Pages

Tuesday, October 29, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2024

டியாகோ மாரடோனா

  




திருக்குறள்: 

"பால் : பொருட்பால்

அதிகாரம் : அவை அஞ்சாமை

குறள் எண்: 724

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்: கற்றவர் முன், தாம் கற்றவற்றை அவர் மனதில் பதியும்படிச் சொல்லி,தம்மை விட அதிகமாகக் கற்றவரிடம் தாம் கற்கவேண்டிய மிகுதியைக் கற்றுக் கொள்ள வேண்டும்."

பழமொழி :

Do good to those who harm you

பகைவனை நேசித்துப்பார்

இரண்டொழுக்க பண்புகள் :  

 ‌ *திடீரென  மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். 

 *மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.

பொன்மொழி :

வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு , வேடிக்கை பார்த்தவர்க்கும்,விமர்சனம் செய்பவர்க்கும் ஒரு வரி கூட கிடையாது வாழ்க்கை புத்தகத்தில்.......,

பொது அறிவு : 

1. சாத்தனூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டுப்பட்டுள்ளது?

விடை: தென்பெண்ணை


2. இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன கால்வாய் எது?

விடை: சாரதா கால்வாய்

English words & meanings :

Needle-ஊசி,                                        

Pliers-இடுக்கி 

வேளாண்மையும் வாழ்வும் : 

பொது மக்களிடையே இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது. நுகர்வோர் இதற்காக கூடுதல் விலை கொடுக்க முன்வந்தனர்.

அக்டோபர் 30

மாரடோனா அவர்களின் பிறந்நாள்


1960 அக்டோபர் 30 ஆம் தேதி அர்ஜென்டினாவின் Lanús பகுதியில் பிறந்தவர் மாரடோனா. அவரது குடும்பம் எளிய பின்னணியை கொண்டது. அவருக்கு நான்கு தங்கைகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மாரடோனா மூன்று வயது சிறுவனாக இருந்த போது கால்பந்து ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் கால்பந்தாட்டத்தின் மீதான காதலை பின்னாளில் வளர்த்துள்ளது. வீட்டில் வறுமை வாட்டிய போதும் கால்பந்தை விடாமல் விரட்டியுள்ளார் மரடோனா. 15 வயது 355 நாளில் தொழில்முறை கால்பந்தாட்ட விளையாட்டில் முதல்முறையாக விளையாடி உள்ளார் மாரடோனா. அதற்கடுத்த சில மாதங்களில் அர்ஜென்டினா அணிக்காக விளையாட ஆரம்பித்தார் மாரடோனா. அதன்பிறகு நடந்த அனைத்தும் வரலாறு. அர்ஜென்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடிய மாரடோனா 34 கோல்களை அடித்துள்ளார். நூற்றாண்டின் சிறந்த கோல் என போற்றப்படும் கோலை இங்கிலாந்துக்கு எதிராக அடித்திருந்தார் மாரடோனா. அதே ஆட்டத்தில் தான் சர்ச்சையான HAND OF GOD என்ற கோலும் அடிக்கப்பட்டது. 

நீதிக்கதை

 அச்சம் 


அக்பரிடம் ஒரு அறிவாளி, "எனது வேலைக்காரன் ஒருவன் பெரும்தீனிக்காரன். அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுங்கள். ஆனால்  அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. மாத இறுதியில் அவனுடைய உடலில் ஒரு கிலோ எடை கூட ஏறக்கூடாது" என்று சவால் விட்டார்.


அக்பரின் சார்பாக பீர்பால் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். அதேபோல் அந்த வேலையாளுக்கு  ஒரு மாதம் சத்தான உணவுகள் வழங்கப்பட்டது. மாத இறுதியில் அவருடைய எடையை பார்த்தபோது, அவருடைய எடை கூடவே இல்லை. அக்பருக்கு ஆச்சரியம் என்ன நடந்தது என்று விசாரித்தார்.


 பீர்பால், "அரசரே அவருக்கு மூன்று வேளையும் சத்தான உணவுகள்  கொடுக்கப்பட்டது. ஆனால் அவருடைய இரவு படுக்கை மட்டும் சிங்கத்தின்  குகையின் அருகே  அமைக்கப்பட்டது.

அதனுடைய கதவின் பூட்டு சரியாக இல்லை என்றும் கூறினேன். அச்சத்தின் காரணமாகவே அவருடைய உடலில் ஊட்டச்சத்து ஒட்டவில்லை.


 நீதி: அச்சமின்மையே ஆரோக்கியம்.

இன்றைய செய்திகள்

30.10.2024

* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுரை வழங்கியுள்ளார்.

* தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் உறுதி.

* நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். இதன் அடிப்படையில் வரும் 2028-ம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் - புனேரி பால்டன் ஆட்டம் 'டிரா'.

* கால்பந்து விளையாட்டின் உயரிய விருதான பலோன் டி'ஆர் 2024 விருதை வென்றார் மான்செஸ்டர் சிட்டி மிட் பீல்டர் ரோட்ரி.

Today's Headlines

* Chennai Police Commissioner Arun has issued 19 restrictions on bursting crackers on the occasion of Diwali.

* No chance of heavy rain in Tamil Nadu till November 1: Meteorological Department confirms.

 * A nationwide census will be launched next year.  Based on this, the constituencies will be redefined in the coming year 2028, the central government sources said.

 * Pro Kabaddi League;  Bengal Warriors - Puneri Paltan Match 'Draw'.

* Manchester City midfielder Rodry has won football's highest award, the Ballon d'Or 2024.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, October 28, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.10.2024

  

உலக பக்கவாத நாள்




திருக்குறள்: 

"பால்: பொருட்பால்

அதிகாரம் : நட்பு

குறள் எண்: 783

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்  பண்புடை யாளர் தொடர்பு.

பொருள் : நூலின் நற்பொருள் படிக்கப் படிக்க மேன்மேலும் இன்பம் தருவதைப் போல, நற்பண்புடையவரின் நட்பு ஒருவருக்கு பழகப் பழக இன்பம் தரும்."

பழமொழி :

ஆயிரம் கல் தொலைவு பயணமும் ஒரே ஒரு எட்டில் தான் துவங்குகிறது .

A journey of a thousand miles begins with a single step.

இரண்டொழுக்க பண்புகள் :  

 ‌ *திடீரென  மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். 

 *மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.

பொன்மொழி :

வாய்மைக்கு மிக நெருக்கமான நண்பன் அச்சமின்மையே.---ஜவஹர்லால் நேரு

பொது அறிவு : 

1. அமெரிக்கர்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டதுறை எது?

விடை : பங்கு வணிகச்சந்தை

2. மூலப்பொருட்களின் தேவையை அதிகப் படியாக உருவாக்கியது______

விடை: தொழிற்புரட்சி

English words & meanings :

 Hammer.      - சுத்தி           Handsaw -      ஈர்வாள்/ரம்பம்

வேளாண்மையும் வாழ்வும் : 

பொது மக்களிடையே இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது.

அக்டோபர் 29

உலக பக்கவாத நாள் (World Stroke Day) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. பக்கவாதத்தின் தீவிர தன்மையையும் அதிக விகிதங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதும் அந்த நிலையின் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் உயிர் பிழைத்தவர்களுக்கு சிறந்த கவனிப்பு மற்றும் ஆதரவை உறுதி செய்வதும் உலக பக்கவாத நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கங்களாகும். மனித உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் முக்கியமானது, ‘பக்கவாதம்.’ ஒரு மனிதனை செயல்பட விடாமல் ஓரிடத்தில் முடக்கிப்போடும் அபாயகரமான நோயில் இதுவும் ஒன்று.மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக, மூளை செயல் இழப்பதால் இந்த பக்கவாத நோய் ஏற்படுகிறது. வலது, இடது என்று இரண்டு பாகங்களாக பிரிந்திருப்பது மூளை. வலதுபக்க மூளை இடது பக்க உடலையும், இடதுபக்க மூளை வலது பக்க உடலையும் கட்டுப்படுத்துகின்றன. இதில் ஒரு பக்கம் செயல்படாமல் போனாலும் மற்றவை செயல்படாது.

நீதிக்கதை

அன்பு எதையும் சுமக்கும் 

 துறவி ஒருவர்  தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மலை மீது ஏறிக் கொண்டிருந்தார்.அது செங்குத்தான மலை. மலையின் மேலே ஏற ஏற சுமை சற்று அதிகமானதாக தோன்றியதுடன் அவருக்கு  மூச்சு வாங்கியது.

 சற்று தூரம் முன்னால் சென்றபோது மலைவாழ் சிறுமி ஒருத்தி தனது மூன்று வயதுள்ள தம்பியை முதுகில் சுமந்து கொண்டு உற்சாகமாக பாடல் பாடிக்கொண்டு  

 மிக சாதாரணமாக மலை உச்சியை நோக்கி ஏறுவதை பார்த்தார்.துறவிக்கோ மிகவும் ஆச்சரியம். அவர் சிறுமியை பார்த்து, "என்னம்மா இவ்வளவு சிறிய பையை தூக்கிக்கொண்டு மலையை ஏற என்னால் முடியவில்லை. உன்னால் எப்படி இவ்வளவு பெரிய பையனை தூக்கிக் கொண்டு ஏற முடிகிறது?என்றார்.

அதற்கு  அந்த சிறுமி பதில் சொன்னாள்,"ஐயா நீங்கள் தூக்கிக் கொண்டிருப்பது ஒரு சுமையை. நான்  தூக்கிக் கொண்டிருப்பது எனது தம்பியை என்றாள்.துறவிக்கு புரிந்தது அன்பு எதையும் சுமக்கும் என்று. 

இன்றைய செய்திகள்

29.10.2024

* தீபாவளி விளையாட்டு போட்டிகளில் யாரையும் புறக்கணிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

* குருப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு: காலியிடங்கள் 9,491 ஆக உயர்வு.

* தீபாவளி வாரம் தொடங்கிய நிலையில் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம்: திணறும் மக்கள்.

* தென்கொரியாவில் தனிமை மரணங்கள்' அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க அந்த நாட்டு அரசு ரூ.2,750 கோடியில் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

* ஜப்பான் ஓபன் டென்னிஸ்; சீன வீராங்கனை சாம்பியன்.

* புரோ கபடி லீக்; குஜராத்தை வீழ்த்தியது உ.பி. யோத்தாஸ்.

Today's Headlines

* No one should be ignored in Diwali sports: HC orders.

 * Group-IV Exam Results Released: Vacancies increased to 9,491.

 * Air quality in Delhi continues to deteriorate as Diwali week begins: People suffocate.

 * 'Loneliness deaths' are on the rise in South Korea  To prevent this, the government of that country has announced a special scheme of Rs 2,750 crore.

 * Japan Open Tennis;  Chinese female beat  championship.

 * Pro Kabaddi League;  UP beat Gujarat  Yodas.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, October 27, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2024

  

பில் கேட்ஸ்




திருக்குறள்: 

"பால்:அறத்துப்பால்

அதிகாரம் : நடுவுநிலைமை

குறள் எண்: 114

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்  படும் .

பொருள் : ஒருவர் நேர்மை உடையவரா, இல்லாதவரா என்பது அவரவர் நடத்தையால் தெரியப்படும். நேர்மையானவர்களுக்கு பண்புடைய  மக்கள் பிறப்பதும்,நேர்மை தவறுவோர்க்கு நல்ல மக்கள் அமையாமல் போவது உலகியல் மரபு."

பழமொழி :

He that can stay obtains.

பொறுத்தார் பூமி ஆள்வார்.

இரண்டொழுக்க பண்புகள் :  

 ‌ *திடீரென  மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். 

 *மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.

பொன்மொழி :

கடந்து போன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடிகிற அளவிற்கு இந்த உலகில் யாரும் பணக்காரர்கள் கிடையாது. ---ஆஸ்கர் வைல்ட்

பொது அறிவு : 

1. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது?

விடை: குதிரை

2.மாநிலத்தின் கீழுள்ள நீதிமன்றங்களை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றவை எது?

விடை: உயர்நீதிமன்றம்

English words & meanings :

 Fence- வேலி                                 

Fertilizer. -  உரம்

வேளாண்மையும் வாழ்வும் : 

சர் ஆல்பர்ட் ஹோவர்ட என்பவர்தாம் கரிம வேளாண்மையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

அக்டோபர் 28

வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

நீதிக்கதை

 பொம்மை 


ஆறு வயது சிறுவன் ஒருவன் தனது நான்கு வயது தங்கையை அழைத்துக் கொண்டு  கடைத்தெரு வழியாக சென்றான்.

 ஒரு கடையிலிருந்து பொம்மையை பார்த்து, தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை உனக்கு வேண்டும்" என்று கேட்டான்.


அவள் விரும்பிய பொம்மையை வாங்கி கையில் கொடுத்துவிட்டு பெரிய மனித தோரணையுடன் கடைக்காரரைப் பார்த்து, "அந்த பொம்மை என்ன விலை? என்றான்.


 அதற்கு அந்த கடையின் முதலாளி சிரித்துக் கொண்டே,"உன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது? என்று கேட்டார்.


அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேகரித்து வைத்திருந்த சிற்பிகளை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்தான். இது போதுமா? என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கவலையான முகத்தை பார்த்துக் கொண்டே," எனக்கு நான்கு சிப்பிகள் போதும் மீதியை நீயே எடுத்துக்கொள்" என்றார்.


சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி இருந்த சிற்பிகளையும் தன் தங்கையுடன் அந்த 

பொம்மையையும் எடுத்துக் கொண்டு சென்றான். 


இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்தக் கடையின் வேலையாள் தனது முதலாளியிடம், " ஐயா ஒன்றுக்கு உதவாத சிப்பிகளை எடுத்துக்கொண்டு விலையுயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே ஐயா" என்று கேட்டார்.


அதற்கு  முதலாளி, "அந்த சிறுவனுக்கு  பணம்  கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்  என்பது புரியாத வயது  அவனைப் பொறுத்தவரை அவனிடம் உள்ள சிப்பிகளே உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவனுடைய மனதில் பணம் தான் உயர்ந்தது என்ற எண்ணம் வந்துவிடும்.

அதனை நான் தடுத்து விட்டேன். மேலும், தனது தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர இயலும் என்ற தன்னம்பிக்கையும் அவனது மனதில் விதைத்து விட்டேன்"என்றார்.


மேலும்,"என்றாவது ஒருநாள் அவன் பெரியவனாகி இதை நினைத்துப் பார்க்கும் பொழுது இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற எண்ணம் அவன் மனதில் எழும் ஆகையால் அவனும் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வான்" என்றும் கூறினார்.


நீதி: இந்த உலகம் அன்பாலும், மனிதத் தன்மையாலும் கட்டமைக்கப்பட வேண்டும்.

இன்றைய செய்திகள்

28.10.2024

* அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 7,979 பணியிடங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிச.31-ம் தேதி வரை ஊதியம் வழங்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

* காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து  33 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.

* பிரபல இசைக் கச்சேரிகளின் டிக்கெட் விற்பனையில் முறைகேடு: 5 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை.

* சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா.

* லா லிகா கால்பந்து: இன்றைய ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி பார்சிலோனா அபார வெற்றி.

* ஜப்பான் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின்.

Today's Headlines

* The school education department has given permission to pay salaries to the graduate teachers working in 7,979 posts created temporarily in government schools till 31st December.

* Due to heavy rains in the Cauvery catchment areas, the flow of water to Mettur dam has increased to 33 thousand cubic feet.

 * Malpractice in ticket sales of popular music concerts: Enforcement probes in 5 states

 * America sent back Indians who stayed illegally.

* La Liga Football: Barcelona beat Real Madrid in today's match.

 * Japan Open Tennis: American player Sophia Kenin advanced to finals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, October 24, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.10.24

   

பிகாசோ

  




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

அதிகாரம்: மடியின்மை

குறள் எண்: 602

மடியை மடியா ஒழுகல் குடியைக்
 குடியாக வேண்டு பவர்.
பொருள் : தாம் பிறந்த குடியை மேலும் சிறப்புடைய நற்குடியாக்க விரும்புகின்றவர், சோம்பலைக் கடிந்து முயற்சியுடையவராய் ஒழுக வேண்டும்.

பழமொழி :

கல்வியால் பரவும் நாகரிகம். 

Education is the transmission of civilization.

இரண்டொழுக்க பண்புகள் :  

1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள். 

2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .

பொன்மொழி :

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை சரியாக செய்தால் வெற்றி,கடமைக்கு செய்தால் தோல்வி.

பொது அறிவு : 

1. இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?

விடை: மக்கள் பேசும் மொழி அடிப்படையில்

2. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர் யார்?

விடை : குடியரசுத் தலைவர்

English words & meanings :

 Broom- துடைப்பம் 

Clay Pot- களிமண் பானை

வேளாண்மையும் வாழ்வும் : 

மலிவான விலையிலும், எளிதில் இட மாற்றம் செய்யக் கூடியனவாகவும் இருந்ததால் விவசாயிகள் இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளில் அதிக நாட்டம் காட்டினார்கள்.

அக்டோபர் 25

பிகாசோ, 1881-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் நாள் ஸ்பெயின் நாட்டில் உள்ள மால்கா என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை, ஜோச் ரூயிசு பால்சுகா. தாய், மரியா பிகாசோ. தந்தை ஓவிய ஆசிரியர். தன்னுடைய தாய் பெயரையே பிரதானப் பெயராக வைத்துக்கொண்டார். ஓவியத்துக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த பிகாசோ, ஓவியம் வரைவதே தனி ஸ்டைல் என்றுதான் சொல்ல வேண்டும்.சிந்திக்கும் இடைவெளிகூட இல்லாமல் வேகமாக வரைவதில் பிகாசோவுக்கு இணை பிகாசோவே. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கிட்டத்தட்ட 13,000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். பிகாசோவின் மற்றொரு பிரபலமான ஓவியம், அவர் வரைந்த ஒற்றைப் புறா. இதுதான் உலக அமைதிக்கான சின்னமாக இன்றும் பறந்துகொண்டிருக்கிறது. ``ஓவியன், இருப்பதைப் பார்த்து அப்படியே வரைந்துவிட்டுப்போவதில் என்ன புதுமையான விஷயம் இருக்கிறது? பார்க்கும் காட்சி அவன் மனதினுள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளைத்தான் ஓவியன் ஓவியமாக வரையவேண்டும்” என்று கூறும் பிகாசோ தன்னுடைய ஒவ்வொரு படைப்பின் வழியாகவும் சமூக, தனிமனித உணர்வுகளை தன்னுடைய இறுதிக்காலம் வரை பிரதிபலித்துக்கொண்டே இருந்தார்.

இன்று (அக்டோபர் 25) இந்த மகத்தான ஓவியனின் பிறந்தநாள்!

நீதிக்கதை

 இறைவன் பெற்றது.


செல்வந்தர் ஒருவர் இருந்தார். ஒரு நாள் அவர் தனது தோட்டத்தில் இருந்த வாழை 

குலை ஒன்றை கோவிலில் கொடுத்து வருமாறு தனது பணியாளரிடம் கொடுத்து அனுப்பினார்.


 பணியாளர் எடுத்துச் செல்லும் வழியில் மிகவும் பசியாக இருந்ததால, அந்த வாழைக் குலையிலிருந்து  இரண்டு பழங்களை சாப்பிட்டு விட்டார்.

மீதியை கோவிலில் ஒப்படைத்தார்.


 அன்று இரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார். கனவில் இறைவன் வந்து  "நீ கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன். மிகவும் ருசியாக இருந்தது" என்றார்.


செல்வந்தர் மிகவும் கோபம் கொண்டார். ஒரு வாழை குலை நிறைய பழங்களை கொடுத்து அனுப்பிய போதும் இறைவனுக்கு இரண்டு பழங்கள் மட்டுமே  சென்றடைந்துள்ளது மீதி பழங்கள் எங்கே? என்று   கோபத்துடன் மனதில் எண்ணினார்.


 அடுத்த நாள் காலை அந்த பணியாளரை அழைத்து  அதைப்பற்றி விசாரித்தார். அப்போது அந்தப் பணியாளர் "ஐயா நான்  பசியாக இருந்ததால் இரண்டு பழங்களை மட்டும் சாப்பிட்டு விட்டேன். மீதியை கோவிலில் ஒப்படைத்தேன்"என்று கூறினார்.அப்பொழுதுதான்  அவர் பசியுடன் சாப்பிட்ட இரண்டு பழங்கள் மட்டுமே இறைவனுக்கு கொடுத்ததாக அர்த்தம் என்று செல்வந்தருக்கு புரிந்தது.


நீதி:   தேவைப்படுபவருக்கு கொடுப்பதே, இறைவனுக்குக் கொடுத்ததற்கு சமம்.

இன்றைய செய்திகள்

25.10.2024

* புதுடில்லி: டில்லியில், 2025 ஜன. 1ம் தேதி வரை பட்டாசு விற்க தடை விதிக்கவும், பட்டாசு கிடங்குகளுக்கு சீல் வைக்கவும், டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டானா' புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

20 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ரோபோவான் என்ற பெரிய தானியங்கி டாக்சியை எலான்மஸ்க் அறிமுகப் படுத்தினார்.

சென்னை:முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் வழங்கும் போது  '' விளையாட்டு துறையில் இந்தியா மட்டுமல்லாமல், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் புகழ்பெற்றுள்ளது,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தீபாவளி பண்டிகைக்காக நாடு முழுதும் 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள்: மத்திய அரசு ஏற்பாடு.

வியன்னா ஓபன் டென்னிஸ்; அலெக்சாண்டர் ஸ்வெரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* New Delhi: In Delhi, 2025 Jan. The Delhi court has ordered that the sale of firecrackers be banned and that firecracker warehouses be sealed until the 1st.

* Extreme precautionary measures have been taken in Odisha and West Bengal as Cyclone Dana approaches the coast.

* Elanmusk introduced RoboVan, a large automated taxi capable of carrying 20 people.

.• Chennai: "Tamil Nadu is renowned as a state that attracts the attention of not only India but also the world in the field of sports," said Chief Minister Stalin while handing over the trophies to the players who won the sports competition for the Chief Minister's Cup.

* 7,000 special trains across the country for Diwali festival: Central Govt.

* Vienna Open Tennis; Alexander Zverev advances to quarterfinals
 Prepared by

Covai women ICT_போதிமரம்