Pages

Thursday, November 30, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.12.2023

    

December 1 - World AIDS Day



திருக்குறள்

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : இன்னாசெய்யாமை

குறள்:311

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார்

விளக்கம்:

 சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை. 


பழமொழி :

Smile costs nothing

புன்னகைக்க பணம் தேவை இல்லை

இரண்டொழுக்க பண்புகள் :

1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.

2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.

பொன்மொழி :

முகமலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, அமைதி இவை உள்ள இடத்தில் வைத்தியருக்கு வேலையில்லை – ஜெர்மனி

பொது அறிவு :

1. வெள்ளையனே வெளியேறு” இயக்கம் ________ ஆண்டு நடைபெற்றது.

விடை: 1919

2. பிரிட்டனின் தேசிய மலர்.

விடை: ரோஜா


English words & meanings :

 haematology (n) - scientific study of the blood and its diseases. இரத்தம் மற்றும் அது சார்ந்த நோய்கள் பற்றிய அறிவியல் படிப்பு. haill(n)- greeting, a shower of frozen drops , வாழ்த்து, ஆலங்கட்டி மழை.

ஆரோக்ய வாழ்வு : 

சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.

டிசம்பர் 01

உலக எய்ட்ஸ் நாள்


உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. 1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல்.[1] மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது

நீதிக்கதை

 முயற்சி திருவினை ஆக்கும்.

ஒரு வண்டியோட்டி தனது வண்டியைக் கிராமப் புறத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, ஓரிடத்தில் அதன் சக்கரங்கள் ஆழப் புதைந்து கொண்டன.

என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போன அந்த வண்டியோட்டி கடவுளைக் கூவி அழைத்தான். கடவுள் அவன் முன்னே வந்தார். வண்டியோட்டியே... சக்கரங்களை உனது தோள்களால் தூக்கு. மாடுகளைத் தார்க்குச்சியை வைத்துத் தூண்டு. வண்டி ஓட ஆரம்பித்து விடும்.

உன்னால் எப்போது ஒரு காரியம் முடியாதோ அப்போது மட்டும் என்னை அழை. முயற்சியே செய்யாமல் என்னை அழைப்பவர்க்கு நான் உதவி புரிய வர மாட்டேன். முயற்சி திருவினையாக்கும் என்பதைப் புரிந்து கொள் என்று சொல்லி விட்டு கடவுள் மறைந்தார்.

நீதி : முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

இன்றைய செய்திகள்

01.12.2023

* இந்தியப் படைக்காக மேலும் 97 தேஜஸ் விமானங்கள்.

* அடையாறில் தூர் வாரியதால் குடிசை பகுதிகளில் நீர் தேங்கவில்லை –அமைச்சர் மா. சுப்ரமணியம்.

* சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26 செ.மீ. மழைப் பதிவு - வானிலை ஆய்வு மையம்.

* வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

* இந்திய ஹாக்கி வியாழன் அன்று 24 வீரர்கள் அடங்கிய ஆண்கள் ஹாக்கி குழுவை வரக்கூடிய ஐந்து நாடுகளின் வலேன்சியா போட்டிக்காக அறிக்கை வெளியிட்டது. இந்த போட்டி டிசம்பர் 15 முதல் 22 வரை ஸ்பெயினில் உள்ள வலேன்சியா வில் நடைபெற உள்ளது.

Today's Headlines

* 97 more Tejas aircraft for the Indian Army

 * Water does not stagnate in slum areas as there was a dredge in Adyar - Minister Ma. Subramaniam

*  In Chennai, the maximum rainfall is in Meenambakkam it is recorded as 26 cm in the last 24 hours  - Meteorological Centre

 * A depression forms in the Bay of Bengal within 12 hours

* Hockey India on Thursday announced a 24-player men's hockey squad for the upcoming five-nation Valencia tournament.  The tournament will be held from December 15 to 22 in Valencia, Spain.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, November 29, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.11.2023

    

சர் ஜகதீஷ் சந்திர போஸ்



திருக்குறள்

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள்:310

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

விளக்கம்:

சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறவிக்கு ஒப்பாவர்.


பழமொழி :

Learning is youth is an engraving on a rock.

இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.

இரண்டொழுக்க பண்புகள் :

1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.

2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.

பொன்மொழி :

துருப்பிடித்து தேய்வதை
விட உழைத்து தேய்வது
சிறந்தது.. நீ நினைத்தால்
விண் மீனையும் விழுங்கி
விட முடியும்.. இதுவே உன்
உண்மை பலம்.. மூட
நம்பிக்கைகளை
உதரித் தள்ளிவிட்டு
தைரியமாக செயல்படு

பொது அறிவு :


1. ஆதார் அட்டை முதலில் பெற்றவர் யார்?

விடை:  ரஞ்சனா சோனாவனே

2.. தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர்?

விடை: டீனியா (Taenia)

English words & meanings :

 gut(n) - the elementary canal குடல், நரம்பு. gymnast (n) - expert in gymnastics உடற்பயிற்சி வல்லுநர்

ஆரோக்ய வாழ்வு : 

பூசணிப் பூ:பூசணி பூக்களில் ஏராளமான வைட்டமின் A தாது சத்துக்கள் காணப்படுகின்றன. வைட்டமின்-A கண்பார்வையை மேம்படுத்த உதவும். ஒளியினால் உண்டாகும் மாற்றங்களை சமாளிக்க கண்களுக்கு போதுமான சக்தியை தருகிறது மற்றும் கண்களை ஈரத்தன்மையுடன் வைத்திருக்க கூடியது. அதுமட்டுமல்ல, வைட்டமின்-A இரவு பார்வையையும் மேம்படுத்துகிறது

நவம்பர் 30

சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்...


சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.

நீதிக்கதை

 பசியால் வருந்திய ஒரு ஓநாய் ஒருநாள் காலையில் ' இரை தேடி கிளம்பியது. காட்டில் கட்டப்பட்டிருந்த ஒரு குடிசையைக் கடக்கும் போது குடிசையிலிருந்த ஒரு தாய் தன் குழந்தையிடம் சொன்ன சொற்களைக் கேட்டது. "அழாமல் இரு.என் சொற்படி கேட்காமல் அழுதாய் என்றால் ஜன்னல் வழியே தூக்கிப் போட்டு விடுவேன். ஓநாய் வந்து உன்னைத் தின்று விடும்." என்று அந்தத் தாய் தன் குழந்தையை மிரட்டிக் கொண்டிருந்தாள். ஓநாய் நாள் முழுவதும் அந்தக் குடிசையின் கதவருகே உட்கார்ந்தே இருந்தது. மாலையும் வந்தது.

இப்போது அந்தத் தாய் குழந்தையிடம் "சமர்த்துப் பிள்ளை, சொன்னதைக் கேட்டாய். ஓநாய் வந்தால் அதைக் கொன்று போடுவோம்." என்று சொன்னதைக்" கேட்டு ஓட்டமெடுத்தது ஓநாய்.

பசியுடனும் குளிருடனும் பொந்தில் முடங்கிக் கொண்டது. "என்ன ஆயிற்று உனக்கு. நீ எப்போதும் இப்படி வந்ததில்லையே. உணவு கிடைக்காமல் களைத்து போய் வந்துள்ளாயே, என்ன விஷயம்?" என்று மற்றொரு ஓநாய் கேட்டது. அதற்கு "ஒரு பெண்ணின் சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் வந்த வினை!" என்று அந்த ஓநாய் பதில் சொன்னது.

நீதி : வீண் எதிர்பார்ப்பால் கால இழப்பும், பொருள் இழப்பும் ஏற்படுமே அன்றி காரியம் கை கூடாது.

இன்றைய செய்திகள்

30.11.2023

*சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

* சீனாவில் சுவாசத் தொற்று எதிரொலி- இந்தியாவில் 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை.

* புழல் ஏரியிலிருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு.

*சுரங்க தொழிலாளர்கள் 41 பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டனர்.

*இந்திய  அணியின் பயிற்சியாளராக தொடர்கிறார் டிராவிட்.

Today's Headlines

*Announcement of the holiday tomorrow for schools in Chennai, Tiruvallur, Chengalpattu, Kanchipuram district.

* Chance of thundershowers in Chennai and suburbs today.

* Respiratory infection reverberates in China- alert for 6 states in India.

* Release of 200 cubic feet of surplus water from Puzhal Lake.

*All 41 miners were rescued unharmed.

* Dravid continues as the coach of the Indian team.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, November 28, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.11.2023

    

பானு அத்தையா

திருக்குறள்

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள்:309

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

விளக்கம்:

உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.


பழமொழி :

Habit is a second nature

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்

இரண்டொழுக்க பண்புகள் :

1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.

2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.

பொன்மொழி :

உழைப்பின் சக்தியே
உலகிலே உயர்ந்த சக்தி..
அதை வெற்றி கொள்ளும்
ஆற்றல் வேறெந்த
சக்திக்கும் கிடையாது.

பொது அறிவு :

1. ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?

விடை: பானு அத்தையா

2. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர்?

விடை: ஜவகர்லால் நேரு

English words & meanings :

 Additional Assistance - கூடுதல் உதவி, 

Adventure Sports - சாகச விளையாட்டு

ஆரோக்ய வாழ்வு : 

பூசணிப் பூ: பூசணி பூவில் உள்ள வைட்டமின் C சத்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, இதன் மூலம் சளி மற்றும் இருமல் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

நீதிக்கதை

 ஒன்றென்று உணர்ந்தால் நன்று


ஒருமுறை உடம்பின் உறுப்புகள் எல்லாம் வயிற்றின் மேல் பொறாமை கொண்டன. உணவு எங்கே இருக்கிறது? என்று கண்டு பிடிப்பவன் நான் என்றது மூக்கு. அந்த உணவை எடுப்பவன், ஆக்குபவன் நான் என்றது கை. அதை வயிற்றுக்கு அனுப்புபவன் நான் என்றது வாய். அதை அரைத்துக் கொடுப்பவர்கள் நாங்கள் என்றன பற்களும் நாக்கும். இந்த வயிற்றுக்காக நாம் இப்படிப் பாடுபடுகிற பொழுது இந்த வயிறு என்ன செய்கிறது? சுகபோகமாக இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இனி நாம் எதுவும் செய்யக் கூடாது, என வயிறு தவிர மற்ற உறுப்புகள் போராட்டத்தில் இறங்கின. உணவு இல்லை என்றால், அந்த உறுப்புகள் என்ன ஆகும்? கண்கள் பஞ்சடைந்தன. கால்கள் வலுவிழந்தன. கைகள் சோர்ந்தன. பாதங்கள் நடுங்கின. மூக்கில் மூச்சு திணறியது. இப்படி ஆனபிறகு தான் அந்த உறுப்புகளுக்கு "தாங்கள் வயிற்றுக்கு அனுப்பும் உணவில் பயன் பெறுவது வயிறு அல்ல, தாங்கள் தான்" என்ற உண்மை புரிந்தது. தங்களது அறியாமையை எண்ணி அவை வருந்தின.


நீதி : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

இன்றைய செய்திகள்

29.11.2023

*பராமரிப்பு காரணமாக கடற்கரை தாம்பரம் இரவு ரயில் நாளை முதல் ரத்து.

* மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்த முடிவு.

* 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரண்டாம் தேதி புயலாக மாறுகிறது.

* நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும்; அண்ணாதுரை பேட்டி.

* முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.

* மும்பை இந்தியன்ஸ் unfollow செய்த பும்ரா; சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி.

Today's Headlines

*Chennai Beach to Tambaram night train canceled from tomorrow due to maintenance.

* Government decided to relax norms for burial in cemeteries.

* Chance of heavy rain in 10 districts. The depression becomes a storm on 2nd December 

*We have to Establish an International Space Station on the Moon:  Annadurai during an interview.

* The first choice for investors is Tamil Nadu, Chief Minister M.K. Stalin.

* Bumrah unfollowed the Mumbai Indians; Fans are happy with the news that he is going to join CSK.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, November 27, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.11.2023

    

நெருப்புக்கோழி


திருக்குறள்


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள்:308

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

விளக்கம்:

தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.



பழமொழி :

Great minds think alike

பேரறிஞர்கள் ஒரே மாதிரியாக சிந்திப்பர்

இரண்டொழுக்க பண்புகள் :

1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.

2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.

பொன்மொழி :

வெற்றி வந்தால்
நம்பிக்கை வரும்.
ஆனால் நம்பிக்கை
இருந்தால் மட்டுமே
வெற்றி கிடைக்கும்..
அதனால் நம்பிக்கையை
மனதில் வளர்த்துக்கொள்

பொது அறிவு :

1. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது?

விடை: நெருப்புக்கோழி

2. 
உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது? 

சுப்பீரியர் ஏரி.

English words & meanings :

 Equipoise - equality of distribution சரி சம நிலை
Endear - to make dear ,beloved பிரியமுடையதாக்குதல்

ஆரோக்ய வாழ்வு : 

பூசணிப் பூ : பூசணி பூக்களை உட்கொள்வது எலும்பு தேய்மானம் அல்லது தாது சத்து இழப்பு போன்ற தீவிர பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

நீதிக்கதை

 அகந்தை ஆபத்தானது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் யார் இரை தேடுவது என்பதில் இரண்டு சேவல்களுக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. மோதலில் தோற்றுப் போன சேவல் ஒரு மூலையில் சென்று பதுங்கிக் கொண்டது.

வெற்றி பெற்ற சேவலோ பெருமிதத்துடன் பறந்து ஒரு சுவர் மீது ஏறி நின்று இறக்கைகளைப் படபட என அடித்துக் கொண்டு, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சப்தம் போட்டு மகிழ்ச்சி கொண்டாடியது.

அப்போது வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகு அதன் மேல் பாய்ந்து கவ்விக் கொண்டு சென்றது. பதுங்கியிருந்த சேவல் மூலையை விட்டு வெளியே வந்து போட்டிக்கு யாரும் இல்லாததால் தன்னிஷ்டப்படி இரை தின்றது.

நீதி : அகந்தை கொள்வது எப்பொழுதும் ஆபத்தானது.

இன்றைய செய்திகள்

28.11.2023

*வாக்காளர் பட்டியல் 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்; சத்யபிரதா சாகு தகவல்.

*சுரங்கத்தில் சிக்கியவர்களுடன் உரையாடிய பிரதமரின் முதன்மைச் செயலர்.

* ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முழுமையாக முடிவடையவில்லை- காவல்துறை தலைமை.

* வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் 3ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.

* ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள்: ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கிறது. மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா; குஜராத்துக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிப்பு.


Today's Headlines

*15.33 lakh applications for voter list;  Satyaprada Sakhu information.

 *Prime Minister's Principal Secretary interacts with mine victims.

 * War on terrorism is not completely over in Jammu and Kashmir- Police chief.

 * A low pressure area has formed in the Bay of Bengal, there is a chance of rain in Tamil Nadu till the 3rd.

 * Players for IPL Cricket Tournament: Auction will be held on 19th December.  Hardik Pandya in Mumbai team;  Subman Gill announced as new captain for Gujarat.
 Prepared by

Covai women ICT_போதிமரம்