம்பிகா, "நான் வெற்றி பெறவில்லை என்றால் என்ன செய்வேன்?" என்று பயந்து எந்தப் போட்டியிலும் பெயர் பதிவு செய்யவில்லை.


ஆனால் அருணன், "வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்கவில்லை என்றாலும் புதிய அனுபவம் கிடைக்கும்" என்று நினைத்து மூன்று போட்டிகளில் பங்கேற்றான்.


போட்டி நாளில் அருணன் ஓட்டப்பந்தயத்தில் தோற்றான். ஆனால் பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசும், ஓவியப் போட்டியில் சிறப்புப் பரிசும் பெற்றான். அதைவிட முக்கியமாக, அவனுக்கு தன்னம்பிக்கை, புதிய நண்பர்கள், மேடையில் பேசும் துணிச்சல் ஆகியவை கிடைத்தன.


இதைப் பார்த்த அம்பிகா, "நான் பயத்தால் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டேன். அடுத்த முறை கண்டிப்பாக போட்டிகளில் பங்கேற்பேன்" என்று முடிவு செய்தாள்.


நீதி:


போட்டிகளில் பங்கேற்பது வெற்றிக்காக மட்டுமல்ல; தன்னம்பிக்கை, திறமை, அனுபவம் மற்றும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்க்கும்.


இன்றைய செய்திகள்

24.07.2026

🗒️டெல்லி கனாட் பிளேஸில் தீவிரமடையும் நீட் எதிர்ப்பு போராட்டம் , அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு.

🗒️நாமக்கல்- அரியலூர் இடையே 
புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த விரிவான செயல்திட்டம் குறித்த அறிக்கை தயாரிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியள்ளார்.

🗒️அட்லாண்டிக் பெருங்கடலில் 74 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் மூழ்கிய  விமானத்தின் பாகங்கள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 விளையாட்டுச் செய்திகள்

🏀காமன்வெல்த் விளையாட்டு: இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்த லவ்லினா.

 🏀கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி. வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.

Today's Headlines

🗒️ The NEET protest is becoming stronger at Connaught Place in Delhi. All shops have been ordered to close.

🗒️ Railway Minister Ashwini Vaishnaw said that approval has been given to prepare a detailed project report for a new railway line between Namakkal and Ariyalur.

🗒️ Parts of an airplane that crashed into the Atlantic Ocean 74 years ago have now been discovered.

Sports News

🏀 Commonwealth Games: Lovlina has assured India's first medal in the competition.

🏀 Cricket: India defeated Zimbabwe. Vaibhav Suryavanshi played brilliantly and scored a half-century.

Covai women ICT_போதிமரம்