Pages

Thursday, August 21, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -22.08.2025

சென்னைதினம்

   






திருக்குறள்: 

குறள் 324: 

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் 
கொல்லாமை சூழும் நெறி. 

விளக்க உரை: 

நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

பழமொழி :

Learn today, lead tomorrow. 

இன்று கற்றுக்கொள், நாளை தலைமை தாங்கு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நல்ல புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்.


2. எனவே நல்ல புத்தகங்களை தேடிப் படிப்பேன்.

பொன்மொழி :

கடுமையான கஞ்சத்தனம் ,தகுதியற்ற தற்பெருமை , எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் ஒரு மனிதனை வீணாக்கி விடும் - முகம்மது நபி

பொது அறிவு : 

01.தமிழ்நாட்டின் சிமெண்ட் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?

அரியலூர்(Ariyalur )

02. பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் பெயர் என்ன?

பாரத இம்பீரியல் வங்கி
Imperial Bank of India.

English words :

artisan - a person who makes things skilfully, especially with their hands;கைவினை கலைஞர்

Grammar Tips: 

 Two Conjunctions should not be used in the same sentence.

 Incorrect sentence - Although she was tired, but she still went on working. 

Correct sentence- Although she was tired, she still went on working

அறிவியல் களஞ்சியம் :

 குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.

ஆகஸ்ட் 22

சென்னை தினம்

  •  சென்னைதினம்  என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.

  • கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். 

  • வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.

நீதிக்கதை

 முரட்டு ஆடு


ஒரு மலையடிவாரம் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதன் அருகே அழகிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதனால், அங்கே மலையடிவாரத்தில் பச்சைப்பசேல் என்று புல் வளர்ந்திருந்தது. 


அவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை. அங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும். 


ஒரு நாள் ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து பயந்து தப்பி ஓடி முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது. முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம் என்று கோபமாகக் கேட்டது. அதற்கு அந்த ஆடு, அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன் என்று அமைதியாக சொன்னது. 

முரட்டு ஆடோ, அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டைப்போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சமாதானமாகவே பேசியும், முரட்டு ஆடு கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று சண்டையிட்டது. 

மலைச்சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி ஆற்றில் விழுந்தது. ஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக்கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டது. 

நீதி :
தான்தான் பெரியவன் தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற ஆணவம், திமிரு இருந்தால் நஷ்டம் நமக்கே.

இன்றைய செய்திகள்

22.08.2025

⭐12 மற்றும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி
வரி நீக்கம்: மந்திரிகள் பொதுக்கூட்டத்தில் ஒப்புதல்.

⭐ஆன்லைன் கேமிங் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்.

⭐காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

⭐ஐதராபாத்-சென்னை புல்லட் ரெயில் பாதை அமைக்க ஆய்வு

🏀  விளையாட்டு செய்திகள்

🏀மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரகானே விலகல்

🏀இரண்டே போட்டியில் சர்ச்சையில் சிக்கினார் தென்ஆப்பிரிக்க பவுலர் சுப்ராயன்.


Today's Headlines

⭐ Central Minister's  general meeting approved the 12 percent and 28 percent of GST tax 

⭐Purpose of the Online Gaming Ban Bill passed in the Rajya Sabha. 

⭐Chief Minister M.K. Stalin to launch breakfast meal scheme expansion from August 26th.

⭐Plan proceeds to set up the Hyderabad-Chennai bullet train line.

 SPORTS NEWS 

🏀Rahane steps down as Mumbai captain 

🏀South African bowler Subramanyam was embroiled in controversy in both matches.

Covai women ICT_போதிமரம்

Wednesday, August 20, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -21.08.2025








திருக்குறள்: 

குறள் 322: 

பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர் 
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.  

     விளக்க உரை: கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

பழமொழி :

Your mindset is your superpower. 

உன் மனப்பாங்கே உன்னுடைய மிகப்பெரிய சக்தி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நல்ல புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்.


2. எனவே நல்ல புத்தகங்களை தேடிப் படிப்பேன்.

பொன்மொழி :

பிறர் மிகைப்படுத்தி கூறுவதற்கு முன் உன் குற்றத்தை ஒப்புக் கொள் - அரிஸ்டாட்டில்

பொது அறிவு : 

" 01.சிரவணபெலகோலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிற்பம் எந்த மாநிலத்தில் உள்ளது?


       கர்நாடகா  Karnataka 


02. இந்தியாவை ஏறக்குறைய இரண்டாகப் பிரிக்கும் அட்சரேகை எது?


         23°30' கடக ரேகை

23°30' Tropic of cancer"

English words :

rapport – a friendly relationship in which people understand each other very well.ஒத்துணர்வு மிக்க நட்புறவு

Grammar Tips: 

 Mohan is elder than suji

In this sentence elder should be used for our relatives  or same family 

While using 'elder 'we should use' to'

Persons comparing not limited to the family we can use 'older' 
While using 'older 'we should use 'than'

Mohan is elder to suji(same relationship)
Moha. Is older than suji(outer relationship)

அறிவியல் களஞ்சியம் :

 சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை. 

ஆகஸ்ட் 21

உசைன் போல்ட் அவர்களின் பிறந்தநாள்

* உசைன் போல்ட் என்கிற உசேன் செயிண்ட் லியோ போல்ட் (Usain St. Leo Bolt, பிறப்பு: ஆகத்து 21, 1986) ஜமைக்காவில் பிறந்த தடகள ஆட்டக்காரர். 

* 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நொடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.

* 2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார். ஒலிம்பிக்கின் மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் (100 மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீ) நடப்பு முதன்மை வீரன் (சாம்பியன்), ஒன்பது முறை உலக முதன்மை வீரன், ஒலிம்பிக் விரைவோட்டப் பந்தையங்களில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர், இம்மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் நடப்பு உலக சாதனைகளின் சொந்தக்காரர் எனப் பல சிறப்புகள் போல்ட்டைச் சாரும்.

நீதிக்கதை

 பிச்சைக்காரனும் தங்க நாணயமும்


ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் வீடு வீடாக உணவுக்காக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு இருந்தான். ஒரு பழைய கோணிப்பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப்போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் அந்த வீட்டின் முன்னே போய் நின்று வீடு மிகப் பெரியது, ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றையும் இழப்பார்கள் என்று சொன்னான். 


இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப்படமாட்டேன்! என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது. 


நான் உனக்கு தங்க நாணயங்கள் கொடுத்து உதவுகிறேன் என்றது தேவதை. பிச்சைக்காரன் உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகிவிடும் என்று சொல்லியது. பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை கோணிப்பை நிரம்பியதும் தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. 


உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே? என்றது அதிர்ஷ்ட தேவதை. போதாது. இன்னும் வேண்டும் என்றான் பிச்சைக்காரன். அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்துவிட்டு, உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது என்றது. பிச்சைக்காரன் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றான். அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் கொடுத்தது. மறுவினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான். 


நீதி :

கிடைத்ததை வைத்து வாழவேண்டும். பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.

இன்றைய செய்திகள்

21.08.2025


⭐ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.இந்த மசோதா பாராளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

⭐தமிழ்நாடு (Semiconductor) குறைக்கடத்தி மிஷன் 2030 ன் கீழ், ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 100 ஏக்கரில் தொழில் பூங்காவை தமிழக அரசு உருவாக்க உள்ளது. 

⭐இந்தியா - சீனா இடையே விமான சேவை, எல்லை வர்த்தகத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சவுதி சூப்பர் கப் கால்பந்து: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரொனால்டோவின் அல் நசார் க்ளப்

🏀ஆசிய கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.துணை கேப்டனாக சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார்.

Today's Headlines


⭐The Union Cabinet has approved the bill to regulate online gambling. The bill has been tabled in Parliament.

⭐Under the Tamil Nadu semiconductor mission 2030, the Tamil Nadu government is planning to develop an industrial park on 100 acres in Palladam, Tiruppur district, at an estimated cost of Rs. 500 crore, to provide employment to 1,000 people.

⭐India-China agree to resume air services, border trade 

 *SPORTS NEWS* 

🏀Saudi Super Cup Football: Ronaldo's Al Nassr Club advances to final.

🏀The Indian team led by Suryakumar Yadav has been announced for the Asia Cup. Shubman Gill has been named as the vice-captain.

Covai women ICT_போதிமரம்

Tuesday, August 19, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -20.08.2025

திரு.ராஜீவ் காந்தி

 






திருக்குறள்: 

குறள் 344:

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

விளக்க உரை:

உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.

பழமொழி :

Curiosity is the first step to success. 

ஆர்வமே வெற்றிக்கான முதல் படி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நல்ல புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்.


2. எனவே நல்ல புத்தகங்களை தேடிப் படிப்பேன்.

பொன்மொழி :

கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும். சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை. கல்வியும் உழைப்பும் போதுமானது - காமராஜர்.

பொது அறிவு : 

01.தமிழ்நாட்டில் குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

அழ.வள்ளியப்பா
Azha. valliappa

02.சுதந்திர இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் யார்?

சி.பி. முத்தம்மா
C. B. Muthamma

English words :

relic – an object, tradition, etc. from the past that still survives today.; காலம் கடந்து வாழும் பழம்பொருள்.

Grammar Tips: 

 Don't say
I prefer coffee than tea 

Say 
I prefer coffee to tea.

prefer is always followed by the preposition 'to'

அறிவியல் களஞ்சியம் :

 மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும், முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது.

ஆகஸ்ட் 20

இராஜீவ் காந்தி அவைகளின் பிறந்தநாள்

இராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகத்து 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]
21 மே 1991 அன்று திருப்பெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.


உலகக் கொசு நாள்

உலகக் கொசு நாள் (World Mosquito Day), ஆண்டுதோறும் ஆகத்து 20 ஆம் நாள் பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர் ரொனால்டு ராஸ் 1897 ஆகத்து 20 ஆம் நாள் பெண் கொசுகள் மூலமாக மலேரியா நோய் மனிதருக்குப் பரவுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்தார்.[1] இவர் தனது கண்டுபிடிப்பின் பின்னர் இந்நாள் உலக கொசு நாள் என்ற பெயரில் ஆகத்து 20 அன்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மத நல்லிணக்க தினம்

சத்பவனா திவாஸ் எனப்படும் மத நல்லிணக்க தினம் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20 -ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

 பறக்கும் குதிரை


பெர்ஷியாவின் சுல்தான் என்பவர் விந்தையான பொருள்களைக் கண்டால், அதை அடைய விரும்புவார். ஒருநாள் ஓர் இளவரசன் மாயக் குதிரை ஒன்றில் ஏறி அரண்மனை உப்பரிகை மேல் பறந்து கொண்டிருந்தான். இந்த அற்புதமான குதிரையின் விலை என்ன? என்று கேட்டார் சுல்தான். அந்த இளவரசன், இளவரசியைக் கை பிடிப்பது! என்று கூறினான். 


சுல்தானும் ஒத்துக்கொண்டார். ஆனால், என்னுடைய மகன் முதலில் இந்தக் குதிரை மீது அமர்ந்து பறப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்! என்று சுல்தான் கூறினார். 


சுல்தானின் மகன் குதிரை மீது அமர்ந்ததும் அது பறந்து எல்லோருடைய பார்வையிலிருந்தும் மறைந்து விட்டது. சுல்தானின் மகன் திரும்பி வராததால் சுல்தானும், அமைச்சர்களும் கவலை கொண்டனர். அவர்கள் இளவரசனைக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தனர். 

சுல்தானின் மகன் காற்றில் பறந்து கொண்டே இருந்தான். அவனால் அந்த மாய குதிரையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. பல நாட்களுக்கு பிறகு அவன் வந்தான். அரண்மனையில் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். அவன் திரும்பி வந்ததால் அந்த இளவரசனை விடுவித்தனர். ஆனால், அந்த இளவரசனை அவர்கள் அவமானப்படுத்திவிட்டதால், அவர்களை பழிவாங்க வேண்டும் எனச் சபதமிட்டான். 


சுல்தானின் அரண்மனையில் இளவரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இளவரசியைக் குணப்படுத்துபவர்களுக்குச் சிறந்த வெகுமதி அளிக்கப்படும் என்று சுல்தான் கூறினார். இளவரசன் மருத்துவன் போன்று மாறுவேடமணிந்து சுல்தானின் அரண்மனைக்கு சென்றான். 


முதலில் மந்திரக் குதிரையையும், இளவரசியையும் என்னிடம் அழைத்து வாருங்கள்! எனக் கூறினான். மந்திரக் குதிரையும், இளவரசியும் வந்த பின்பு தன் மந்திரசக்தியைப் பயன்படுத்தி, இளவரசியைக் குணப்படுத்தி தன்னுடைய மாயக்குதிரை மீது அமர்த்திக் கொண்டு பறந்து சென்றுவிட்டான். யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவனது சொந்தமான பொருளை அவனே அடைந்து கொண்டான். 

நீதி :
நமது சொந்த பொருளை யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தேவையில்லை.

இன்றைய செய்திகள்

20.08.2025

⭐கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம்: தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு

⭐ராஜஸ்தானைச் சேர்ந்த மாணிகா விஸ்வகர்மா மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்றுள்ளார்.

⭐இந்தியாவுக்கு உரம், அரிய வகை கனிமங்கள் வழங்க தயார்- சீனா அறிவிப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

🏀முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை ஓட விட்ட தென் ஆப்பிரிக்கா- 98 ரன்களில் அபார வெற்றி

🏀ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் வென்றார்.


Today's Headlines

⭐Tamil Nadu Government allocates funds for the Koyambedu - Pattabiram Metro Line project.

⭐Manika Vishwakarma from Rajasthan has won the title of Miss Universe India 2025. 

⭐China has announced it is ready to supply fertilizers and rare earth minerals to India.

 SPORT NEWS
 
🏀India Women's ODI World Cup squad announced.

🏀First ODI: South Africa sweep Australia won with 98 runs.

🏀The Asian Shooting Championship is underway in Kazakhstan. India's Manu Bhaker won bronze in the 10m air pistol category.

Covai women ICT_போதிமரம்

Monday, August 18, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -19.08.2025


    






திருக்குறள்: 

குறள் 343: 

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் 
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.   

  விளக்க உரை: 

ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.

பழமொழி :

Consistency is stronger than talent.

 தொடர்ச்சியான முயற்சி, திறமையை விட வலிமையானது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நல்ல புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்.


2. எனவே நல்ல புத்தகங்களை தேடிப் படிப்பேன்.

பொன்மொழி :

நம்பிக்கையும் அன்பும் இல்லாவிட்டால் ஆற்றல் அழிந்து போகும் - ரஸ்கின்

பொது அறிவு : 

01.நாடகக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது? 


                 சிலப்பதிகாரம்

(Cilappathikaram)


02. அரசியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 


         அரிஸ்டாட்டில் (Aristotle)"

English words :

thrive – to grow or develop well,செழித்தோங்கு

Grammar Tips: 

 
Double negatives happen when two negative expressions are used together in a sentence
Unlike in some languages, double negative sentences in English typically turns into a positive statement 

Ex: I don't want nothing. 
This is double negative statement 
 Correct statement is
I don't want anything.

அறிவியல் களஞ்சியம் :

 ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப் பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சு கிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது. வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும். நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது. 

ஆகஸ்ட் 19

உலக புகைப்பட நாள்

உலக புகைப்பட நாள் (World photograph day)புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு "வேர்ல்டு பிரஸ் போட்டோ' ,"டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

உலக மனிதநேய நாள்

உலக மனிதநேய நாள் (World Humanitarian Day) என்பது மனிதாபிமானப் பணியாளர்களையும், மனிதாபிமான காரணங்களுக்காக தங்களது உயிர்களை இழந்தவர்களையும் நினைவுகூரும் ஒரு நாள் ஆகும். 

நீதிக்கதை

 வியாபாரியின் கதை


ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான். அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து! மனநிம்மதி போய்விட்டது. 


ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர்! யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான். 


மறுநாளே, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான். 


அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து வியாபாரி, அந்த குருவை வணங்கி, சாமி நான் ஒரு வியாபாரி சம்பாதிக்க சம்பாதிக்க பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. மன நிம்மதி போய்விட்டது. நான் சேர்த்த பணமூட்டையை பெற்றுக் கொண்டு என்னையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாகக் கேட்டான். 


அவன் கீழே வைத்த பணமூட்டையை, அந்தக் குரு எடுத்துக் கொண்டு, திடீரென்று ஓட ஆரம்பித்தார். வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை! அவனும் அவருக்குப் பின்னே ஓடினான். அவன் தன் பின்னால் ஓடிவருவதைக் கவனித்த குரு, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார். வியாபாரியும் அய்யோ, என் பணமூட்டை... ! என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் ஓடினான். 


குரு பணமூட்டையுடன் வெகுதூரம் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் அவரது இடத்திற்கே வந்து பணமூட்டையை அதே இடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் சலனமில்லாமல் அமர்ந்து கொண்டார். 


நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வியாபாரியும் குருவிடம் வந்தான். தனது பணமூட்டை இருப்பதைப் பார்த்து குழம்பிப்போனான். 


குரு அவனைப் பார்த்து மகனே, இன்னும் பண ஆசை உன்னைவிட்டுப் போகவில்லை! அதனால் நீ மீண்டும் வியாபாரம் செய். எனது ஆசிரமத்தில் உனக்கு இப்போதைக்கு இடமில்லை! சென்று வா... ! என்று சாந்தமாக உபதேசம் செய்தார். வியாபாரி தனது பணமூட்டையுடன் ஊர் திரும்பினான். 


நீதி :

அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்.

இன்றைய செய்திகள்

19.08.2025

⭐ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்க மாணவர்களுக்கு அனுமதி. சென்னை பல்கலைக்கழகம் திட்டம்

⭐கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு-தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

⭐ஒடிசாவில் 4 இடங்களில் தங்க சுரங்கம்: 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பீடு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀செப்டம்பர் 9-ம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.
ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானி துபாயில் மோதுகிறது

🏀 சின்சினாட்டி மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் டென்னிஸ் உலக நம்பர் 1 ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2
கார்லோஸ் அல்கராஸை எதிர்கொள்கிறார்.

Today's Headlines

⭐Madras University Project declared the students allowed to pursue  double degrees courses simultaneously. 

⭐Due to the release of excess water from Karnataka dams,  flood alert has been declared for 11 districts in Tamil Nadu.

⭐In Odisha there are 4 locations for gold mining and from there it was estimated that 20 tons of gold can be gained.


 *SPORTS NEWS*

🏀Asia Cup cricket series start on September 9.  India from Group A, will face Pakistan in Dubai on 14th.

🏀 Tennis world No. 1 Janik Sinner will face world No. 2 Carlos Alcaraz in the final of the Cincinnati Masters.

Covai women ICT_போதிமரம்