Pages

Tuesday, September 26, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.09.2023

    



திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : தவம்

குறள் :268

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.

விளக்கம்:

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் அவனுடைய பெருமையை உணர்ந்து தொழும்.

பழமொழி :

Delay of justice is injustice

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமமாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

சகிப்புத் தன்மையால் தான் மகான்கள் நிம்மதிப் பெறுகின்றனர்.துன்பம் வரும் காலத்தில் அமைதியாக இருக்க பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்...

-------மார்க் ட்வைன்

பொது அறிவு :

1. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?

விடை: நாக்கு


 2. சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய பிராணி எது?

விடை: கழுகு 

English words & meanings :

 mickle - a large amount மிகப்பெரிய அளவு : grunting - make a short sound in pain or anger வலியால் உறுமுதல், முணுமுணுத்தல்.

ஆரோக்ய வாழ்வு : 

கொண்டைக்கடலை: இதில் உள்ள குறைந்த க்ளைசெமிக் மற்றும் ஸ்டார்ச் அமிலோஸின் இருப்பு காரணமாக உடல் கொண்டைக் கடலையில் உள்ள சத்தை உறிஞ்சிகிறது. இதனால் இரத்தத்தில் சமநிலை கட்டுப்படுத்தப்படுகிறது.

செப்டம்பர் 27

உலக சுற்றுலா நாள்

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

 ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் சலவை தொழிலாளி, இன்னொருவர் மண்பானைகள் செய்யும் குயவர். இரண்டு பேருமே அரசரிடம் வேலை பார்த்து வந்தனர்.

ஒரு நாள் இரண்டு பேருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் குறைகளை தாங்களே தீர்த்துக்  கொள்ளாமல் அரசரிடம் ஒருவர் பற்றி ஒருவர் குறை கூறிக்கொண்டு இருந்தனர்.மண்பானை செய்யும் குயவர், சலவை தொழிலாளியை அரசரிடம் வசமாக சிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி அரசரைப் பார்த்து, “அரசே, நமது பட்டத்து யானை கருப்பாக இருக்கிறது. யானையை சலவை தொழிலாளியிடம் கொடுத்து வெளுக்க செய்ய சொல்லுங்கள்” என்றார். அரசர் மிகப்பெரிய முட்டாளாவார். அவர் எதைப் பற்றியும் சிந்திக்காமல் சலவை தொழிலாளியை கூப்பிட்டு யானையை வெளுத்து வரும்படி கூறினார். உடனே சலவை தொழிலாளி அரசரைப் பார்த்து, “அரசே, யானையை வெளுத்து விடலாம் யானையை வேக வைக்கும் அளவிற்கு பெரிய பானை ஒன்றை குயவரை செய்து தர சொல்லுங்கள்” என்றார்.அரசர் குயவரை கூப்பிட்டு, “யானையை வேக வைக்க பெரிய பானையை செய்து கொடு” என்று ஆணையிட்டார். குயவர் திரு திரு என விழித்தார்.

இறுதியில் இருவரும் சந்தித்தனர். உன் மேல் நானும், என்மேல் நீயும் குறை கூறி மாட்டிக் கொண்டோம். இதனால் நம் இருவருக்குமே துன்பம். இனிமேல் இதுபோல் நடக்கக்கூடாது. நம் தவறுகளை நாமே திருத்திக் கொள்வோம் என்றார்கள். இருவரும் முன்பு போலவே நண்பர்கள் ஆனார்கள். 


நீதி : ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வம்பில் மாட்டிக்கொண்டு விழிப்பதை விட, ஒருவர் மீது மற்றொருவர் குறை கூறுவதை விட்டு அவரவர் குறையை அவரவர் திருத்திக் கொண்டு வாழ்வது சிறந்ததாகும்.

இன்றைய செய்திகள்

27.09.2023


*தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

* தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை 2023 முதலமைச்சர் 
மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.

* தமிழகம் முழுவதும் வருகிற 1ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் - அமைச்சர் மா சுப்பிரமணியன்.

*37 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 1000 புதிய வகுப்பறைகள் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

* ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 :
ஆண்கள் ஹாக்கியில் இந்தியா 16- 1 என்ற கோடு கணக்கில் அபார வெற்றி பெற்றது.

*ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: படகு போட்டியில் இந்தியாவின் 
நேஹா தாகூர் வெள்ளி பதக்கம் வென்றார்.

Today's Headlines

*Chance of thunder and lightning rains in Tamil Nadu- Chennai Meteorological Department warns.

 * Tamil Nadu Tourism Policy 2023 published by Chief Minister
 M. K. Stalin.

 * Special fever camp at 1000 places across Tamil Nadu on 1st October- Minister Ma Subramanian.

 * The Chief Minister inaugurated 1000 new classrooms in panchayat union schools in 37 districts.

 * Asian Games 2023 :
 In men's hockey, India won by a score of 16-1.

 *Asian Games 2023:  In rowing
 Neha Tagore of India won the silver medal.
 Prepared by

Covai women ICT_போதிமரம்



Monday, September 25, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2023



திரு. மன்மோகன் சிங் 


திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :267

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

விளக்கம்:

நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.

பழமொழி :

Delay is dangerous

தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.

 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி.

பொன்மொழி :

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும் உறுதியும் தியாக உணர்வும் வேண்டும். தந்தை பெரியார் 

பொது அறிவு :

1. அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது?

விடை: ஆப்பிரிக்கா 

2. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?

விடை: 33

English words & meanings :

 purgation- cleansing தூய்மையாக்கல். nervation- arrangement of nerves in leaf இலை நரம்பு அமைப்பு

ஆரோக்ய வாழ்வு : 

 கொண்டைக்கடலை: நீரிழிவு நோய் என்பது இங்கு பலருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் அதன் ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்தவும் சுண்டல் உதவுகிறது. 

செப்டம்பர் 26

மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாள்



மன்மோகன் சிங் (Manmohan Singhபஞ்சாபிਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 222004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்

1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.

நீதிக்கதை

 The Fox And The Crab நரியும் நண்டும்  கதை :- ஒரு பெரிய கடல்ல ஒரு நண்டு வாழ்ந்துகிட்டு வந்துச்சு.

ஒரு நாள் அந்த நண்டுக்கு ரொம்ப போர் அடிச்சுச்சு ,உடனே இந்த உலகத்தை சுத்திப்பார்க்க போறேன்னு சொல்லிட்டு தண்ணிக்கு வெளிய வந்துச்சு. வெளி உலக ரசித்தது  நண்டு. கொஞ்ச தூரம் நடந்து பாக்கலாம்னு , புல்வெளியில நடக்க ஆரம்பிச்சுச்சு.அப்பத்தான் ஒரு நரி அந்த நண்ட பார்த்துச்சு , உடனே அந்த நண்ட பிடிச்சி திங்க நினச்சுச்சு அந்த நரி.ஆனா அந்த நண்டு ரொம்ப சுறுசுறுப்பா அங்குட்டும் இங்குட்டும் ஓடிக்கிட்டே இருந்துச்சு ,அந்த நரியோட விளையாடி என்ன பிடி பாப்போம்னு சொல்லி அந்த நரியவே கோபப்பட வச்சுச்சு.

ஆனா கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த நண்டு ரொம்ப சோர்வாக ஆரம்பிச்சுச்சு ,அப்பத்தான் அந்த நரி சொல்லுச்சு ,இவ்வளவு நேரம் உன்ன ஆட விட்டது எதுக்கு தெரியுமா ,நீ இப்ப உன்னோட இடத்துல இல்ல ,அதனால உனக்கு நீ சாப்புடற உணவு இங்க கிடைக்காதுனு எனக்கு தெரியும் அதனால தான்உணவு கிடைக்காம இப்ப நீ சோர்வாகிட்ட பார்த்தியா ,இப்ப என்கிட்ட இருந்து ஓடு பார்க்கலாம்னு சொல்லுச்சு நரி ,ஆனா ரொம்ப சோர்வான நண்டால நடக்க கூட முடியல,

 இப்ப அந்த நண்ட தின்னுச்சு . தேவையில்லாத இடத்துக்கு வந்து ,தேவையில்லாத வேலை செஞ்ச தனக்கு இது நல்ல தண்டனைத்தானு நினச்சுகிட்டே அந்த நரிக்கு உணவா மாறி செத்து போச்சு அந்த நண்டு.

இன்றைய செய்திகள்

26.09.2023

*கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை -  கோழிக்கோடு இயல்பு நிலைக்கு திரும்பியது. 

*சென்னை திருநெல்வேலிக்கு ஆம்னி பஸ்சை விட மூன்று மணி நேரம் முன்கூட்டியே செல்லும் வந்தே பாரத் ரயில்.

* ஆந்திர 
தடுப்பணைகள் நிரம்பியது: கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு.

* இலவச சிகிச்சை அளிப்பதில் கேரளா மாநிலம் முன்னணி: கேரளாவுக்கு மத்திய அரசின் சார்பில் ஆரோக்கிய மந்தன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அந்த விருதை கேரள மாநிலம் வென்றுள்ளது.

* ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி :
19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

* ஆசிய விளையாட்டு 2023 : 
துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் பிரதாப் சிங் தோமர் வெண்கலம் வென்றார்.

Today's Headlines

*No new cases of Nipah virus in Kerala - Kozhikode is back to normal.

 *Vande Bharat train between Chennai and  Tirunelveli reaches it's destination three hours earlier than omni bus.

 *Andhra Pradesh
 Barrages full: Heavy rains cause flooding in Palaru.

 * Kerala state is leading in providing free treatment: Kerala has been receiving Arogya Manthan award by the central government.  Kerala state  won the award this year too.

 * Asian Games Women's Cricket Final:
 India won by 19 runs.

 * Asian Games 2023 :
 India's Pratap Singh Tomar won bronze in shooting.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, September 24, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.09.2023

  

ஆபிரகாம் லிங்கன்


திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :266

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

விளக்கம்:

தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.

பழமொழி :

Debt is the worst poverty

ஏழ்மை கடனினும் மேன்மை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

-பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயர்நாடி. தந்தை பெரியார் 

பொது அறிவு :

1. பழங்காலத்தில் “சேரன் தீவு” என அழைக்கப்பட்ட நாடு எது?

விடை: இலங்கை 

2. “ஜனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை: ஆப்ரகாம் லிங்கன் 

English words & meanings :

 gimmickry - a profusion of gimmicks. மந்திர தந்திரங்களை கையாளுதல்; grenade - கையெறி குண்டு

ஆரோக்ய வாழ்வு : 

கொண்டைக்கடலை:  ஃபைபர் மற்றும் இரும்பு சத்துக்கள் இதயத்தை தாண்டி ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். இதனால் இதய அபாயங்களை குறைப்பதில் கொண்டைக் கடலை முக்கிய பங்கு வகிக்கிறது.

நீதிக்கதை

 புத்திசாலி புலவரும் நெல்மணிகளும் 


அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.சில மாதங்களுக்கு பிறகு,அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார். புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, "நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே" என்று கூறினார்.

இது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்.மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், "உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்" என கூறினார்.

புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க

பலகை இருப்பதைப் பார்த்தார். "அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு

நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் நெல்மணிகளை இரட்டிப்பாகி தர வேண்டும் என்றார்.மன்னர் புலவரைப்பார்த்து, "நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்றவிலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?" என்று கேட்டார்.

புலவரோ "அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும்

போதும்" என்று கூறிவிட்டார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், "புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து

வாருங்கள்" என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.

1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.

20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.

விரைவில் நெல்மணிகளின்

எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம்

இழக்கும் நிலை ஏற்பட்டது.இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம்ஒப்படைத்தார்.


நீதி: கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

இன்றைய செய்திகள்

25.09.2023

*வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம் தமிழிசை சௌந்தர்ராஜன்.

*தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூபாய் 6 ஆயிரத்து 80 கோடி ஒதுக்கீடு - கவர்னர் ஆர். என்.ரவி பெருமிதம்.

*லேண்டர் ரோவர் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்.

*பொதுமக்கள் புகார் தெரிவிக்க 'ஊராட்சி மணி' திட்டம் விரைவில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

*2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சதம் அடித்து அசத்திய ஸ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில்.

*ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: இன்று 5 பதக்கங்களை வென்றது இந்தியா!
துப்பாக்கி சுடுதல்: ரமிதா 2 பதக்கங்கள். துடுப்பு படகு போட்டி: 3 பதக்கங்கள்.

Today's Headlines

*Vande Bharat train was a boon offering to Nellai said Tamilisai Soundarrajan.

 * Allotment of 6 thousand 80 crore rupees for Tamil Railway projects - Governor R.  N. Ravi .

 *Lander rover is likely to become operational- ISRO chief SOMNATH's information.

 *Chief Minister M.K.Stalin will soon start the 'Municipal Bell' program to report complaints.

 * Shreyas Iyer, Subman Gill who scored a super century in the 2nd ODI.

 *Asian Games 2023: India won 5 medals today!
 Shooting: Ramitha 2 medals.  Rowing competition: 3 medals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, September 21, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.09.2023

  

மைக்கேல் பாரடே


திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : தவம்

குறள் :265

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

விளக்கம்:

விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.


பழமொழி :

Death keeps no calendar

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி :

ஒவ்வொரு பெண்ணும்-தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கப்படி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால் எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். தந்தை பெரியார் 

பொது அறிவு :

1.:உலகின் மிக நீளமான நீர்வீழ்ச்சி எது?


விடை: ஏஞ்சல் நீர்வீழ்ச்சி 

2. உலகிலேயே மிக ஆழம் கூடிய நதி எது?

விடை: கொங்கோ நதி

English words & meanings :

 underestimate - estimate as less than the actual குறைத்து மதிப்பிடல்: declarant- a person who declares உறுதி கூறுபவர்

ஆரோக்ய வாழ்வு : 

கொண்டைக்கடலை : கொண்டைக் கடலையில் உள்ள மற்றொரு நன்மை என்னவெனில் உங்கள் இதயத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை இதை உட்கொள்வதன் மூலம் பெற முடியும். இது செலினியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி, ஃபைபர், இரும்பு ஆகிய சத்துக்களை கொண்டுள்ளதால் அது இதயத்திற்கு நன்மை பயக்கிறது.

செப்டம்பர் 22

மைக்கேல் பாரடே அவர்களின் பிறந்த நாள்


மைக்கேல் பரடே (Michael Faraday, செப்டெம்பர் 221791 – ஆகஸ்டு 251867)), பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல்மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவியாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே.

மைக்கேல் பரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.

நீதிக்கதை

 ஒரு சின்ன கிராமம், அங்க ஒரு அழகான குளம் இருந்தது. அந்த குளத்தில் நிறைய தவளைகள் வாழ்ந்து வந்தன. தவளைகள் அங்க இருக்க பூச்சி, கொசுக்கள் அப்படினு சாப்பிட்டு ஜாலியாக இருந்து வந்தன. அந்த கிராம மக்கள் குளத்திற்கு குளிக்க செல்வது வழக்கம்.அந்த குளத்தில் சிறுவர்கள் சென்றால் இந்த தவளை குட்டிகளை மீன் என நினைத்து விடுவார்கள். இதனால் தவளை கூட்டம் மனிதர்கள் நடமாடும் இடத்திற்கு அந்த பக்கமாகவே இருந்து வந்தன. சில நாட்களுக்கு பிறகு இந்த தவளை குட்டிகளை பிடிக்க சில சிறுவர்கள் குளத்திற்கு வந்தார்கள். அவர்கள் எவ்வளவு தேடியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பையன் மட்டும் தூரமாக இருந்த தவளை கூட்டத்தை பார்த்தான். ஏய் அங்க பாரு நிறைய தவளைகள் இருக்கு. இன்னொருவன் சொன்னான், அத வச்சி என்னடா பண்றது , நமக்கு மீன் குட்டி தான் வேண்டும் குளத்தில் கிடைக்குதான்னு பாரு என்றான். சிலர் குளத்தில் குளித்து கொண்டு விளையாடி கொண்டிருந்தார்கள்.அந்த ஒரு சிறுவனுக்கு மட்டும் அந்த தவளை கூட்டம் கண்ணை உறுத்தியது.குளத்தின் அருகில் இருந்து சில கற்களை எடுத்து அந்த தவளைகள் மீது வீச தொடங்கினான். இதை பார்த்த தவளைகள் பயந்து தண்ணீருக்குள் குதித்தன. அந்த சிறுவனுக்கு அது ஒரு விளையாட்டாக தெரிந்தது.

இதையே வேலையாக அவர்கள் வரும்போதெல்லாம் செய்தார்கள். தவளைகள் மிகவும் கலங்கி இருந்தன. ஒரு தவளை மட்டும் சரி இந்த முறை அவர்கள் கல்லால் அடித்தால் நாம் ஏதாவது செய்யலாம் என தன் கூட்டத்திடம் கூறியது. சிறுவர்கள் குளத்திற்கு குளிக்க வந்ததும் , தவளைகளை நோக்கி கல் எறிய ஆரம்பித்தனர். அருகில் இதை பார்த்து கொண்டிருந்த தவளை அவன் மேல் ஏறி குதித்தது. அந்த சிறுவன் பயந்து தண்ணீருக்குள் குதித்தான்.அந்த தவளை சொல்லியது உங்களை போலத்தான் நாங்களும் , இதையே தான் எங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு நீங்கள் பயப்பட வைக்கிறீர்கள். நாங்கள் இல்லையென்றால் இந்த குளத்தில் பூச்சிகள், கொசுக்கள் என நிரம்பி வழியும். அதை நாங்கள் சாப்பிடுவதால் உங்களுக்கு எந்த உபாதையும் வராமல் தடுக்க படுகின்றன. இந்த உலகம் நாம் அனைவரும் வாழ்வதற்குத்தான். இயற்கை ஒன்றோடு ஒன்று பிணைக்க பட்டுள்ளது என்றது. மன்னிப்பு கேட்டுக்கொண்ட சிறுவர்கள் பிறகு அப்படி செய்வதை நிறுத்தி கொண்டார்கள்.எனவே  யாரையும் வதைக்காமல் , நாமும் நம்மை வதைக்காமல் இந்த வாழ்க்கையை இயற்கையோடு ஒன்றி அதன் அழகை ரசித்து கொண்டே வாழலாம். ஒரு செயலை செய்வதற்கு முன் பல முறை யோசித்து செயல் படுங்கள். அதனால் யாரெல்லாம் பாதிக்கபடுவார்கள் என்பதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள்.

இன்றைய செய்திகள்

22.09.2023

*நிலவின் தென் துருவத்தில் ஆய்வு: லேண்டர், ரோவரை விழிக்கச் செய்யும் பணிகளை இஸ்ரோ தொடங்கியது.

*13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம். சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கியது மழை.

*நெல்லை- சென்னை: இடையே வந்தே பாரத் ரயில் சேவை- இன்று சோதனையோட்டம். விஜயவாடா - சென்னை: வரும் 24ம் தேதி முதல் புதிய வந்தே பாரத் ரயில்.

*மன அழுத்தத்தை போக்க குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் - கவர்னர் தமிழிசை.

*ஆசிய கோப்பை: சுனில் சேத்ரி அதிரடியால் இந்தியாவிற்கு முதல் வெற்றி.

*ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

*Exploration of Moon's South Pole: ISRO begins operations to wake up lander, rover.

  * Chance of heavy rain in 13 districts - Meteorological Department.  Rain lashed the suburbs of Chennai.

  * Nellie-Chennai: Vande Bharat train service between Nellie- Chennai - trial run today.  Vijayawada - Chennai: New Vande Bharat train from 24th.

  *Parents should spend more time with children to relieve stress - Governor Tamilisai.

  *Asia Cup: Sunil Chhetri strikes for India's first win.

  *Asian Games 2023: Indian women's cricket team advances to semi-finals
 Prepared by

Covai women ICT_போதிமரம்