Pages

Tuesday, November 30, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.12.21

திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்:அமைச்சியல்

அதிகாரம்: தூது

குறள் எண்:687
குறள்: கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.

பொருள்: தன் கடமை இன்னது எனத் தெளிவாக அறிந்து
அதை நிறைவேற்றும் இடத்தையும் காலத்தையும்
அறிந்து சிந்தித்து செயல்படுபவனே சிறந்த தூதன் ஆவான்.

பழமொழி :

Behind an able man, there is always another man.


ஒரு வித்தகனுக்கு பின்னால் ஓராயிரம் வித்தகர்கள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உழாத நிலமும், இறைக்காத கிணறும், உழைக்காத உடலும் கெடும் இத்தவறை செய்ய மாட்டேன். 

2. இரக்கமில்லாத மனமும், இயற்கை அழிக்கும் நாடும் கெடும். எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளம் ஒரு நாளும் அழிக்க மாட்டேன்.

பொன்மொழி :

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய
பலவீனம். ----சிம்மன்ஸ்


பொது அறிவு :

1. காவேரி நதி வங்காள விரிகுடாவில் எந்த இடத்தில் கலக்கிறது? 

பூம்புகார். 

2. உலகிலேயே அதிக ஆழத்தை கொண்ட நதி எது? 

கொங்கோ நதி.

English words & meanings :


set off-  to leave on a journey,  பயணம் புறப்படு. 

Set off - to make an alarm start ringing. அலாரம் வைத்தல்

ஆரோக்ய வாழ்வு :

கோவைக்காய் நார்ச்சத்து நிறைந்தது எனவே மலச்சிக்கல் வராமல் தடுக்கும். ஹார்மோன் சுரப்பை சீராக்கும். இதய படபடப்பை போக்கி மன அழுத்தம் தவிர்க்கும்.

கணினி யுகம் :

Ctrl+End - It is used to move the cursor to the last slide. For example, your PowerPoint file has 100 slides, and you want to move the cursor to the last slide, you can press 

Ctrl+End. Ctrl+Backspace - It will delete the word to the left of the cursor.

டிசம்பர் 01

உலக எய்ட்ஸ் நாள்




உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.


எயிட்சு மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் உலகளாவிய இந்த தினத்தின் நோக்கமாகும். எயிட்சு பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகளை மதிக்கவும் அவர்களின் உரிமைகளை மதிக்கவும் மக்களை பழக்குவதும் இதன் முக்கிய குறிக்கோளாகும். 'கல்வி மற்றும் விழிப்புணர்வு' மட்டுமே எயிட்சு தடுப்பிற்கான சிறந்த மற்றும் சரியான சமூக மருந்து என்பதை உணர்ந்து விழாக்கள், நாடகங்கள், நாட்டியங்கள் ஆகியவற்றில் எயிட்சு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு அம்சங்களை இடம் பெற செய்து மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளை பரப்ப செய்வதே இந்நாளின் நோக்கமாகும்.

இன்குலாப்  அவர்களின் நினைவுநாள்  

இன்குலாப் (Inkulab, பிறப்பு: 1944 - இறப்பு: திசம்பர் 12016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது இவர் எழுதிய காந்தள் நாட்கள் என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது.[1] ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.[2]

நீதிக்கதை

கிளியின் நட்பு

கதை :
வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தினான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது. 

அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை. 

அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது. அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல். அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது. 

கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது, அதற்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது. 

இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும். 

நீதி :
தனது நண்பர்களின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

01.12.21

★தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

★முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, 4-வது முறையாக 142 அடியை எட்டியதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

★இந்த ஆண்டு 80% அதிகமாக மழை பெய்துள்ளது; தமிழகம், புதுச்சேரியில் இனி மழை குறையும்: சென்னை வானிலை மையம் தகவல்.

★ஆயுர்வேதம் மற்றும் யோகா அடிப்படையிலான பாடத்திட்டத்தை பள்ளி கல்வியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் கூறியுள்ளார்.

★சிறுவர்களிடையே அதிகரிக்கும் உடல் பருமன் பிரச்சினை: தேசிய குடும்ப நல ஆய்வில் தகவல்.

★ஒமைக்ரான் வைரஸ் உலக அளவில் பெரும் அச்சறுத்தலாக மாறும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.

★ட்விட்டர் புதிய சிஇஓவின் வயது 37: உலகின் டாப் 500 நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளில் மிகவும் இளமையானவர்.

★தேசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார் பங்கஜ் அத்வானி.

★ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி கொரியா செல்கிறது.

Today's Headlines

* The Epidemic restrictions will continue till 15.12.2021 announced Tamil Nadu CM.

* After the verdict of the court, the Mullai Periyaar Dam reached its full capacity of 142 for the 4th time. The farmers feel happy.

* This year Tamil Nadu and Puducherry received 80% more rains. Hereafter there will be a slow down in the raining says Chennai Metrological Department.

* Ayurveda and Yoga based education will be added to the school curriculum says the central minister. 

* There is an increase in the obesity problem among school-going children says National Family Research Centre.

* Omicron virus will become a threat to the world. Says World Health Organisation.

* Age of the new Twitter CEO is 37. Among the top 500 organizations' CEO, he is the youngest.

* In the World Snooker Championship Pankaj Adwani entered into the second phase.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, November 29, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.11.21

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:அமைச்சியல்

அதிகாரம்:அமைச்சு

குறள் எண்:631
குறள்: கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

பொருள் :ஒரு செயலைச் செய்ய ஏற்ற கருவி,காலம்,
செயல்வகை,செலவின் அருமை ஆகியவற்றை
ஆராய்ந்து செய்பவனே அமைச்சன் ஆவான்.

பழமொழி :

As the fool thing so, the bell clicks.


பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

இரண்டொழுக்க பண்புகள் :

1. உழாத நிலமும், இறைக்காத கிணறும், உழைக்காத உடலும் கெடும் இத்தவறை செய்ய மாட்டேன். 

2. இரக்கமில்லாத மனமும், இயற்கை அழிக்கும் நாடும் கெடும். எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளம் ஒரு நாளும் அழிக்க மாட்டேன்.

பொன்மொழி :

எதிலும் அளவுகடந்த பற்றுக் கொள்வதே எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாகும்.இன்ப துன்பங்களைக் கடந்த நிலையில் மட்டுமே உண்மையான ஆனந்ததை உணர முடியும்.______ பரம ஹம்சர்

பொது அறிவு :

1. சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர் யார்? 

பெரியார் ஈ.வெ. ரா. 

2. இந்தியாவில் இரும்புபப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது? 

லக்னோ.

English words & meanings :

Altar - a high table that is the center of a religious ceremony, சமய வழிபாட்டு பீடம். 

Alter - make some changes in the original plan or plot, ஒரு திட்டம் அல்லது காரியத்தில் மாற்றங்களை செய்தல்

ஆரோக்ய வாழ்வு :

வெங்காயம் தொற்றுகள் உருவாக்கும் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும். தொண்டை வறட்சி, இருமல் தடுக்கும்

கணினி யுகம் :

Ctrl+Spacebar - It allows you to change the selected text to the default font size and type.

 Ctrl+Home - Its use is to move the cursor to the first slide. For example, if you have 50 slides in your file, and the cursor is on the 45th slide, by pressing Ctrl+Home, you can move the cursor to the first slide.

நவம்பர் 30

சர் ஜகதீஷ் சந்திர போஸ்  அவர்களின் பிறந்தநாள்... 





சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.

நீதிக்கதை

கழுதையின் தந்திரம்



கதை :
ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை. 

ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது. 

ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம், நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும் என வேண்டிக் கொண்டது. 

நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல் என உறுமியது ஓநாய். ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. 

காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கழுதை கூறிற்று. 

ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது. கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து, ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது. 

கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது. 

நீதி :
கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக செயல்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

30.11.21

★வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

★தமிழக அரசு, எஸ்சி- எஸ்டி மற்றும் கிறித்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கான படிப்பு உதவித் தொகைக்கு வருமான வரம்பை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

★புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.

★3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

★ஒமைக்ரான் அச்சம்; வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கிடுக்கிப்பிடி: மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு.

★ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

★இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் ஆக்சல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்.

★கான்பூர் டெஸ்ட்: போராடி டிரா செய்தது நியூசிலாந்து.


Today's Headlines

🌸 A magnitude of 3.6 Richter earthquakes was recorded in  Vellore and Tirupattur districts yesterday, according to the National Geological Research Centre. 

 🌸 The Government of Tamil Nadu has increased the income limit for scholarships for SC - ST and Adithravita students who have converted to  Christianity from Rs. 2.5 lakhs to Rs.  8 lakhs.

 🌸 New Depression: Chances of heavy rain for 2 more days in Tamil Nadu.

 🌸 The bill to repeal 3 agricultural laws was passed unanimously in the Rajya Sabha following the Lok Sabha.

 🌸 Omicron Fear; New strict restrictions were released for those who come from abroad by Federal Government.

 🌸 The World Health Organization has released 5 important pieces of information regarding the omega-3 virus.

 🌸 Danish player Axelsen wins the Indonesian Open badminton men's singles title.

 🌸 Kanpur Test: Struggling Draw by New Zealand.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, November 28, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.11.21

 திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்:வலி அறிதல்

குறள் எண்: 472

குறள்:
ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.

பொருள்:
ஒரு செயலில் ஈ.டுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.

பழமொழி :

Trust not to a broken staff


மண்குதிரையை நம்பி  ஆற்றில் இறங்காதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உழாத நிலமும், இறைக்காத கிணறும், உழைக்காத உடலும் கெடும் இத்தவறை செய்ய மாட்டேன். 

2. இரக்கமில்லாத மனமும், இயற்கை அழிக்கும் நாடும் கெடும். எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளம் ஒரு நாளும் அழிக்க மாட்டேன்.

பொன்மொழி :

எப்போதும் வலிமையானவர்கள்
சாதனையாளர்கள் ஆவது
கிடையாது.. தோல்வியிலும்
நம்பிக்கையை இழக்காதவர்களே
சாதனையாளர்கள்..!------

பொது அறிவு :

1.ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம் எது? 

மாலிக் அமிலம். 

2. மிகவும் குறைந்த எடையுள்ள எரியாத வாயு எது? 

நைட்ரஜன்.

English words & meanings :

Pair - the same type of two things worn together. ஜோடி, இணை.


 Pear - a type of fruit. பேரிக்காய்.

ஆரோக்ய வாழ்வு :

வெற்றிலை மறறும் மிளகு இரண்டையும் வாயில் போட்டு மென்றால் அது நார் சத்தாக மாறி உடலில் உள்ள நச்சையும் வெளியேற்றும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் சூடாக்கி மார்பு பகுதியில் போட்டால் சளியின் காரணமாக ஏற்பட்ட மூச்சு திணறல் குணமாகும்.




கணினி யுகம் :

Holding Shift During Boot up -- Boot safe mode or bypass system files.

நீதிக்கதை

கல்வியே அழியாத செல்வம்


கதை :
கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர். 

இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார். 

கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான். 

இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான். 

ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது. 

ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெரும்மையை உணர்த்தினார். 

நீதி :
கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம்.

இன்றைய செய்திகள்

29.11.21

◆சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும்: போக்குவரத்து ஆணையரகம் அறிவிப்பு.

◆ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் கடல் நீர் சாகச விளையாட்டு மையம் விரைவில் தொடங்கப்படஉள்ளது.

◆டெல்டாவில் தொடரும் கனமழை; தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 159 வீடுகள் சேதம்: ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

◆ஓமைக்ரான் அச்சம்: கரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளை தொடர்ந்து கண்காணியுங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.

◆இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் டிசம்பர் 6-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

◆ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் போலந்தை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்த இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேறியது.

◆ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணிக்கு 2-வது வெற்றி.


Today's Headlines

 🌸 Rs 5,000 reward will be awarded to the person who helps the people in road accidents  and admit them in hospital" announced by Transport Commission

 🌸 A seawater adventure sports center will soon be set up at the Prabhanvalasa beach area near Rameswaram.

 🌸Heavy rains continue in Delta;  159 houses damaged in Tanjore district in one day: Thousands of acres of paddy fields submerged

 🌸Omicron Fear: Continue Monitoring should be there in Corona Hotspot Areas: union government gives Warning to the States.

 🌸Russian President Vladimir Putin is scheduled to visit India on December 6 to attend a bilateral summit.

 🌸The Indian team advanced to the quarterfinals after defeating Poland in the Junior World Cup Hockey Tournament and enjoying their 2nd victory.

 🌸 Mohan Bagan team got the second victory in ISL football match
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Friday, November 26, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.11.21

 திருக்குறள் :

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி. 

பொருள் 

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்

பழமொழி :

Sadness and gladness succeed each other.


அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. சினம் எப்படி பட்ட உறவுகளையும் அழித்து விடும்.

2. ஆனால் பொறுமை பாறை போன்ற மனதை கூட இளக செய்து விடும். எனவே பொறுமை நம் வாழ்வில் முன்னேற மிகவும் அவசியம்

பொன்மொழி :

வெற்றியாளர்கள்
பரிசளிக்கப்பட்டவர்கள் அல்ல..
அவர்கள் கடினமான
உழைப்பால் வெற்றியை
பரிசாக பெற்றுக் கொண்டவர்கள்..!-----நீரஜ் சோப்ரா

பொது அறிவு :

1. இந்தியாவில் முதல் இரயில் பாதை போடப்பட்டு இணைக்கப்பட்ட நகரங்கள் எவை? 

மும்பை - தானே. 

2. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட் எது? 

PSLV- D2

English words & meanings :

Get on - having good relationships with others. மற்றவர்களோடு ஒத்து போதல். 

Make up - reconcile, சண்டைக்கு பிறகு சமாதானம் ஆகுதல்

ஆரோக்ய வாழ்வு :

விட்டமின் E - ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன் ஆகும். தோல் சுருங்காமல் பளபளப்பாக வைத்து இருக்க உதவும். இது முடிக்கு மிகவும் நன்மை பயக்க கூடியது. செல் வளர்சிக்கு உதவி புரிகிறது. காணப்படும் உணவுப் பொருட்கள் - உலர் பருப்புகள், கீரை, அவகடோ பழம், முட்டைகோஸ், புராக்கோலி, மிளகாய் தூள்.






கணினி யுகம் :

Windows Logo+F (Search for a file or a folder) 

NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)

நீதிக்கதை

அது காட்டை ஒட்டிய ஒரு கிராமம். இளைஞன் ஒருவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றான். அழகிய புள்ளிமான் அவனிடம் சிக்கிக் கொண்டது. மிரள மிரள விழித்து நின்ற அக்குட்டியை, அம்பு, வேலைப் பயன்படுத்தாமல், கைகளிலேயே தூக்கிவிட முடிந்தது.

அந்த மான் குட்டியின் அழகிலும், மருட்சியிலும் மயங்கிய அவன் அதனை வளர்க்க முடிவு செய்தான். வீட்டில் வளர்த்து வந்த அந்த மான் வளர்ப்புப் பிராணியாக செல்லமாக இருந்து வந்தது.

திடீரென ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. அது விலகி ஓட வாய்ப்பில்லை. காணாமல் போய்விட்டது அல்லது களவு போய்விட்டது.

இளைஞனுக்கோ ஆத்திரம். இந்த மானைக் களவாடியவர்களை எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உக்கிரமாக உருவெடுத்தது.

உடனே ‘கடவுளே எனக்கு தரிசனம் தா! என்று கடவுளைத் துதித்தான். கடவுளும் வந்தார்..!

“பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன?” என்று கடவுள் கேட்டார்.

அறிவாளி பக்தனாக இருந்தால், “நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்துச் சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு மீண்டும் கிடைக்க வேண்டும்” என்று கேட்டிருப்பான். ஆனால், அவன் கண்களைத்தான் கோபம் மறைத்து நிற்கிறதே!

“கடவுளே! நான் ஆசையாக வளர்த்த மானைக் காணவில்லை. அந்த மானைத் திருடியவன் யாராக இருப்பினும், அவனை என் முன்னே காட்டவேண்டும். அவனை என் ஆத்திரம் தீர அடித்துத் துவைக்க வேண்டும்” என்றான்.

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தருபவராக இருந்தாலும் கடவுள் பக்தனின் இந்தக் கோரிக்கைக்குத் தயங்கினார்.

“பக்தா.. உன் மானை திருப்பித் தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே. உனக்கு நல்லதல்ல!” என்றார்.

“இல்லை. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் கள்ளனைப் பழிவாங்காமல் விடமாட்டேன். நீங்கள் வரம் தாருங்கள், வருவதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வரத்தில் வறட்டுப் பிடிவாதம் காட்டினான் இளைஞன்.

“சரி நீ கேட்கும் வரத்தைத் தருகிறேன். உன் மானைத் திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்துக் கொள்…” வரத்தைத் தந்த கடவுள் மறைந்து விட்டார்.

பக்தன் ஆவேசமாகத் திரும்பினான். அங்கே உறுமலுடன் நின்று கொண்டிருந்தது ஒரு முரட்டு சிங்கம். அதன் கண்களில் பசி தெரிந்தது.

பழிவாங்கும் கோபம் நொடியில் மறைய, இளைஞனுக்கு பயம் பிடித்துக் கொண்டது. கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓடத் தொடங்கிய அவன், அலறினான். “கடவுளே, என்னைக் காப்பாத்து!”

அதுதான் அவனது கடைசி வார்த்தைகள்.

கடவுள் சிரித்தார்.
நீதி - ஆத்திரம், கோபம் அறிவின் கண்ணை அடைத்து அழிவை நோக்கி அழைத்து சென்று விடும்

இன்றைய செய்திகள்

27.11.21

★ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.2 கோடி செலவினத்தில், தாட்கோ மூலம் தொழில் மேலாண்மைப் பயிற்சி அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

★தொடர் கனமழை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

★கரோனா காலத்தில் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 6 முக்கிய ரயில் நிலையங்களில் ரூ.50 ஆகஉயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் மீண்டும் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

★டிசம்பர் 15-ம் தேதி முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து வழக்கமான முறையில் மீண்டும் தொடங்கும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

★உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்காவது நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா, இந்திய கடற் படையில் இணைக்கப்பட்டது.

★தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 எனும் புதிய வகை கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்த உலக சுகாதார அமைப்பின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

★உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சத்யன் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

★ஒடிசாவில் நடந்த உலக கோப்பை ஆடவர் ஜூனியர் ஹாக்கி சி பிரிவில் நடந்த போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெற்று சாதனை படைத்து இருக்கிறது.


Today's Headlines

 ★ The Government has announced to provide business management training through TADCO at a cost of Rs. 2 crores to encourage Adithravidar and tribal youth entrepreneurs.

 ★ Red Alert has been issued for the coastal districts of Tamil Nadu including Chennai due to continuous heavy rains.

 ★ During the Corona period, the platform fare which was increased by Rs.50 at 6 major railway stations including Chennai Central has been reduced again to Rs.10.

 ★ The Ministry of Civil Aviation has announced that international flights will resume as usual from December 15.

 ★ The fourth domestically-built submarine, INS Vela, was attached to the Indian Navy.

 ★ A special meeting of the World Health Organization (WHO) was held yesterday to discuss in detail the discovery of a new type of coronavirus called B1.1.529 in South Africa.

 ★ Indian Sathyan advanced to the 3rd round of the World Table Tennis Championships.

 ★ Spain wins World Cup Men's Junior Hockey C in Odisha. 
 Prepared by

Covai women ICT_போதிமரம்